நக்சல் பகுதி குழந்தைகளுடன் பொழுதுபோக்கும் முதல்வர்

Added : ஜூன் 12, 2016 | கருத்துகள் (9)
Advertisement
 நக்சல் பகுதி குழந்தைகளுடன் பொழுதுபோக்கும் முதல்வர்

ராய்ப்பூர்:சத்தீஸ்கரில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளை சேர்ந்த குழந்தைகள், முதல்வர் ரமண் சிங்குடன் இரண்டு நாட்கள் தங்கியிருக்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில், பா.ஜ.,வை சேர்ந்த ரமண் சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில் உள்ள கொண்டகான் பகுதி, நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த, 100 குழந்தைகள், முதல்வர் ரமன் சிங்குடன், இரு நாட்கள் தங்கியிருக்க, அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இரு நாட்களும், அக்குழந்தைகளின் தனிப்பட்ட ஆலோசகராக, ரமண் சிங் செயல்படுவார் எனக் கூறப்படுகிறது. வி.ஐ.பி.,க்களுக்கும், சாதாரண பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை அகற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முதல்வருடன் இரண்டு நாளை கழிக்க உள்ள குழந்தைகள், 6, 7, 8ம் வகுப்புகளில் படிக்கின்றனர். இவர்களில், இரு பள்ளிகளை சேர்ந்த மாணவியர், அறிவியல் நகரம் மற்றும் பிளானடோரியம் ஆகியவற்றுக்கும், ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர் ஆகிய வற்றுக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது.
ரமண் சிங்குடன் பொழுதை கழிக்க சென்றுள்ள குழந்தைகளில், 17 பேர், தாய், தந்தையை இழந்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர், முதல் முறையாக, தம் சொந்த கிராமங்களை விட்டு, நகரத்துக்கு சென்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.VENKATESH - CHENNAI,இந்தியா
13-ஜூன்-201620:47:09 IST Report Abuse
S.VENKATESH சரியான அணுகுமுறை. அடுத்த தலைமுறையின் வாழ்வு செம்மைபடுத்தப்படும்..
Rate this:
Share this comment
Cancel
Parameswaran Radhakrishnan - Karaikudi,இந்தியா
13-ஜூன்-201616:47:25 IST Report Abuse
Parameswaran Radhakrishnan வரவேற்கப்பட வேண்டிய ஒன்று
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஜூன்-201611:42:47 IST Report Abuse
Lion Drsekar வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, உண்மைச் சம்பவம், சமீபத்தில் வெளிநாட்டிற்க்குச் சென்ற ஒரு ஆன்மீக ஆசான் திருடர்களின் பிள்ளைகளிடம் திருட்டு என்பது பாவம் என்று அந்த பள்ளி மாணவர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார் மறுநாள் பெற்றோர்கள் அதாவது திருடர்கள் அந்த ஆசானை உடனடியாக நாடு கடத்தவேண்டும் இல்லையென்றால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி நாட்டை விட்டே திருத்திவிட்டார்கள், இதை நானே கண்கூடாகக் கண்டேன், இன்று நிலை அப்படி இருக்கிறது, இவர் முதல்வர் ஆதனால் இவரை பெற்றோர்கள் ஒன்றும் செய்யமுடியாது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X