285 லட்சம் டன் யூரியா உற்பத்தி ; எங்களின் சாதனை என்கிறார் கட்காரி| Dinamalar

285 லட்சம் டன் யூரியா உற்பத்தி ; எங்களின் சாதனை என்கிறார் கட்காரி

Added : ஜூன் 13, 2016 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
285 லட்சம் டன் யூரியா உற்பத்தி ,எங்களின் சாதனை என்கிறார் கட்காரி

புதுடில்லி: இது வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 285 லட்சம் டன் யூரியா உரம் உற்பத்தி செய்துள்ளது எங்களின் சாதனை என்கிறார் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி.

அவர் இன்று நிருபர்களிடம் பேசுகையில் ; தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.


கிராமப்புறங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். வரலாற்றில் இல்லாத அளவிற்கு முன் முதலாக இந்தியாவில் 285 லட்சம் டன் யூரியா உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2 கோடி ஹெக்டேர் நிலம் விவசாய வசதி பெறும் அளவிற்கு நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம். எங்களின் கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளதை நடந்து வரும் பொருளாதார முன்னேற்றம் மூலம் உணர முடியும் .


இதற்கிடையில் பா.ஜ., தீர்மானத்தில் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு வெற்றி நோக்கி நகர்ந்துள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் நாடாக திகழ்கிறது என்றும் பாராட்டியுள்ளது .

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
14-ஜூன்-201612:37:00 IST Report Abuse
Narayan பல வருடங்களாக பெரும்பாலான மானிய யூரியா தொழிற்சாலைகளுக்கு கடத்தப்பட்டது, விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை. இப்போது வேம்பு தடவிய யூரியா தொழிற்சாலைகளுக்கு பயனில்லை, 100% விவசாயிகளுக்கு சென்று அடைகிறது. உற்பத்தி முன்னேற்றத்தை விட இது பெரிய சாதனை ஆகும். பல வருடங்களாக காங்கிரஸ் சார்ந்த இண்டஸ்ட்ரி லாபி இதை தடுத்து வந்தன என்பது குறிப்படத்தக்கது. வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூன்-201610:04:31 IST Report Abuse
sunil உரத்தை உற்பத்தி செய்வதில் என்ன சாதனை இருக்கிறது, அந்த உரத்தை வைத்து எத்தனை உணவு பொருட்கள் உற்பத்தி செய்தீர்கள் என்பதுதான் சாதனையாக இருக்க முடியும்.
Rate this:
Share this comment
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201602:29:21 IST Report Abuse
Neelaaநீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஒன்றுமே சாதனை இல்லை.... இப்படியும் விதண்டாவாதம் செய்யலாமே? 1. இந்தப்பள்ளியில் 100% வெற்றி என்பதில் என்ன சாதனை இருக்கிறது? அதில் படித்தவர்கள் உருப்படியாக என்ன சாதித்தார்கள் என்பது தான் பள்ளியின் சாதனை... 2. பால் பண்ணை வைத்திருப்போரிடம் அரசு நல்ல விலையில் பால் கொள்முதல் செய்தது என்பதில் என்ன சாதனை? அந்த பாலை வைத்து எவ்வளவு பேர் வெண்ணை கடைந்தார்கள், எவ்வளவு பேர் நெய் குடித்தார்கள் என்பது தான் சாதனை... 3. காகித உற்பத்தி பெருகியது என்பதில் என்ன சாதனை? அதில் எழுதிய எல்லா மக்களின் கையெழுத்தும் அழகாக இருந்தது தான் சாதனை.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.....
Rate this:
Share this comment
Cancel
Nagar Iyer - mumbai,இந்தியா
13-ஜூன்-201621:23:57 IST Report Abuse
Nagar Iyer யூரியா, POSPHATE போன்ற ரசாயனங்கள் நிலத்தை மலடாக்கி விவசாயிகளை கடனாளி ஆக்கிவிடும். இதை கடகரி அவர்களும் நன்று அறிவார். அப்படி இருக்கும் பட்சத்தில் யூரியா பெரிய அளவில் உற்பத்தி செய்வதால் யாருக்கு லாபம்?
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
14-ஜூன்-201601:12:06 IST Report Abuse
yaaroஅட இன்னாடா இது ...யோவ் , நாம உற்பத்தி குறைவா இருக்கிறதால தான் , பற்றாக்குறைக்கு அடிதடி நடந்து , அந்நிய செலாவணி வேஸ்ட் பண்ணி யூரியா இறக்குமதி வேற செய்யறோம் ...எதோ இந்த அரசு முனைப்போட , யூரியா கருப்பு சந்தைக்கு போகாம அதில வேம்பு தடவி , அப்புறம் உற்பத்தி அதிகரித்து , பற்றாக்குறைய குரைத்தா ....அதிலயும் ஏதானும் நொள்ள நோட்ட சொல்லிட்டு .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X