மதுவிலக்கு லேடி... மாமூலில் கில்லாடி!| Dinamalar

மதுவிலக்கு லேடி... மாமூலில் கில்லாடி!

Added : ஜூன் 13, 2016
Share
களை கட்டியிருந்தது, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை. அதிகாலையிலேயே ஆஜரான சித்ராவும் மித்ராவும் காய்கறிகளை நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.''காய்கறிக எல்லாம் என்னா விலைக்கு விக்குது...'' வெண்டை நுனியை ஒடித்துப் பார்த்தபடி புலம்பினாள் சித்ரா.''பேசாம ஆர்கானிக் காய்கறிக்கு மாறிடலாமான்னு தோணுதுக்கா. ஆஸ்பத்திரி செலவாவது மிச்சமாகும்'' என்றாள் மித்ரா.''ஆஸ்பத்திரின்னு
மதுவிலக்கு லேடி... மாமூலில் கில்லாடி!

களை கட்டியிருந்தது, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை. அதிகாலையிலேயே ஆஜரான சித்ராவும் மித்ராவும் காய்கறிகளை நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
''காய்கறிக எல்லாம் என்னா விலைக்கு விக்குது...'' வெண்டை நுனியை ஒடித்துப் பார்த்தபடி புலம்பினாள் சித்ரா.
''பேசாம ஆர்கானிக் காய்கறிக்கு மாறிடலாமான்னு தோணுதுக்கா. ஆஸ்பத்திரி செலவாவது மிச்சமாகும்'' என்றாள் மித்ரா.
''ஆஸ்பத்திரின்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது... பக்கத்துல வா, நம்ம ஜி.எச்.சுல...'' என்று, பேசத்தொடங்கினாள் சித்ரா.
''ஜி.எச்., புது கட்டடத்தோட மேல் தளங்கள்ல ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, கொலை குற்றவாளி ஒருத்தன் அவன் கூட்டாளியோட, ஒரு வாரத்துக்கு மேலே ஜாலியா தங்கி, போலீசுக்கே தண்ணி காட்டியிருக்கான். இத பத்தி டாக்டர்கள்ட்ட விசாரணை நடக்குதாம். கட்டடத்துல, 'இரவு காட்சி'களின் எண்ணிக்கையும் அதிகமாகிட்டே இருக்காம். ஊழியர்கள் சிலருக்கும் இதுல தொடர்பு இருக்குனு பேசிக்கிறாங்க,'' என்ற சித்ரா, பேச்சைத் தொடர்ந்தாள்.
''கஞ்சா விக்குறவன், பிக்பாக்கெட் அடிக்கிறவன்னு, பல குற்றவாளிகளுக்கும் இந்த கட்டடம் புகலிடமாக மாறிட்டிருக்காம். இத்தனை விஷயங்கள் தெரிஞ்சிருந்தும், ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்புல எந்த நடவடிக்கையும் எடுத்ததா தெரியல மித்து...'' என்றாள்.
''சிட்டிக்கு நடுவுல இருக்குற அரசு மருத்துவமனைக்கே இந்த கதின்னா, மத்த இடங்களுக்கு என்ன நிலைமையோ...'' என்றாள் மித்ரா.
''சுகாதாரத் துறையப் பத்தி இன்னொரு மேட்டரு எங்கிட்ட இருக்கே...'' என, பீடிகை போட்டாள் மித்ரா.
''அங்க என்ன நடந்துச்சாம்? சீக்கிரமா சொல்லு. சஸ்பென்ஸ் தாங்கலை...'' என்றாள் சித்ரா.
''நம்ம ஊரு சுகாதாரத் துறை ஆபிசரு ஒருத்தரு, கவர்மென்ட் கான்ட்ராக்ட் ஊழியர் ஒருத்தரை, தன்னோட வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லிருக்காரு. அவரு வீட்டு லேடீஸ் சேலை எல்லாத்தையும் துவைக்க சொல்லியிருக்கிறாரு. இதை யாரோ ஒரு மவராசன், மொபைல்ல வீடியோ எடுத்து 'சுத்த'வுட்டுட்டான்.
இதத்தெரிஞ்ச ஆபிசரு, அடுத்து என்ன நடக்குமோ, ஏது நடக்குமோன்னு கையை பிசைஞ்சுக்கிட்டு இருக்காரு...,'' என்ற மித்ரா, தன்னை கடந்துச்சென்ற பக்கத்து வீட்டுப் பெண்மணியைப் பார்த்து, ''என்ன ரீனா... சாரி, உன்னோட பர்த்டே பார்ட்டிக்கு என்னால வர முடியல; நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்...,'' எனக் கூறிவிட்டு திரும்பியவள் மீண்டும் பேச்சைத் துவக்கினாள்.
''பாரஸ்ட் ஆபீசர்ஸ் ரொம்ப கோவத்துல இருக்காங்களாம்...,''.
''வழக்கமா அவங்க மேல, மத்தவங்கதான் கோவப்படுவாங்க. இப்ப என்ன ஆச்சு?'' என்றாள் சித்ரா.
''காட்டுக்குள்ளாற இருக்குற பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யப் போறோம்னு, போன வாரம் ஒரு குரூப் கிளம்புச்சு. இதை சில ஆபீசர்ஸ் தடுத்திருக்காங்க. ஒரு கட்டத்துல ரெண்டு சைடுலயும் வாக்குவாதம் நடந்திருக்கு...'' என முடிப்பதற்குள்...
''சுத்தம் செய்யறது நல்லதுதானே,'' இடைமறித்தாள் சித்ரா.
''அதெல்லாம் கரெக்ட் தான். ஆனா, அங்க போன நேரம் தான் தப்புங்குறாங்க அதிகாரிங்க. 'நாங்க தான் குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதி தரோம்ல, அப்ப நீங்க இத செய்ய வேண்டியது தானே. அப்ப விட்டுட்டு இப்ப பர்மிஷனும் வாங்காம வந்து சுத்தம் செய்யறேன்னா எப்படி?' ன்னு கேட்ருக்காங்க. கடைசியா ஒரு குறிப்பிட்ட இடத்துல மட்டும் சுத்தம் செஞ்சுக்கோங்கன்னு பர்மிஷன் கொடுத்ததுக்கப்புறம், பிரச்னை முடிவுக்கு வந்துருக்கு,'' என்றாள் மித்ரா.
''அதிகாரிங்க இவ்வளவு ஸ்ட்ரிக்டா இருக்க என்ன காரணமாம்?'' என, ஏதும் அறியாதவளாய் கேட்டாள் சித்ரா.
''அக்கா... காரணம் இல்லாமலா? போன வருஷம் இப்படி தான் சுத்தம் செய்யுறேன்னு காட்டுக்கு போன சில பேர, செந்நாய் கூட்டம் துரத்திருச்சு. தப்பிச்சது பெரிய விஷயமாம். இதைக் கேள்விப்பட்ட மேல் அதிகாரிங்க, யாரை கேட்டு அனுமதி குடுத்தீங்கன்னு, பிடி பிடின்னு பிடிச்சுட்டாங்களாம்...'' என்றாள் மித்ரா.
''சரி மித்து, என்கிட்ட நம்மூர் யுனிவர்சிட்டி விவகாரம் ஒண்ணு இருக்கு சொல்லவா?'' என்றாள் சித்ரா.
''யுனிவர்சிட்டி மேட்டர் கேட்டு ரொம்ப நாளாச்சு. புது 'வி.சி.,' எப்படிக்கா?'' என்றாள் மித்து.
''அவரப் பத்திதான் மேட்டரே. வி.சி.,க்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் சங்கங்களுக்கும் இடையில, காலிப்பணியிடங்களை நிரப்புர விவகாரத்துல உரசல் ஆரம்பிச்சிருக்காம். அங்க ஏற்கனவே, போஸ்ட்டிங் போட்ட பலருக்கு வேலையே இல்லையாம். இதுல புதுசா, 65 ஆசிரியர்களை நியமனம் பண்ண வி.சி., பிளான் பண்ணியிருக்காருன்னு' புகார் கிளம்பியிருக்கு.
''இதை ஆசிரியர்கள் சங்கம் மறைமுகமா, எதிர்த்திருக்காங்க. ஆசிரியர் அல்லாத பணியாளர் காலிப்பணியிடங்கள, இப்ப இருக்கற தற்காலிக ஊழியர்கள வச்சே நிரப்பணுங்கறதுதான் சங்கத்தோட கோரிக்கையாம். ஆனா, வெளியாட்களை வச்சு காலியிடங்களை நிரப்ப 'மூவ்' பண்ணினது தெரிஞ்சுதான் உரசலாம்...'' என்று அர்த்தமாக சிரித்தாள் சித்ரா.
இருவரும் பேசியபடியே உழவர் சந்தை முகப்புக்கு வந்ததும், இரண்டு இளநீரை வெட்ட சொல்லி விட்டு காத்திருக்க, 'சர்ர்'ரென பறந்து சென்றது ஒரு போலீஸ் ஜீப்.
இதைக்கண்ட மித்ரா, ''அக்கா, ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன்...'' என, இழுக்க, ''சொல்லு...சொல்லு...'' என, ஆர்வம் பொங்க கேட்டாள் சித்ரா.
''சிட்டியில இருக்குற மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காட்டுல மாமூல் மழை கொட்டுதாம்கா. 'அம்மா' பேரோட பாதிய, தன் பேர்ல வச்சிருக்கிற லேடி ஆபீசரும், 'இன்ஸ்'சும், சரக்கு 'பார்'கள்ல மாசமானா 'செம கலெக்ஷன்' அள்றாங்களாம். சரக்கு விற்பனையை பொறுத்து, 'பார்'க்கு 'ரேட்' பிக்ஸ் பண்ணி, பின்னி எடுக்குறாங்களாம். லேடிக்கு மாசம் மூன்றரை லகரமாம். 'இன்ஸ்'சுக்கு ஒன்றரையாம்...''
''அதுமட்டுமா? ஆபீசரம்மாவோட குடும்பச் செலவையும் போலீஸ்காரங்க தலையில கட்டிட்டாங்களாம். 'இன்ஸ்' கொடுக்கற வீட்டுச் செலவு 'பில்'லையும், போலீஸ்காரங்கதான் செட்டில் பண்ணணுமாம்...'' என்றாள் மித்து.
''என்னடி மித்து சொல்ற. மதுவிலக்கு பிரிவுல மாமூல் வசூல அமல்படுத்துன விஷயத்த... உளவுப் போலீசு இன்னமும், 'அமல்' அய்யாவுக்கு சொல்லாமலா இருப்பாங்க; ஆச்சரியமா இருக்கே...' என்ற சித்ரா, ''கார்ப்பரேஷன் சமாச்சாரம் சொல்றேன் கேளு...'' என, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்.
''சட்டசபைத் தேர்தல்ல நிற்க சான்ஸ் கிடைக்காதவங்க, மேயர் தேர்தலை குறி வச்சு காய் நகர்த்துறாங்க. அதே மாதிரி, ஒவ்வொரு வார்டுலயும், கவுன்சிலர் சீட் கேட்டு, அ.தி.மு.க., - தி.மு.க.,வுல மல்லுக்கட்டே நடக்குது,'' என்றாள்.
பதிலுக்கு மித்ரா, ''அக்கா, இத கேள்விப்பட்டியா? கார்ப்பரேஷன், 36வது வார்டு, காளப்பட்டி பூங்கா நகர் பகுதியில, 20க்கும் மேற்பட்ட 'யுஜிடி' கனெக்ஷனும், வாட்டர் கனெக்ஷனும் இல்லீகலா கொடுத்திருக்காங்க. வார்டு கவுன்சிலர் ஆதரவு ஒப்பந்ததாரர், அந்த வேலையைச் செஞ்சிருக்காரு. கனெக்ஷனுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வசூல் நடந்திருக்காம். அதிகாரிகளுக்கு தெரிஞ்சேதான் இது நடந்திருக்குன்னு புகார் கிளம்பியிருக்காம்...,'' என்றாள்.
'நீ வேற மித்து. இல்லீகலா கலெக்ஷன் பண்ணுறது ஒருபக்கம் இருக்கட்டும். கார்ப்பரேஷன் செஞ்ச வேலையை காட்டி கலெக்ஷன் பண்ணுறது இன்னொரு பக்கம் நடக்குதாம்'' என்ற சித்ரா...
''37வது வார்டுல, அண்ணா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இருக்கு. அங்க, ரோடு வசதி இல்லை. அ.தி.மு.க.,வுல இருந்து நீக்கப்பட்ட பிரமுகர் ஒருத்தரு, 'நிறுவனங்கள் பங்களிப்பு கொடுத்தா, ரோடு போட்டு தர்றோம்னு சொல்லி... ஒவ்வொரு நிறுவனத்துகிட்டயும் பேச்சு நடத்தி, நாலு லட்சம் வரை வசூல் பண்ணியிருக்காரு...''
''கவுன்சிலர் சொன்னமாதிரியே ரோடும் போடுறாங்க. ஆனா, கார்ப்பரேஷன்ல மதிப்பீடு தயாரிச்சு, டெண்டர் விட்டு, 30 லட்சம் ரூபாயில ரோடு போடுறாங்க. கார்ப்பரேஷன்ல போடுற ரோட்டை கணக்கு காட்டி, அந்த பிரமுகரு வசூல் பண்ணீட்டாருங்கற விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததால, பணம் கொடுத்தவங்க, அந்த ஆள தேடிட்டு இருக்காங்களாம்...'' என்றாள்.
''அடப்பாவிங்களா...' என்று மித்ரா அங்கலாய்க்க, ''டைம் ஆச்சு... வண்டியில ஏறு,'' என்று கூறி ஸ்கூட்டரை கிளப்பினாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X