பாடாய்படுத்துகிறது பதவி ஆசை!

Added : ஜூன் 13, 2016
Share
Advertisement
சித்ராவும், மித்ராவும் ஹாலில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தனர்.அரசியல் செய்திகளை படித்தபடி, பேச்சை துவக்கிய சித்ரா, "கேபிள் வாரிய தலைவர் பதவியை கைப்பத்துறதுக்கு குறி வச்சு வேலை செஞ்சிட்டு இருக்காங்க, மித்து...'' என்றாள்."என்னக்கா? அரசு கேபிள் "டிவி' வாரியத்தை சொல்றீங்களா?'' என, கேட்டபடி, டீ தயாரிக்க எழுந்து சென்றாள் மித்ரா."அரசு கேபிள்
பாடாய்படுத்துகிறது பதவி ஆசை!

சித்ராவும், மித்ராவும் ஹாலில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தனர்.
அரசியல் செய்திகளை படித்தபடி, பேச்சை துவக்கிய சித்ரா, "கேபிள் வாரிய தலைவர் பதவியை கைப்பத்துறதுக்கு குறி வச்சு வேலை செஞ்சிட்டு இருக்காங்க, மித்து...'' என்றாள்.
"என்னக்கா? அரசு கேபிள் "டிவி' வாரியத்தை சொல்றீங்களா?'' என, கேட்டபடி, டீ தயாரிக்க எழுந்து சென்றாள் மித்ரா.
"அரசு கேபிள் "டிவி' வாரிய தலைவரான ராதாகிருஷ்ணன், அமைச்சராகிட்டாரே? அந்த பதவி காலியாகும் சூழல் ஏற்பட்டிருக்கு. எப்படியாவது, அந்த பதவியை கைப்பத்தணும்னு, ஆளுங்கட்சிக்காரங்க முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. அதே மாதிரி, கட்சி பதவியை கைப்பத்துறதுக்கும், "மாஜி' ஒருத்தர் பலவிதங்களில் முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்காரு,'' என்றாள் சித்ரா.
"உள்ளாட்சி தேர்தல் நடக்கப் போகுதே; அதைப்பத்தி தகவல் இருக்கா?'' என, கேட்டாள் மித்ரா.
"சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்காளர் பட்டியலை வைத்தே, உள்ளாட்சி தேர்தலை நடத்த, அதிகாரிகள் முடிவு செஞ்சுட்டாங்க. அதனால, "எலக்ஷன் செக்ஷன்'ல வேலை ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு. ஆனா, ஆளுங்கட்சிக்காரங்க ரொம்பவே "அப்செட்'டுல இருக்காங்க,'' என, சித்ரா முடிப்பதற்குள், ""ஏன்? என்னாச்சு, அவுங்களுக்கு என்ன குறைச்சல்,'' என, ஆவேசப்பட்டாள் மித்ரா.
"அஞ்சு வருஷமா, மக்களை பாடாய்படுத்துனாங்களே... குடிநீர் கனெக்ஷனுக்கு காசு; சொத்து வரி விதிக்கணுமா... காசு என, எதுக்கெடுத்தாலும், "கப்பம்' வசூலிச்சாங்களே, இப்ப, எப்படி ஓட்டு கேட்டு போவாங்க. அப்புறம், வீதியெல்லாம் குப்பை பரவிக்கெடக்கு; வீதி விளக்குகளும் ஒழுங்கா எரியறதில்லை. இதெல்லாம், உள்ளாட்சி தேர்தல்லதானே எதிரொலிக்கும். வார்டுக்குள் அஞ்சாயிரம் ஓட்டு இருந்தாலும், ஐநூறு வாங்குறவரு, கவுன்சிலரா ஜெயிச்சிடுவாரே. அதனால, பலரும் பகீரத முயற்சி செஞ்சு, வார்டுக்குள் வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க,'' என்றாள் சித்ரா,
"எம்.எல்.ஏ., ஆபீஸ் ஜரூரா தயாராகுதாமே,'' என, மித்ரா கேட்க, ""ஆமாம்ப்பா, கடந்த முறை தெற்கு தொகுதி, கூட்டணி கட்சியான மா.கம்யூ., வசம் இருந்துச்சு. ஆபீஸ் கட்டியும், சாவி கொடுக்குறதுக்கு கூட, அவரை பாடாய்படுத்துனாங்க. இப்ப, ஆளுங்கட்சிக்காரங்க ஜெயிச்சிருக்கிறதுனால, ஆபீசை பக்கவா "ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. கழிவு நீர் குட்டையை மூடுறதுக்கு மட்டும், பல "லட்சத்தை' கொட்டுறாங்க,'' என்றாள் சித்ரா.
"அதெல்லாம் சரி, போலி ஆவணம் காட்டி, "சிம் கார்டு' வாங்குனாங்கன்னு, மாவோயிஸ்ட்டுகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துனாங்களே, அதுல ஏதோ சிக்கல்னு கேள்விப்பட்டேனே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
"எந்தவொரு விஷயமும் ஒனக்குத் தெரியாம இருக்குமா? என்றவாறு,
"சிம் கார்டு' வழக்கில் "தலைமறைவாக இருந்தவர்கள்' என, பதிவு செஞ்சு, மாவோயிஸ்ட்டுகளை கோர்ட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். வழக்கு விவரத்தை படித்துப்பார்த்த நீதிபதி, "ஏற்கனவே சிறையில் இருப்பவர்களை, தலைமறைவாக இருந்தவர்களாக எப்படி பதிவு செஞ்சீங்க' என, கேள்வி எழுப்பியிருக்கிறார். தலையை சொறிந்த போலீசார், கோர்ட் வளாகத்திலேயே ஆவணங்களை திருத்தி, சமர்ப்பித்து, "ரிமாண்ட்' வாங்கியிருக்காங்க,'' என்ற சித்ரா, ""சிலை கடத்துன வழக்கை தள்ளி விட்டுட்டாங்களாமே,'' என, கேட்டாள்.
"ஆமாக்கா, காங்கயம் படியூர் அருகே, காரில் வந்த சிலை திருட்டு கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் சுற்றி வளைச்சிருங்காங்க. அங்கு வந்த காங்கயம் போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்த தயக்கம் காட்டியிருக்காங்க. காரில் கொண்டு வந்த சிலையை, சென்னிமலையில் ரகசிய இடத்துல, பதுக்கி வச்சிருந்திருக்காங்க. அதனால, சென்னிமலை போலீஸ் விசாரிக்கட்டும்னு, தள்ளி விட்டுட்டு நிம்மதியாகிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
"அது ஓகே, பம்பரம் கட்சிக்காரங்க, "தாய்' வீட்டுக்கு போகப்போறாங்களாமே,'' என சித்ரா கேட்டதற்கு, ""ஆமாக்கா, அப்படித்தான் பேசிக்கிறாங்க. ஏற்கனவே மண்ணை கவ்வியாச்சு; இனியும் கூட்டணியில் தொடர்ந்தால், சொத்தை இழக்கறதை தவிர வேற வழியில்ல. எப்படியாவது, உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவியையாவது கைப்பத்தணும்னு, கட்சி நிர்வாகிகளுக்கு ஆசை. அதனால, கட்சி தாவுறதுக்கு
ரெடியா இருக்காங்க. திடீருன்னு "எஸ்கேப்' ஆகிடுவாங்கன்னு சொல்றாங்க,'' என்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X