சென்னை: ''இந்தியை எதிர்த்து, கிளம்பிய கிளர்ச்சியை போல, சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி, தமிழகத்தில் உருவாகுவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா இல்ல திருமண விழாவில், கருணாநிதி பேசியதாவது:மீண்டும் தமிழகத்தில், சமஸ்கிருதம் தலைதுாக்குமா, வடமொழி நம் மீது
படையெடுக்குமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.
துாய தமிழ் மொழிக்கு தான் செல்வாக்கு, துாயத் தமிழ் மொழி தான் நம் வாழ்க்கையிலேஇருக்க வேண்டும். வடமொழி, ஆளுங்கட்சி மூலமாக அல்லது ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு, ஆசியோடு நுழைவதற்கு இடம், நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, வடமொழியை திணிக்க விரும்புகிற மக்கள், தங்களை பாதுகாத்து கொள்ள, தங்களுடைய மொழியைப் பரப்ப விரும்புகின்ற, இந்த அநியாயத்தை இப்போதே நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இல்லாவிட்டால், வடமொழியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து,
ஒரு பெரும் கிளர்ச்சி, எப்படி கட்டாய இந்தியை எதிர்த்து, தமிழகத்தில்
உருவாயிற்றோ, அதைப் போல வடமொழி சமஸ்கிருதத்தை எதிர்த்து, ஒரு கிளர்ச்சி, தமிழகத்தில் உருவாவதற்கு யாரும்
காரணமாகி விடக்கூடாது.
தமிழகத்தில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும், அதை ஓட, ஓட விரட்டுவோம் என்ற அந்த உறுதியை, இந்த மண விழாவிலே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (287)
Reply
Reply
Reply