சம்பவம் செய்தி

தமிழ்நாடு

7 பேரை மணந்து மோசடி சிக்கினார் "பலே பெண்'

Added : ஜூன் 14, 2016
Advertisement


திருப்பூர்: பெண் தேடும் வாலிபர்களை, திருமணம் செய்து, நகைகளுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.தாராபுரம், கோனப்பன் சோலையை சேர்ந்தவர் செல்வக்குமார், 32; விவசாயி. இவருக்கு, 2015, அக்., மாதம், பழநி போதுப்பட்டியை சேர்ந்த பவித்ரா என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த மாதம், 27ல், 15 பவுன் நகையுடன், பவித்ரா காணாமல் போனார். செல்வக்குமார் தாராபுரம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில், பவித்ராவின் உண்மையான பெயர் மாரியம்மாள் என்பதும், அவரது முதல் கணவர் பெயர் கர்ணன் என்பதும் தெரியவந்தது. அவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இதற்கிடையே, திருமண தரகர்கள் உதவியுடன், மாரியம்மாள் பல்வேறு பெயர்களில், தன் முதல் திருமணம் மற்றும் குடும்பத்தை மறைத்து, இதற்கு முன், ஆறு பேரை மணந்துள்ளார் என்பது தெரிந்தது. பல இடங்களில் பெண் தேடி நீண்ட நாள் திருமணமாகாமல் உள்ள நபர்களை தேடிப்பிடித்து, அவர்களை திருமணம் செய்து கொண்டு, சில நாள் குடும்பம் நடத்தி விட்டு, நகைகளை சுருட்டிக் கொண்டு, மீண்டும் முதல் கணவருடன் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பது, விசாரணையில் தெரியவந்தது.நேற்று, உடுமலை பஸ் ஸ்டாண்டில் பவித்ராவையும், அவரது முதல் கணவர் கர்ணனையும், தாராபுரம் போலீசார் பிடித்தனர். அவர்களிடம், மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X