சி.பி.ஐ., விசாரணை; அதிகாரிகள் திக்... திக்...!

Added : ஜூன் 14, 2016
Share
Advertisement
அன்றைய தினம், சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் தினசரி மார்க்கெட் நோக்கி பயணப்பட்டனர். ஸ்கூட்டரை சித்ரா இயக்க, பின்னால் அமர்ந்து கொண்டு, நகரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள் மித்ரா.சிக்னலில், பள்ளி வேன் கடந்து சென்றதை பார்த்ததும், ""நம்ம அதிகாரிகள் ஆய்வு செஞ்ச லட்சணத்தை பார்த்தீங்களா? குழந்தைகளோடு போன வேன் உருண்டுடுச்சு. நல்லவேளை சின்ன சின்ன காயங்களோடு
சி.பி.ஐ., விசாரணை; அதிகாரிகள் திக்... திக்...!

அன்றைய தினம், சித்ராவும், மித்ராவும் ஸ்கூட்டரில் தினசரி மார்க்கெட் நோக்கி பயணப்பட்டனர். ஸ்கூட்டரை சித்ரா இயக்க, பின்னால் அமர்ந்து கொண்டு, நகரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள் மித்ரா.
சிக்னலில், பள்ளி வேன் கடந்து சென்றதை பார்த்ததும், ""நம்ம அதிகாரிகள் ஆய்வு செஞ்ச லட்சணத்தை பார்த்தீங்களா? குழந்தைகளோடு போன வேன் உருண்டுடுச்சு. நல்லவேளை சின்ன சின்ன காயங்களோடு தப்பிச்சுட்டாங்க,'' என, ஆவேசத்துடன் பேச்சை துவக்கினாள் மித்ரா.
""ஆமாப்பா... தனியார் பள்ளிகள் பயன்படுத்தும் வாகனங்களை, ஆர்.டி.ஓ., வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் அடங்கிய குழு, ஆண்டுதோறும் தணிக்கை செய்யணும். சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு வேலை நடந்துட்டு இருந்ததால, எதைப்பத்தியும் கண்டுக்காம, "டேபிள் ஒர்க்' மாதிரி வாகன தணிக்கையை முடிச்சிருக்காங்க,''
""தணிக்கைக்கு வராத வாகனங்களை இயக்குறாங்களான்னும் பார்க்கலை. அதோட விளைவு, குழந்தைகளோடு தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்திடுச்சு. இவ்விஷயத்துல அதிகாரிக மீது எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ஆனா, பள்ளி மீது நடவடிக்கை எடுக்கணும்னு மட்டும் அரசுக்கு பரிந்துரை செஞ்சிருக்காங்க. தணிக்கை செய்யாத வாகனத்தை பயன்படுத்தியதை கண்டுக்காம இருந்த, அதிகாரிக மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கலைன்னு சர்ச்சை கிளம்பியிருக்கு. இந்த பிரச்னையில, கல்வித்துறையும், வட்டார போக்குவரத்து துறையும், அறிக்கை சமர்ப்பிச்சுட்டு, நடவடிக்கையில இருந்து தப்பிக்கப் பார்க்குறாங்க,'' என்ற சித்ரா, மார்க்கெட் முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.
இருவரும் ஒன்றாக மார்க்கெட்டுக்குள் நுழைந்து, தக்காளி விலையை கேட்டதும், ஆடிப்போய் விட்டனர். என்னக்கா, விலைவாசி இப்படி உயர்ந்திருச்சு என, அங்கலாய்த்த மித்ரா, ""ரூ.570 கோடி விவகாரம் இழுத்துக்கிட்டே போகுதே; இப்போதைக்கு முடியாது போலிருக்கே,'' என்றாள்.
தக்காளியை பொறுக்கிக் கொண்டிருந்த சித்ரா, ""இந்த விவகாரத்தை, தி.மு.க., தரப்பு தீவிரமா கண்காணிச்சுக்கிட்டு இருக்கு. ஒவ்வொரு விஷயமா வெளிச்சத்துக்கு வர்றதால, பிடிபட்டது "பாங்க்' பணம் தானானு மக்களுக்கும் சந்தேகம் வந்திருக்கு. ஆனா, வருமான வரித்துறையாச்சு; வங்கியாச்சு, எங்க வேலை முடிஞ்சதுனு, மாவட்ட நிர்வாகம் ஒதுங்குது. வழக்கு விசாரணையில இருக்கறதால, ரெண்டு வாரத்துல சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டிருக்கு. விசாரணைக்கு வந்தாங்கன்னா, என்ன சொல்றதுனு, மாவட்ட அதிகாரிகள், "மேலிடத்துல' கருத்து கேட்டு, தயாராகிட்டு இருக்காங்க,'' என்றாள்.
""அதெல்லாம் சரி, ரெண்டு திராவிட கட்சியிலும், நிர்வாகிகளை மாத்துறாங்க. நம்மூர்ல மாத்தலையே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவிய மித்ரா, அருகில் இருந்த காய்கறி கடைக்கு வெண்டைக்காய் வாங்கச் சென்றாள்.
""அதுவாப்பா, கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கறதுக்கு முன்னாடி, நாம முந்திக்கிடனும்னு, தி.மு.க., - மா.செ., செல்வராஜ், தோல்விக்கு நானே காரணம்னு ராஜினாமா கடிதம் அனுப்புனாரு. ஆனா, கட்சி தலைமை ஏத்துக்கலை. உள்ளாட்சி தேர்தல் வரைக்கும் வேலையை செய்யுங்கன்னு சொல்லியிருக்கு. ஆளுங்கட்சி தரப்புல, மடத்துக்குளத்திலும், தாராபுரத்திலும் தான் தோத்துருக்காங்க. திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடத்துல ஜெயிச்சதுனால, மா.செ., ஆனந்தன் தெம்பா இருக்காரு. இருந்தாலும், கட்சி பதவியை எப்படியாவது பறிச்சிடனும்னு, ஒரு குரூப், தீயா வேலை செஞ்சுக்கிட்டு இருக்கு,'' என்றாள் சித்ரா.
காய்கறிகளை வாங்கிக்கொண்டு, கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில் இருவரும் ஸ்கூட்டரில் சென்றனர். அங்கிருந்த "டாஸ்மாக்' மதுக்கடை அருகே ஏகப்பட்ட கூட்டம்.
""அதான், மத்தியானம், 12:00 மணிக்குதான் கடை தெறப்போம்னு சொல்லிட்டாங்கள்ல; இப்பவே, எதுக்கு இவ்ளோ பேரு நிக்குறாங்க,'' என, கேரட்டை மென்றபடி மித்ரா, அப்பாவியாய் கேட்க, ""இதெல்லாம் ஒனக்குத் தெரியாதா, கள்ளச்சந்தையில, மதுபானமும் விக்க ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப, "பேக்கேஜ் சிஸ்டம்' வந்துருச்சு. 140 ரூபாய் கொடுத்தால் போதும். ஒரு குவார்ட்டர், பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாக்கெட், நொறுக்குத்தீனி கொடுப்பாங்க. ஜன்னலுக்குள் பணத்தை நீட்டியதும், பார்சல் வரும்; வாங்கிட்டு திரும்பிப் பார்க்காம போயிடணும்,'' என்றாள் சித்ரா.
""நம்ம ஜனங்க திருந்தவே மாட்டாங்களா?'' என, நொந்து கொண்ட மித்ரா, ""இதெல்லாம் எப்படி ஒங்களுக்குத் தெரியும்,'' என, கேட்க, ""ஆபீஸ் பியூனிடம் கேட்டேன்; புட்டு புட்டு வச்சிட்டான். அவ்ளோ தான்,'' என, கேசுவலாக சித்ரா சொல்வதற்கும், வீடு வருவதற்கும் சரியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X