விலகாத ரூ. 570 கோடி மர்மம்! திக்.. திக்.. மனநிலையில் அதிகாரி!

Added : ஜூன் 14, 2016
Share
Advertisement
'அம்மா என்றால் அன்பு...' என குஷியாக பாடியபடி வந்தாள் சித்ரா.'வாங்கம்மா வாத்தியாரம்மா...' என, எதிர்பாட்டு பாடி, வரவேற்றாள் மித்ரா.'பரபரப்பா எதிர்பார்க்கப்பட்ட ரிசல்ட் பொசுக்குன்னு ஆயிடுச்சு' என்றபடி முந்திரிபக்கோடா தட்டை நீட்டினாள் சித்ரா.பக்கோடாவை எடுத்து சுவைத்த மித்ரா, 'ஏன், அப்படி சொல்றீங்க. நம்ம பசங்க நல்ல மார்க் வாங்கியிருக்காங்களே. அரசாங்க
விலகாத ரூ. 570 கோடி மர்மம்! திக்.. திக்.. மனநிலையில் அதிகாரி!



'அம்மா என்றால் அன்பு...' என குஷியாக பாடியபடி வந்தாள் சித்ரா.
'வாங்கம்மா வாத்தியாரம்மா...' என, எதிர்பாட்டு பாடி, வரவேற்றாள் மித்ரா.
'பரபரப்பா எதிர்பார்க்கப்பட்ட ரிசல்ட் பொசுக்குன்னு ஆயிடுச்சு' என்றபடி முந்திரிபக்கோடா தட்டை நீட்டினாள் சித்ரா.
பக்கோடாவை எடுத்து சுவைத்த மித்ரா, 'ஏன், அப்படி சொல்றீங்க. நம்ம பசங்க நல்ல மார்க் வாங்கியிருக்காங்களே. அரசாங்க பள்ளிக்கூடங்களும் நூறு சதவீத தேர்ச்சி அடைஞ்சிருக்கே' என, படபடவென பொரிந்தாள்.
'மித்ரா, நான் அதச் சொல்லலை. 'எலக்ஷன் ரிசல்ட்'டை சொல்றேன். எப்படியும், மாஜி மேயர் ஜெயிப்பாரு; திருப்பூருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா, மறுபடியும் அ.தி.மு.க. ஆட்சி தொடர்றதால, எதிர்க்கட்சிக்காரங்க ரொம்ப அப்செட் ஆகிட்டாங்க. மறுபடியும் முதல்ல இருந்தானு அதிர்ச்சியில் இருக்காங்க' என்றாள் சித்ரா.
'திருப்பூர் மாநகர் மாவட்டத்துல, நாலு தொகுதியையும் கைப்பத்தியச்சுனு, ஆளும்கட்சிக்காரங்க தெம்பா இருக்காங்களாமே' என மித்ரா கேட்க,
'தொகுதியை கைப்பத்தியிருந்தாலும் கட்சிக்குள் உரசல் ஏற்பட்டிருக்கு. புதுசா தேர்ந்தெடுக்கப்பட்டவங்க, மாஜியை கண்டுக்கறதில்லை; நெலமையை புரிஞ்சுக்கிட்டு,அவரும் சகிச்சுட்டு போறாரு' என்றாள் சித்ரா.
'அதெல்லாம் சரி, தோழர் கட்சிக்காரங்களும் ரொம்பவே அப்செட்டுல இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன்' என்றபடி, இஞ்சி டீயை எடுத்து, உறிஞ்சினாள் மித்ரா.
அதற்கு, 'ரெண்டு நாளைக்கு முன்னாடி நன்ற அறிவிப்பு கூட்டம் நடத்தியிருக்காங்க. கூட்டணி கட்சியில இருந்து நிர்வாகிகள் வந்திருக்காங்க. முரசு கட்சியில இருந்து, சம்பிரதாயத்துக்காக ரெண்டே ரெண்டு பேர் மட்டும் வந்துட்டு போயிருக்காங்க. எலெக்ஷன் நேரத்துலயும் போதுமான ஒத்துழைப்பு கொடுக்கலையாம். அதனால, டிபாசிட்டும் காலியாகிடுச்சு; மூன்றாமிடத்துக்கும் போயிட்டாங்க. இதனால், ரொம்ப வெறுப்பா பேசிக்கிட்டு இருக்காங்க' என்றாள் சித்ரா.
'கோடிக்கணக்குல பணம் பறிமுதல் செஞ்சாங்களே, என்னாச்சு? அவ்ளோ தானா?' என, காலியான டீ கோப்பையை நீட்டியபடி, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
'ரூ 570 கோடி விவகாரத்தை கேக்குறீயா? இப்போதைக்கு, கோவைக்கு பிரச்னையை தள்ளி விட்டுட்டு, அதிகாரிக நிம்மதியா இருக்காங்க. வருமான வரித்துறை அறிக்கையை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்னு சொல்றாங்க. தேர்தல் முடியறதுக்கு முன்னாடியே விசாரிச்சிருந்தா முடிவு தெளிவா கெடைச்சிருக்ம். இனி, விஷயத்தை அமுக்கிடுவாங்கன்னு பேசிக்கிறாங்க. பணத்தை பிடிச்ச தாசில்தார் மட்டும், புலம்பிக்கிட்டு இருக்காரு. இவ்ளோ பிரச்னைக்கும் இவர்தானே காரணம்னு, மாவட்ட நிலை அதிகாரிகளும் திட்டித் தீர்த்துக்கிட்டு இருக்காங்க' என்றாள் சித்ரா.
'தொழில்துறையை சேர்ந்தவங்களுக்குள் புகைச்சல் ஓடிக்கிட்டு இருக்காமே' என், கடைசி மேட்டருக்குள் நுழைந்தாள் மித்ரா.
'அதுவா, நொய்யலை சீரமைக்கப் போறோம்னு ஒரு குரூப் கௌம்பியிருக்கு. நொய்யல் கரையோரம் ரோடு போடப் போறோம்னு இன்னொரு குரூப் கௌம்பியிருக்கு. இப்ப, கரையோரம் இருக்கற, முட்புதரை புல்டோசரை பயனபடுத்தி, அகற்றிக்கிட்டு இருக்காங்க. இதுநாள் வரைக்கும், புதருக்குள் மறைஞ்சிருந்த சாயக்கழிவு குழாய்கள் வெளிச்சத்துக்கு தெரிய ஆரம்பிச்சிடுச்சு. சாயக்கழிவு தண்ணி, ஆத்துல கலக்குற எடம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு.
மறுபடியும் கோர்ட் பிரச்னை வந்துடக்கூடாதுன்னு, அலறி அடிச்சுக்கிட்டு, சென்னை அதிகாரிங்க, ஓடி வந்து ஆய்வு செஞ்சிரக்காங்க, முக்கியமான இடங்கள்ல, கேமரா வைக்கணும்னு சொல்லியிருக்காங்க. அதோடு விடல; சாய ஆலையில் வெளியேத்தும் கழிவு நீரின் அளவு; சத்திகரிப்பு மையத்துக்கு வந்து சேரும் அளவை, பதிவேட்டில் பதியணும்னு உத்தரவு போட்டிருக்காங்க. ஊருக்கு நல்லது செய்ய ஆரம்பிச்சு, இப்ப, சிக்கல்ல வந்து முடிஞ்சிருக்குன்னு, தொழில்துறையை சேர்ந்தவங்க பேசிக்கிறாங்க' என சித்ரா சொல்வதற்கும், பக்கோடா தட்டு காலியாவதற்கும் சரியாக இருந்தது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X