பொது செய்தி

தமிழ்நாடு

'காலை ஏழு மணிக்கு ஏரியாக்கு போங்க' - அதிகாரிகளுக்கு மாநகராட்சி கிடுக்கிப்பிடி

Added : ஜூன் 14, 2016
Advertisement

சென்னை: 'சென்னையில், துப்புரவு உள்ளிட்ட அடிப்படை பணிகளை கண்காணிக்க, காலை, 7:00 முதல், 11:00 மணி வரை, அனைத்து கண்காணிப்பு அதிகாரிகளும், களத்தில் இருக்க வேண்டும்' என, மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில், துப்புரவு, வடிகால், சாலை மைய தடுப்பு, பூங்கா பராமரிப்பு, மின்விளக்குகள் சீரமைப்பு ஆகிய அடிப்படை கட்டமைப்பு பணிகள், ஒப்பந்ததாரர்கள் மூலமும், மாநகராட்சி பணியாளர்கள் மூலமும் செய்யப்பட்டு வருகின்றன.அந்த பணிகள், சரிவர நடப்பதில்லை என, புகார்கள் எழுந்தன. அதையடுத்து, 'அடிப்படை பணிகளை ஊழியர்கள் சரியாக செய்கின்றனரா' என கண்காணிக்க, மண்டலத்திற்கு ஒரு சிறப்பு அதிகாரியை, மாநகராட்சி நியமித்தது. அதே போல், 200 வார்டுகளுக்கு பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.வெள்ளம், சட்டசபை தேர்தலால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, கண்காணிப்பு அதிகாரிகள், தங்கள் பணிகளை செய்யவில்லை. தற்போது, குப்பை, கழிவுநீர், கொசு தொல்லை குறித்து மாநகராட்சிக்கு புகார்கள் வருவதால், கண்காணிப்பு அதிகாரிகள் மீண்டும் களத்தில் இறக்கிவிடப்பட்டு உள்ளனர். தினமும் காலை, 7:00 முதல் 11:00 மணி வரை, அனைத்து கண்காணிப்பு அதிகாரிகளும் களத்தில் பணியாற்ற வேண்டும்; எந்த இடத்தில் என்ன வகையான பிரச்னை என்பதை பட்டியல் தயாரித்து, அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதா என, ஆய்வு செய்ய வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. அந்த நேரத்தில், எக்காரணத்தை கொண்டும், அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X