புதுடில்லி: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஓய்வின்றி பணியாற்றி வரும் மத்திய அமைச்சர்களில் ஒருவர். இத்தனை பணிகளுக்கு இடையில், 'ப்ரிஜ்' பழுதாகி விட்டதாக, புகார் கூறிய ஒருவருக்கு, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், சுஷ்மா பதிலளித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.
வெளியுறவு அமைச்சராக உள்ள சுஷ்மா, சர்வதேச நாடுகளுடனான உறவு மேம்பாட்டுக் காக, ஓய்வின்றி பணியாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதால், அதற்கு தேவையான ஏற்பாடுகளையும், சுஷ்மா
நிர்வகிக்கும் துறைதான் கவனிக்கிறது.
சுஷ்மா
சுவராஜ், நேரம் கிடைக்கும்போதெல் லாம், 'டுவிட்டர்' சமூக வலைதளத்திலும்,
சிறப்பாக செயலாற்றி வருகிறார். வெங்கட் என்பவர், தான் வாங்கிய, 'ப்ரிஜ்'
சரியாக வேலைசெய்யவில்லை என்றும், அதை அந்த நிறுவனம் மாற்றித் தர மறுக்கிறது என்றும், டுவிட்டரில், சுஷ்மா சுவராஜிடம் புகார் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானிடமும், வெங்கட் உதவி கோரியிருந்தார். இதுபோன்று, யாருக்காவது தகவல் வந்தால், அது, தவறாக தனக்கு வந்து விட்டதாக கருதி, அலட்சியம் செய்வதை பார்த்திருக்கிறோம்.
ஆனால், வெங்கட்டின் கோரிக்கையை அலட்சியம் செய்ய விரும்பாத சுஷ்மா சுவராஜ், அவருக்கு,' டுவிட்டரில்' பதில் அளித்திருந்தார். அதில், 'சகோதரரே, 'ப்ரிஜ்' பழுதான
விஷயத்தில், உங்களுக்கு என்னால் உதவ முடியாது. மனித சமுதாயத்தின் துயரங்களை போக்கும் பணிகளில், நான் மிகவும் பிசியாக உள்ளேன்' என, சுஷ்மா
கூறியுள்ளார்.
சுஷ்மாவின் இந்த பதிலை பார்த்த, அவரது, லட்சக்கணக்கான பின்தொடர்வோர்களில் பலரும், தம் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஒருவர், 'சுஷ்மா ஜி, சாமானியர் ஒருவரின் கருத்துக்கு கூட, நீங்கள் பதில் அளித்தது, பாராட்டத்தக்கது' என, கூறியுள்ளார். மற்றொரு வர், 'இதுபோன்ற அற்பமான பிரச்னைகளுக்கு கூட, உங்களால் தீர்வு காண முடியும் என, சிலர் நினைப்பதை பார்த்தால், சிரிப்புத்தான் வருகிறது' என, கிண்டலடித்துள் ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (14)
Reply
Reply
Reply