பாட்னா: பீஹார் மாநில கல்வித் துறை அமைச் சர் அசோக் சவுத்ரி, 'டியர்' என விளித்து, 'டுவிட்டரில்' எழுதியதற்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எதிர்ப்பு தெரிவித்த தால், சலசலப்பு எழுந்தது.
பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். கூட்டணி ஆட்சி நடக்கும் இம்மாநில கல்வித் துறை அமைச்சராக, காங்கிரசைச் சேர்ந்த, அசோக் சவுத்ரி உள்ளார்.
புதிய கொள்கை
அவர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானிக்கு, டுவிட்டர் சமூக வலைதளத்தில் எழுதிய ஒரு பதிவில், 'டியர் ஸ்மிருதி இரானி, பீஹார் மாநிலத்திற்கு, புதிய கல்விக் கொள்கை எப்போது கிடைக்கும்; உங்கள் காலண்டரில், 2015ம் ஆண்டு எப்போது முடியும்? என, குறிப்பிட்டு இருந்தார்.
தன்னை, 'டியர்' என குறிப்பிட்டு, அசோக் சவுத்ரி எழுதியது பிடிக்காததால், அதற்கு ஸ்மிருதி இரானி எதிர்ப்பு தெரிவித்து, டுவிட்டரில் பதிவு வெளியிட்டார்.
வார்த்தைப் போர்
அதற்கு, டுவிட்டரில் பதில ளித்த அசோக் சவுத்ரி, 'உங்களை அவமதிப்பதற்காக, டியர் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை; தொழில்
நிபுணத்துவத்துடன் எழுதப்படும் இ - மெயில்களில், டியர் என்ற வார்த்தையுடன் தான் ஆரம்பிக்கப்படுகிறது' என, தெரிவித்து உள்ளார். டுவிட்டரில், ஸ்மிருதி இரானி - அசோக் சவுத்ரி இடையே நடந்த வார்த்தைப் போர், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.