தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்க வேண்டிய, 83 ஆயிரத்து, 475 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
பிரதமரை சந்திப்பதற்காக, நேற்று காலை தனி விமானம் மூலம், முதல்வர் ஜெயலலிதா, டில்லி சென்றார். அவருக்கு, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மாலை, 4:45 மணிக்கு, பிரதமர் இல்லத்தில், பிரதமர் மோடியை, முதல்வர் சந்தித்து பேசினார். அப்போது, 29 கோரிக்கைகள் அடங்கிய, 96 பக்க மனுவை, அவரிடம் வழங்கினார். மனுவில் இடம் பெற்றுள்ள வளர்ச்சி பணிகளை செயல்படுத்த, மத்திய அரசு வழங்க வேண்டிய, 83 ஆயிரத்து, 475 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கும்படி வலியுறுத்தினார். மனுவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் உறுதி அளித்தார்.
முதல்வர் மனுவில் இடம் பெற்றிருந்த கோரிக்கைகள்::
* காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை, உடனடியாக அமைக்க வேண்டும்
* காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்
* முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும்
* நதிநீர் இணைப்பை நடைமுறைப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
* அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு, 1,892 கோடி ரூபாய் வழங்க வேண்டும்
மீனவர் நலன்
* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
* தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும்
* கச்சத்தீவை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பின்,
கச்சத்தீவு அந்தோணியார் கோவிலை புதுப்பிக்க வேண்டும்
* இலங்கை சிறையில் உள்ள, 21 மீனவர்கள் மற்றும், 92 படகுகளை மீட்க வேண்டும்
* ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கான, 1,520 கோடி ரூபாயை வழங்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பு விதிமுறைகளை மாற்ற வேண்டும்
*
ராமநாதபுரம் மாவட்டம், முகையூரில், 114 கோடி ரூபாயில், மீன்பிடித்
துறைமுகம் அமைக்க, மத்திய அரசு, 50 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும்
* பூம்புகார், குளச்சல், தேங்காய்பட்டினம், சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக திட்டத்திற்கு, மத்திய அரசு நிலுவை தொகையை வழங்க வேண்டும்
மின்சாரம்
* கூடங்குளம் அனுமின் நிலைய இரண்டாம் பிரிவை உடனடியாக துவக்க வேண்டும். செய்யூர் அனல் மின் நிலையப் பணிகளை விரைவாக துவக்க வேண்டும்
* 'உதய்' திட்டத்தில் சில மாறுதல்களை செய்யக்கோரி, தமிழக அரசு கொடுத்துள்ள கருத்துருவை பரிசீலிக்க வேண்டும்
* மத்திய அரசுக்கான வரி உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாயை, சிறப்பு நிதியாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். 13வது நிதி ஆணையம் பரிந்துரைப்படி, தமிழக அரசுக்கு வர வேண்டிய, 523 கோடி ரூபாயை வழங்க வேண்டும்
* மத்திய விற்பனை வரி குறைப்பால் ஏற்பட்ட இழப்புக்கு, 13 ஆயிரத்து, 227 கோடி ரூபாய் ஒதுக்கும்படி கேட்டதற்கு, 6,875 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 6,875 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும்
* பெட்ரோலிய பொருட்களுக்கு, சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
* வெள்ள சேதத்திற்காக, 25 ஆயிரத்து, 912 கோடி ரூபாய் கோரப்பட்டது. ஆனால், 1,738 கோடி ரூபாய் மட்டும் வழங்கப்பட்டது. கூடுதல் நிதி வேண்டும்
* நகர்புற நீர்நிலைகளை ஒட்டி குடியிருக்கும் ஏழைகளுக்கு, 50 ஆயிரம் வீடு கட்ட, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 750 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்
* கொச்சி - பெங்களூரு கெய்ல் எரிவாயு குழாய் திட்டத்தின் தடத்தை, மாற்றி அமைக்க வேண்டும்
* 22 மாவட்டங்களில் உள்ள தேசிய தோட்டக்கலை திட்டத்தை, மேலும், ஒன்பது மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும்
* தேசிய உணவு பாதுகாப்புசட்டத்தில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மாதந்தோறும், 5.90 கோடி லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்
* காவல்துறையை நவீனப்படுத்த, 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்
* மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த, நிதியுதவி வழங்க வேண்டும்
*
பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ், 595 சாலை மற்றும்
பாலப் பணிகள் மேற்கொள்ள, 795 கோடி ரூபாய்
ஒதுக்கும்படி, ஊரக வளர்ச்சித்
துறைக்கு உத்தரவிட வேண்டும்
* திருப்பூரில், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நிறைவேற, 200 கோடி ரூபாய் வழங்கி உதவ வேண்டும்
*
ஜவுளி மேம்பாட்டு திட்டத்திற்கான, 1,500 கோடி ரூபாயை வழங்க வேண்டும்.
தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தில், இரண்டு ஆண்டுகளில் வழங்க வேண்டிய, 85
கோடி ரூபாயை வழங்க வேண்டும்
* மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தும்படி, தமிழகத்தை வற்புறுத்தக் கூடாது. தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மூன்று இடங்களை தேர்வு செய்துள்ளோம். அதில் ஒரு இடத்தில், விரைவில் பணியை துவக்க வேண்டும்
* 'அம்ருத்' திட்டத்தில், கரூர், விழுப்புரம், நாமக்கல், ஊட்டி நகராட்சிகளை சேர்க்க வேண்டும்
கல்வி
* சர்வ சிக்சா அபியான் திட்டத்தில், 576 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும்* உயர் கல்வி படிக்கும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 1,168 கோடி ரூபாயை வழங்க வேண்டும்
* அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திற்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்* தமிழகத்தில் உள்ள, இலங்கை அகதிகளுக்கு, இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்
* ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும்* சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் சந்திப்பு!: டில்லியில், தமிழ்நாடு இல்லத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
டில்லி தமிழ் சங்க பொதுச் செயலர் கண்ணன், முன்னாள் பொதுச்செயலர் முகுந்தன் ஆகியோரும் சந்தித்தனர்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (30)
Reply
Reply
Reply