உ.பி., மாநிலம், அலகா பாத்தில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற, கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர், தேசிய அளவில் கட்சியை வேகமாக வளர்த்தெடுப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
அதேநேரத்தில், தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது உட்பட, தமிழக பா.ஜ.,வின் செயல்பாடுகள் குறித்து, கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை சமர்ப்பித்தார்.
பின், தமிழிசை சவுந்தரராஜன் உட்பட, மாநில தலைவர்கள் பலரிடமும், கட்சியின் தேசிய
தலைவர் அமித் ஷா பேசினார். அப்போது, கட்சியை தலித் மக்களை நோக்கி கொண்டு செல்ல, அவர் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில், விரைவில் பணிகள் துவங்க உள்ளன.
தமிழக பா.ஜ., தலைவர்களிடம், அமித் ஷா பேசியது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள்தெரிவித்ததாவது:
* பா.ஜ.,வை, தலித் மக்களுக்கான இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும்.
* நரிக்குறவர் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்ட மோடியின் செயல்
பாடுகளை, அந்த மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
* தலித் மக்கள் முன்னேற்றத்திற்காக, இரு ஆண்டுகளில், மோடி அரசு செயல்படுத்திய திட்டங்களையும்; அதனால் பயன் பெற்றவர்கள் பட்டியலையும் வெளியிட வேண்டும்
* மாநில நிர்வாகிகள் சுற்றுப்பயணம் மேற் கொள்ளும் போது, தலித் வீடுகளுக்கு சென்று உணவருந்த வேண்டும்.
* கட்சியின்மாநில, மாவட்ட, கிராம அளவிலான நிர்வாகப் பொறுப்புகளில், தலித் மக்களை அதிகளவில் நியமிக்க வேண்டும்.
*
மத்திய அரசின், 'முத்ரா வங்கி' திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெற்ற
தலித் மக்கள், குறிப்பாக - தலித் பெண்கள் யார் யார் என்ற பட்டியலை
சேகரித்து, அதுபற்றிய விவரங்களை தலித்
மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
*
இரட்டை டம்ளர் எங்கும் இல்லாத நிலையை ஏற்படுத்துவதுடன், தலித்கள்
சுதந்திரமாக ஆலயப் பிரவேசம் செய்யும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.* ஒவ்வொரு மாநில தலைவரும், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தலித் பெண் ஒருவரோடு நேரடித் தொடர்பில் இருந்து, அவருக்கு மத்திய அரசின் திட்டங் களை எடுத்துக் கூறி, தலித் மக்களை அவை சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா பேசியதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (18)
Reply
Reply
Reply