உள்ளாட்சி தேர்தலில், நான்கு மேயர் உட்பட, 25 சதவீத இடங்களை, காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. இரண்டு மேயர் உட்பட, 15 சதவீத இடங்களை ஒதுக்கலாம் என, தி.மு.க., திட்டமிடுகிறது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரசுக்கு, ௪௧ தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அதில், எட்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 'வரும் உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடரும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழக காங்.,
தலைவர் இளங்கோவன் ஆகியோர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், தி.மு.க.,வில் ஒரு தரப்பினர், 'உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும்' என்ற கருத்தைவலியுறுத்துகின்றனர். அதேபோல, காங்கிரசில் உள்ள தி.மு.க., எதிர்ப்பு கோஷ்டியினரும், தனித்து போட்டியிடுவதை ஆதரிக்கின்றனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலில், அக்கட்சிக்கு, ௧௭ சதவீத இடங்கள் வழங்க வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் எட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள தால், அதனடிப்படையில், உள்ளாட்சி தேர்தலில் இடங்களை ஒதுக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது.
ஆனால், காங்கிரஸ் தலைமை, 25 சதவீதம் இடங்களை பெற திட்டமிட்டுள்ளது. மொத்தமுள்ள, 12 மாநகராட்சி மேயர் பதவிகளில், நான்கு
வேண்டும் என, காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், தி.மு.க., தரப்பில், இரண்டு மேயர் பதவியை விட்டு கொடுக்கலாம். மொத்த உள்ளாட்சி பதவி இடங்களில், 15 சதவீதம் வரை ஒதுக்கலாம் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விரைவில், உள்ளாட்சி தேர்தல் பங்கீடு தொடர் பாக, இரு கட்சிகளின் சார்பில் குழு அமைத்த பின், அதிகாரபூர்வ பேச்சு துவங்கும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (35)
Reply
Reply
Reply