சென்னை, : தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில், தே.மு.தி.க.,வை சேர்ந்த, 100 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தேர்தல் முடிவுக்கு பின், மாவட்ட வாரியாக, கட்சி நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர்.
சென்னை அறிவாலயத்தில், நேற்று, திருவள்ளூர் தே.மு.தி.க., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில், 100 பேர், அக்கட்சியிலிருந்து விலகி, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.