புதுடில்லி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், கழிவுநீரில் போலியோ கிருமி இருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, 'மக்கள் அச்சப்படத் தேவையில்லை' என, மத்திய அரசு
அறிவித்துள்ளது.
போலியோ எனும் இளம்பிள்ளை வாதத்தை உருவாக்கும் கிருமியில் இருந்து பாதுகாக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது. பல ஆண்டு களாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்களால், இந்தியாவில், போலியோ பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டது.
கடைசியாக, கடந்த, 2011, ஜனவரி, 13ம் தேதி, மேற்கு வங்க மாநிலத்தில் போலியோ நோய் பாதிப்பு இருந்தது. அதைத் தொடர்ந்து எடுக்கப் பட்ட தீவிர நடவடிக்கைகளைத் தொடர்ந்து, போலியோ முழுவதுமாக ஒழிக்கப்பட்டு, இந்தியாவை போலியோ இல்லாத நாடாக, 2014ல், உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
சுகாதாரமில்லாத பகுதிகளிலும், கழிவுநீரில் இருந்தும் தான் இந்தக் கிருமி உருவாவதால், நாடு முழுவதும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங் களில், குறிப்பிட்ட கால இடைவெளி யில் பரி சோதனை செய்யப்படுகின்றன.
அதன்படி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின்
தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ள தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் பரிசோதனை நடந்தது. அப்போது, அதில் வி.டி.பி.வி., என்று அழைக்கப் படும், இரண்டாம் நிலை கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத்
தொடர்ந்து, ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள, 3.50 லட்சம்
குழந்தை களுக்கு, கடந்த வாரத்தில் போலியோ தடுப்பு மருந்து
கொடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் அடுத்த வாரம் மற்றொருபோலியோ சொட்டு மருந்து முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயப்பட வேண்டாம்: இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை உயரதிகாரிகளும், நிபுணர் களும், ஐதராபாத்துக்கு விரைந்து, பிரச்னை குறித்து ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐதராபாத்தில், கழிவுநீரில் போலியோ கிருமி இருப்ப தாக கூறப்படுவதால், மக்கள் அச்சப்பட தேவை யில்லை. இது போலியோவை உருவாக்கக் கூடிய தொற்றுக் கிருமி இல்லை.மேலும், உடனடி நட வடிக்கையாக, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதால், எந்த பாதிப்பும் ஏற்படாது.
போலியோ இல்லாத நாடு என்ற நிலையே தொடர் கிறது. இந்தக் கிருமி உள்ளதாகக் கூறப்படும் பகுதிகளில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. யாருக்கும் இந்த கிருமியால் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்ய ப்பட்டுள்ளது.
தொடர்ந்து இப்பகுதியில் கண்காணித்து வருகி றோம். இதனால், போலியோ ஏற்படும் என,யாரும் பயப்பட தேவையில்லை.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், டில்லி மற்றும்
குஜராத், பீஹார் மாநிலத் திலும் இதுபோன்ற போலியோ கிருமி தென்பட்டது. ஆனால்,
உடனடி நடவடிக்கை களால், யாருக்கும்
எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வைரஸின் தன்மை என்ன?:டபிள்யூ.எச்.ஓ., எனப்படும் உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில், இந்தக் கிருமி குறித்து கூறப்பட்டுள்ளதாவது:
* குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும், போலியோ கிருமி தாக்காமல் இருக்கவும், ஓ.பி.வி., எனப்படும் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது
* இந்தச் சொட்டு மருந்தில், போலியோ கிருமியை எதிர்க்கக் கூடிய கிருமி உள்ளது
* இந்த கிருமியானது, குறிப்பிட்ட காலத்துக்குப் பின், உடலில் இருந்து, கழிவுடன் வெளியேறி விடும். அப்போது, உடலில் இருக்கும் போலியோ கிருமியும் வெளியேறும்
* வி.டி.பி.வி., என்று கூறப்படும், இரண்டாம் நிலை கிருமி, நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ளவர்களையே தாக்கக் கூடும்
* கடந்த, 2000ம் ஆண்டு முதல், உலகெங்கும், 300 கோடி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதால், போலியோ நோய், 99 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது
* இந்த காலத்தில், 21 நாடுகளில், வி.டி.பி.வி., வைரஸ் பாதிப்பு, 24 முறை ஏற்பட்டு, 760 பேர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (3)
Reply
Reply
Reply