அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு கார் வேண்டாம்: ஸ்டாலின் அறிவிப்பு

Added : ஜூன் 15, 2016 | கருத்துகள் (23)
Share
Advertisement
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அரசு வழங்கிய காரை ஏற்க மறுத்து விட்டார்.சட்டசபை தேர்தலில் தி.மு.க., 89 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு, அரசு தரப்பில் கார், டிரைவர், நேர்முக உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய வசதிகள்
 அரசு கார் வேண்டாம்: ஸ்டாலின் அறிவிப்பு


தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அரசு வழங்கிய காரை ஏற்க மறுத்து விட்டார்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க., 89 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு, அரசு தரப்பில் கார், டிரைவர், நேர்முக உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய வசதிகள் வழங்கப்படும்.ஸ்டாலின், தன் சொந்த காரையே பயன்படுத்திக் கொள்வதாகவும் சட்டசபை செயலக அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார். கடந்த முறை எதிர்க்கட்சி தலைவராக இருந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அரசு காரை ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SRIVIRAJA - SRVILLIPUTTUR,இந்தியா
16-ஜூன்-201621:11:14 IST Report Abuse
SRIVIRAJA அய்யா நாங்க பல லட்சம் கோடிக்கு அதிபர் .. அடுத்தவங்க உபயோகித்த டுபகூர் கார்ல எப்படி வருவோம் .. நாங்க கிழமைக்கு ஒரு புது ரோல்ஸ் ரய்ஸ்ல வருவோம் .. எங்களை இந்த மாதிரி பிட்சகாரங்க மாதிரி நடத்துறது அம்மாவோட கலாசாரம்
Rate this:
adalarasan - chennai,இந்தியா
16-ஜூன்-201622:30:37 IST Report Abuse
adalarasanயார் வீட்டிலேயோ, சுங்கவரி கட்டாத இருக்குமதி ,சொகுசு, SUV உள்ளதாக பிடிபட்டு , கேசில் நிலுவையாக உள்ளதே , பத்திரிகை செய்திபடி? அரசாங்க வண்டியெல்லாம் இவர்களுக்கு என்னாத்துக்கு ?? சொந்த வண்டிகள் ஏராளம் கிடக்கிறது, கட்சி செலவு வேறே.../ மாவட்டங்கள் எல்லாம் சொகுசு வண்டியில், [கட்ச்சி], இவருக்கு என்ன...?...
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
16-ஜூன்-201618:09:48 IST Report Abuse
தமிழர்நீதி அரசு கார் அசௌகரியமாக கொடுக்கும் நோக்கில் இருக்கும் எனபதை அறிந்து . ஜெயா அவமான படுத்தும் நோக்கில் தள்ளுவண்டி கொண்டுத்து , ஒரு டூபாக்கூர் ஓட்டுனர் , ஒரு முரண்பட்ட அலுவலக ஊழியர் என்று கொடுப்பார் , என்று அறிந்து ,அனுபவித்து வேண்டாம் என்று ஒதுக்கி இருக்கலாம் . தெருவுல வேலியில போறதா புடிச்சி ..விட்டது போல ஆகிவிடகூடாது என்று ..அதான் பதவி ஏற்பு விழாவில் பின்னாடி உட்காரவைத்து ....
Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
16-ஜூன்-201620:39:04 IST Report Abuse
ezhumalaiyaanகுறை கண்டுபிடிப்பதிலேயே குறி.6வது முறை முதல்வராக ஆகி இருக்கும் ஜெயலலிதாவிற்கு வேறு வேலையே கிடையாதா?.என்ன அல்ப புத்தி. ஸ்டாலினே முதல்வராகவே வந்தாலும் இதே சிந்தனைதானே எதிர் கட்சி தலைவருக்கும் வரும்....
Rate this:
Cancel
ezhumalaiyaan - Chennai,இந்தியா
16-ஜூன்-201617:33:37 IST Report Abuse
ezhumalaiyaan பாராட்டுக்கள் ( தன் காருக்கு எரிபொருள் செலவை கேட்காமல் இருந்தால்..)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X