அரசு கார் வேண்டாம்: ஸ்டாலின் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு கார் வேண்டாம்: ஸ்டாலின் அறிவிப்பு

Added : ஜூன் 15, 2016 | கருத்துகள் (23)
Share
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அரசு வழங்கிய காரை ஏற்க மறுத்து விட்டார்.சட்டசபை தேர்தலில் தி.மு.க., 89 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு, அரசு தரப்பில் கார், டிரைவர், நேர்முக உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய வசதிகள்
 அரசு கார் வேண்டாம்: ஸ்டாலின் அறிவிப்பு


தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அரசு வழங்கிய காரை ஏற்க மறுத்து விட்டார்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க., 89 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு, அரசு தரப்பில் கார், டிரைவர், நேர்முக உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய வசதிகள் வழங்கப்படும்.ஸ்டாலின், தன் சொந்த காரையே பயன்படுத்திக் கொள்வதாகவும் சட்டசபை செயலக அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார். கடந்த முறை எதிர்க்கட்சி தலைவராக இருந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அரசு காரை ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X