அரசியல் செய்தி

தமிழ்நாடு

தஞ்சை த.மா.கா.,வினர் கூண்டோடு தாவ திட்டம்

Added : ஜூன் 15, 2016 | கருத்துகள் (5)
Share
Advertisement
தஞ்சாவூர், :தஞ்சாவூர் மாவட்ட த.மா.கா., நிர்வாகிகள், கூண்டோடு கட்சி மாற திட்டமிடும் தகவல் வெளியாகி உள்ளது.த.மா.கா., தலைவர் வாசனின் சொந்த மாவட்டம், தஞ்சாவூர். நடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த, த.மா.கா., போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதன்பின், நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு, சிலர் கட்சியில் இருந்து விலகினர். வாசனின் சொந்த



தஞ்சாவூர், :தஞ்சாவூர் மாவட்ட த.மா.கா., நிர்வாகிகள், கூண்டோடு கட்சி மாற திட்டமிடும் தகவல் வெளியாகி உள்ளது.த.மா.கா., தலைவர் வாசனின் சொந்த மாவட்டம், தஞ்சாவூர். நடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த, த.மா.கா., போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதன்பின், நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு, சிலர் கட்சியில் இருந்து விலகினர். வாசனின் சொந்த மாவட்டமான தஞ்சாவூரிலும், சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூண்டோடு, காங்கிரசில் இணைய போவதாக கூறப்படுகிறது.
வாசனின் குடும்ப உறுப்பினரான, முன்னாள் மாவட்ட தலைவரும், தற்போது த.மா.கா., செயற்குழு உறுப்பினராகவும் உள்ள அந்தோணிசாமி தலைமையில், ஒட்டுமொத்த நிர்வாகிகளும் கட்சி மாற உள்ளனர். அந்தோணிசாமிக்கு, காங்கிரசில் மாநகர தலைவர் பொறுப்பு வழங்கப்படும் என, தெரிகிறது.
தமிழக காங்., தலைவர் இளங்கோவன் முன்னிலையில், அடுத்த மாதம் இணைப்பு விழா நடக்கும் என, கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
16-ஜூன்-201613:24:36 IST Report Abuse
Chandramoulli சாக்கடையில் இருந்து கூவத்திற்கு செல்ல போகிறார்கள் .
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
16-ஜூன்-201612:09:49 IST Report Abuse
Pasupathi Subbian அப்படியாவது ஏதும் பதவி கிட்டுமா என்ற நப்பாசையில் கட்சி தாவுகின்றனர் . அங்கேயும் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் ஆளும் கட்சிக்கு தாவ ஆரம்பிப்பார்கள். ஆக இவர்களின் குறிக்கோள் ஆதாயம் மட்டுமே.
Rate this:
Cancel
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
16-ஜூன்-201607:38:42 IST Report Abuse
Vaishnavi.Ne கூண்டோடு கட்சி மாறி மறுபடியும் காங்கிரஸ் கட்சிக்கு தானே போகிறார்கள் இதில் அவர்களுக்கு என்ன லாபமோ ?
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
16-ஜூன்-201613:32:59 IST Report Abuse
pradeesh parthasarathyஏதோ மாற்றம் வேண்டும் என்று கூறி மூன்றாம் முன்னணினியில் நின்று தேர்தலை சந்தித்தபோது நீங்கள் எல்லாரும் தமகவிற்கு வோட்டு போட்டு கிழிச்சிட்டீங்க பாருங்க அதனால தான்...... கட்சி மாறி வருவதும் போவதும் அவரவர் விருப்பம்.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X