வாருங்கள்... சிகரம் தொடுவோம்! என்பார்வை| Dinamalar

வாருங்கள்... சிகரம் தொடுவோம்! என்பார்வை

Added : ஜூன் 15, 2016 | கருத்துகள் (4)
 வாருங்கள்... சிகரம் தொடுவோம்! என்பார்வை

சிந்தனை ஊற்றாக, சுரங்கமாக, அமுதமாக விளங்கி ஆரவாரமில்லாமல் வீட்டிலிருந்தே சிந்தனைச்சுடர் ஒளி ஏற்றுகின்றாள் பெண். அவளது சிந்தனை தாய்ப்பாசம் மிக்கது; ஆக்கும் திறன்கொண்டது; நாளை என்ற நம்பிக்கை விளக்கை ஏற்றுவது, தன்னலம், சுயநலம் கடந்தது.
வீடு, நாடு, உலகம் என்ற சுழற்சியில் சுழன்று இன்பம் தருவதாகும். பெண்கள் சிந்தித்துச் செயல்படும் போது ஏதுவும் சிதறிப்போவதில்லை. தெரியாது, முடியாது, இயலாது போன்ற சொற்களைப் பெண்கள் குறித்த அகராதியிலிருந்து விலக்கிவிட்டு இது நடக்கும், என்னால் முடியும், நான்செய்து காட்டுவேன், வெற்றி பெறுவேன் போன்ற நம்பிக்கைதரும் சொற்களுக்குச் சொந்தக்காரர்களாகப் பெண்கள் பலரும் இன்று உரிமை கொண்டாடி வருகிறார்கள்.
பெண்கள் தொட்டது துலங்குகிறது. அவர்களின் வழிகாட்டுதலில் ஒளிவெள்ளம் இருளைப் போக்கியிருக்கிறது.
எங்கேயும் பெருமைக்குரியவள்
பெண்ணின் சிந்தனை பெருமைக்குரியதாக உள்ளது. மண்ணுக்கும், விண்ணுக்கும் பாலமாக பெண் அமைகின்றாள். இந்தப்பிறவியில் அறவழி நின்று மறுமைக்கான வீடு பேற்றையும் பெற உதவுகின்றாள். ஒருபெண் நலம் பெற்றால் அவள் குடும்பம், சமுதாயம் உயர்வுப் பெறுகின்றது.
பெண், கல்தோன்றி மண்தோன்றா காலத்திலிருந்தே கவிஞர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்களின் சிந்தனைக்கு வற்றாத அட்சயப்பாத்திரமாக விளங்கிவரும் கருப்பொருள், பெண்களைப்போற்றியும், துாற்றியும், கிண்டலடித்தும் எழுதப்பட்ட கருத்துகள், கவிதைகள், கதைகள் எண்ணில் அடங்காதவை. பெண்
உடலளவில் மென்மையானவள். மனதளவில் மிகவும் பலமானவள். எனவே எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்துவிடுவாள். அதுமட்டுமல்ல அவளால் எல்லாபாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக்கொள்ளத் தெரிந்தவள், கோபம்
வந்தாலும் புன்னகை மீறாமலே வெளிப்படுத்தும் தன்மைபெண்ணிடம் உண்டு.
குடும்பபெண்கள் -----ஆடவர்களுக்கு நிகரானவர்கள் பெண்கள் என்பது இன்று நேற்றல்ல கோடானகோடி ஆண்டுகளுக்கு முன்னரே சிவபெருமானால் இவ்வுலகிற்கு உணர்த்தப்பட்ட உண்மை. தன் உடம்பில் பாதியை பார்வதிதேவிக்கு சமமாகக் கொடுத்து ஆண்- பெண் இருவரும் சரிசமம் என இலக்கணம் வகுக்கப்பட்டது.
ஆனால் இன்னும் பெண்களில் பலர் சரியானபடிப்பறிவு இல்லாமலும் சொந்தக்காலில் நிற்கும் பலம் இல்லாமலும் இருக்கின்ற நிலைமை அதிகமாகவே காணப்படுகிறது. இதைப்போக்க குடும்பபாரத்தை ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை சாதித்துக்காட்டும் துணிச்சல் பெண்களிடம் வரவேண்டும்.
வேலைக்குப் போகவிரும்பும்
திருமணமான பெண்களுக்கு குழந்தைகளைவளர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. வீட்டில் பெரியவர்களை கவனிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. இன்னும் பல பிரச்னைகள் குடும்பங்களில் உள்ளன. அப்படிஉள்ள
பெண்கள் வீட்டிலிருந்தே சுயதொழில் செய்து சம்பாதிக்கலாம்; குடும்ப
பொருளாதாரத்தை சீர்செய்யலாம்;'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை என ஒப்புக்கொள்' என்னும் நாமக்கல் கவிஞரின் வார்த்தைக்கேற்ப ஒவ்வொருவரும்ஒரு கைத்தொழிலை கற்றுக்கொண்டால் அவை நமக்கு தக்க சமயத்தில் கைகொடுக்கும் பெண்கள் வீட்டிலிருந்தே பொருளாதாரத்தை உயர்த்தி தன் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளும் போதுஅங்கு சோதனைகளும் சாதனைகளின் படிக்கட்டுகளாக அமைகின்றன.
பணிக்குச் செல்லும்பெண்கள் ' நிமிர்ந்தநன்நடை நேர்கொண்ட பார்வையும்நிலத்தில்யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
விலகிவீட்டிலோர் பொந்தில் வாழ்வதைவீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்'என்னும் பாரதியின் கூற்றை பெண்கள் இன்று நிறைவேற்றி
வருகிறார்கள். பெண்கள் இன்று உயர்கல்வி பெற்று பல துறைகளில் சாதித்துவருகின்றார்கள். குடும்பச் சூழ்நிலை காரணமாக சில பெண்கள் சிறு வயதில் படிப்பை முழுமையாக தொடரமுடியாமல் வேலைக்குச் செல்லும் அவலநிலை சில இடங்களில் காணப்படுகிறது.
லக்னோ- - வாரணாசிவழி தடத்தில் உள்ள மல்ஹாராரயில் நிலைய லெவல் கிராசிங்கில் கேட்கீப்பராக ஒரு பெண் பணியாற்றிவருகிறார். இவ்வளவுகாலம் ஆண்கள் மட்டும் செய்துவந்த பணியை பெண்களாலும் செய்யமுடியும் என்ற
நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.தமிழக பிரிவைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம் என்னும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி 'சாஷாஸ்ட்ரா சீமாபால்' என்ற இந்திய- நேபாள எல்லை பாதுகாக்கும் துணை ராணுவப்படையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.
இந்த பதவிக்கு பெண் அதிகாரி நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதுபெண்குலத்திற்கே பெருமையாக உள்ளது. பெண்களே சோதனைகளைக் கண்டு பின் வாங்காமல்அவற்றை எதிர்த்து அடியெடுத்துவையுங்கள் சாதனையாளராக மாறுங்கள்.
பெண்கள் சேர்ந்து சாதனை படைக்கலாம், பழமை என்னும் மாயையை உடைக்கலாம், சாதனைமேல் சாதனை புரிந்தால் நாட்டை ஆளும் அதிகாரம் கிடைக்கலாம். பெண்ணே எத்தனை முறை வீழ்கிறாயோ, அத்தனை வாய்ப்புகள் கிடைக்கிறது. மீண்டும் ஒருமுறை எழுந்திடும் நம்பிக்கையை ஒவ்வொரு பெண்ணும் பெறுதல் வேண்டும். பொறுமையே பெருமை, தோல்வியே வெற்றியின் ஆரம்பம், தன்னம்பிக்கையே நல் நண்பன் என்று சோதனைகளைச் சாதனைகளாக்குவோம் வாரீர்.
-முனைவர் எஸ் . கே . திரேஸ் சிவராஜன்மதுரை. Sivajoshua@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X