புதுடில்லி,: டில்லியைச் சேர்ந்த, ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ., அல்கா லம்பா, கட்சி யின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து, இரண்டு மாதங்களுக்கு, தற்காலிகமாக
நீக்கப்பட்டுள்ளார். டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அங்கு, 'பிரிமியம் பஸ்' இயக்க அனுமதி வழங்கியதில் ஊழல் நடந்ததாக கூறி, மாநில போக்குவரத்து அமைச்சராக இருந்த கோபால் ராய் மீது, ஊழல் தடுப்பு
பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து, 'உடல் நிலை சரியில்லை' எனக் கூறி, அவர் பதவி விலகினார். ஆனால், ''முதல்வர் கெஜ்ரிவாலின் நிர்ப்பந்தத்தால் அவர் பதவி விலகினார்,'' என, ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளரும், பெண் எம்.எல்.ஏ.,வுமான அல்கா லம்பா கூறினார். இதனையடுத்து, அவரிடம் இருந்து, செய்தித் தொடர்பாளர் பதவியை, கட்சித் தலைமை பறித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு, அந்த பொறுப்பில் இருந்து, அவர் தற்காலிகமாக,
நீக்கப்பட்டுள்ளார்.
தெரியாமல் தவறு செய்து இருந்தால், அதற்காக வருத்தப்படுகிறேன். நான் கட்சியின் கட்டுப்பாடு மிக்க தொண்டர்; தலைமையின் முடிவை ஏற்கிறேன். ஊழல் பிரச்னையில்
கட்சிக்கு நெருக்கடி ஏற்படக் கூடாது.அல்கா லம்பா