பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'அமெரிக்காவின் நட்பு நாடு
அந்தஸ்து கிடைக்கும்'

புதுடில்லி,:'அமெரிக்காவின் ராணுவ நட்பு நாடு என்ற அந்தஸ்தை, இந்தியாவுக்கு அளிக்கும் தீர்மானம், அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்படவில்லை;

 'அமெரிக்காவின் நட்பு நாடு அந்தஸ்து கிடைக்கும்'

இருப்பினும், இந்த சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது' என, வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கூட்டறிக்கை: சமீபத்தில், அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை யில், 'அமெரிக்காவின் ராணுவ நட்பு நாடு என்ற சிறப்பு அந்தஸ்து, இந்தியாவுக்கு அளிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து, பல்வேறு அம்சங்களுடன் கூடிய, அமெரிக்காவின் தேசிய ராணுவ அங்கீகாரம் சட்டத்திருத்தத்தில், இதற்கான

மசோதாவும் கொண்டு வரப்பட்டது. குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் மெக்கைன் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கு, செனட் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், சட்டத்தின் மற்ற அம்சங்கள் நிறைவேறின.

இதுகுறித்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:
இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் தீர்மானம், அமெரிக்க பார்லிமென்டின் மேல் சபையான, செனட்டில் நிறைவேறவில்லை.

அதே நேரத்தில், ஏற்கனவே, இந்தியாவுக்கு இந்த அந்தஸ்தை அளிப்பதாக, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா சந்திப்புக்கு பின் வெளியிட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓட்டெடுப்பு நடத்தி...அமெரிக்க தேசிய ராணுவ அங்கீகார சட்டம் என்பது, ஒவ்வொரு ஆண்டும், ராணுவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பிற அம்சங்கள் அடங்கியது. இது, பல கட்டங்களை உடையது. தற்போது, செனட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அடுத்ததாக, காங்கிரஸ் எனப்படும், பார்லிமென்டின்மற்றொரு சபையிலும் இது தாக்கல் செய்யப் படும். அதை தொடர்ந்து, இரு சபைகளுக்கும் சேர்த்து, கூட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இரு சபைகளிலும் ஓட்டெடுப்பு நடத்தி நிறைவேற்றப்படும். அதனால், இப்போது இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. இறுதி முடிவுக்காக

Advertisement

காத்திருப்போம். இந்தியாவுக்கு, சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கு நிதி முடக்கம்:

Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - Chennai.,இந்தியா
18-ஜூன்-201601:14:43 IST Report Abuse

Kunjumaniகாபீர்கள் அமெரிக்காவின் நட்பை நிராகரிக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு நிதி முடக்கம் செய்த அமெரிக்காவை நமது ஜானதிபதி மாளிகை கண்டித்து தீர்மானம் இயற்ற அன்னை சோனியா, இளவல் ராகுல், ராபர்ட் வதோரா காந்தி, பிரியங்கா போன்ற தலைவர்கள் ஜனாதிபதிக்கு உத்தரவு இடவேண்டும். இயறையான்மையும், மார்கத்தையும் போற்றி வளர்க்கும் நாடு பாகிஸ்தான். அதனுடன் நாம் என்றுமே நட்பு பாராட்டவேண்டும். அன்னை சோனியாவின் உத்தரவின் பேரில் ஜானதிபதி பாசிச மோடியின் ஆட்சியை கலைத்துவிட்டு, இளவல் ராகுலை பிரதமராக நியமிக்கவேண்டும்.

Rate this:
kuppuswamykesavan - chennai,இந்தியா
17-ஜூன்-201620:33:07 IST Report Abuse

kuppuswamykesavanபெரியண்ணன் போன்ற மனப்பான்மை இல்லாமல், சரி நிகர் சமமாக நட்பு அமெரிக்கா தருமானால், இந்த விஷயம் இந்தியாவிற்கு நல்ல ஒரு நல்ல விசயமாக இருக்கும் .

Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
17-ஜூன்-201620:03:18 IST Report Abuse

K.   Shanmugasundararajஇந்த நாட்டில் உள்ள ஆளும்கட்சிகள் அது காங்கிரஸ் ஆக இருந்தாலும் , பி ஜே பி யாக இருந்தாலும் அமெரிக்கா வின் அடிமையாக இருப்பதை பெருமையாக கருதும்/ என்னும் நிலை தான் உள்ளது. ஆளும் கட்சிகள் மட்டுமல்ல . ஊடகங்களும் இந்த நாட்டை அமெரிக்காவின் அடிமையாக இருப்பதை தான் விரும்புகின்றன. இல்லையென்றால் அணுசக்தி 1, 2 ,3 ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏற்படும் தீமைகள் பற்றி வெளியிட்டு இருக்கலாமே.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X