சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற பல திட்டங்களின் செயலாக்கத்திற்கான அறிவிப்புகள், கவர்னர் உரையில் இடம் பெறும் என, அனைவரும் எதிர்பார்த்தனர்.
அதற்கு மாறாக, தேர்தல் அறிக்கையில் கூறிய அறிவிப்புகளில், முதல்வர் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை மட்டும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்களே தவிர, புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத உரையாக இருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு, முல்லைப் பெரியாறு, நதி நீர் இணைப்பு, கச்சத்தீவு போன்ற பிரச்னைகள், ஜனவரி, 20ல் கவர்னரால் படிக்கப்பட்ட உரையில் இடம்பெற்ற
பிரச்னைகளே.
மின்
மிகை மாநிலமாக, தமிழகம் மாறி விட்டதாக, கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.
இது, இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. ஒவ்வொரு நாளும் நாளேடுகளைப்
பிரித்தால், மின் தடை காரணமாக, பல மணிநேரம் மக்கள் அவதி என, செய்திகள்
வந்துகொண்டே இருக்கின்றன.
அது போலவே, தமிழகத்திற்கு வந்துள்ள முதலீடுகள் பற்றியும், புதிய வேலை வாய்ப்புகள் பற்றியும், கவர்னர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்களே கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில், கவர்னர் உரை முரண்பாடுகள் நிறைந்த ஏமாற்றத்தை தருகிற, - கொள்கைக் குறிப்புகள் எதுவுமில்லாத வெற்று அறிக்கையாகவே உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சட்டசபையில் கருணாநிதிக்கு207வது இருக்கை ஒதுக்கீடு: சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, சட்டசபையில், 207வது இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவர் அமர சிறப்பு வசதி எதுவும் செய்யப்படவில்லை.
தி.மு.க., தலைவர்கருணாநிதி, சட்டசபையில் தற்போதுள்ள இருக்கையில் அமர முடியாது. எனவே, அவர்
தன் சக்கர நாற்காலியுடன், சபையில் அமர இடவசதி செய்து தரும்படி, தி.மு.க.,
சார்பில், சபாநாயகருக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், நேற்று
சட்டசபையில், அவருக்கு சிறப்பு இருக்கை
வசதி செய்யப்படவில்லை.
எதிர்க்கட்சி தலைவருக்கு பின்புறம் உள்ள, 207வது இருக்கை, கருணாநிதிக்கு ஒதுக்கப் பட்டிருந் தது. அந்த இடத்திற்கு, அவர் சக்கர நாற்காலியுடன் செல்ல முடியாது. இதுகுறித்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறும்போது, ''கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை வசதி கோரி, கடிதம் கொடுத்துள்ளோம். இதுவரை, இருக்கை வசதி செய்து தரப்படவில்லை,'' என்றார்.
இதுபற்றி, சபாநாயகர் தனபாலிடம் நிருபர்கள் கேட்டபோது, ''ஒரு சட்டசபை உறுப்பினருக்கு, என்ன வசதி செய்து கொடுக்க வேண்டுமோ, அதை செய்து கொடுத்துள்ளோம்; மேற் கொண்டு, உங்களுடன் விவாதிக்க முடியாது,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (69)
Reply
Reply
Reply