தமிழ்நாடு

வட மாநிலத்தினருக்கு திருக்குறள் தருண்விஜய் பெருமிதம்

Updated : ஜூன் 19, 2016 | Added : ஜூன் 19, 2016 | கருத்துகள் (2)
Advertisement
வட மாநிலத்தினருக்கு திருக்குறள் தருண்விஜய் பெருமிதம்

மதுரை: ''திருவள்ளுவர் சிலையை கங்கைக்கரையில் வைப்பதன் மூலம், வட மாநிலத்தினருக்கு திருக்குறளை போதிக்கும் வாய்ப்பை தமிழர்கள்தந்துள்ளனர்,'' என பா.ஜ., எம்.பி., தருண்விஜய் பேசினார்.ஹரித்துவார் கங்கை ஆற்றின் கரையில், ஜூன் ௨௬ ல் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. இதற்காக'திருவள்ளுவர் கங்கை பயணத்தை' தருண் விஜய் எம்.பி., கன்னியாகுமரியில் துவங்கினார். அதற்கு மதுரையில் வரவேற்பு நடந்தது. வருமானவரி கமிஷனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.தருண் விஜய் பேசியதாவது:திருவள்ளுவர் சிலையை கங்கைக்கரையில் வைப்பதன் மூலம், வட மாநிலத்தினருக்கு திருக்குறளை போதிக்கும் வாய்ப்பை தமிழர்கள்தந்துள்ளனர். வேறுபாடுகளைக்களைய திருவள்ளுவர் போதித்துள்ளார். திருவள்ளுவரின் மகத்துவத்தைதெரியாமல் இருந்தது, குற்ற நடவடிக்கைக்கு சமமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.இந்தியர்களின் வீடுகளில் திருக்குறள் புத்தகம் இடம்பெற வேண்டும் என்பது எனது கனவு. வேலுநாச்சியார்,மருது சகோதரர்களின் தியாகத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான பதிவு தேவை, என்றார்.தஞ்சை தமிழ் பல்கலைமுன்னாள் துணைவேந்தர் திருமலை, பெனிட் அன்கோ நிர்வாக இயக்குனர் பெனிட்கரன், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், பா.ஜ., மாவட்டத் தலைவர் சசிராமன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - bangalore,இந்தியா
19-ஜூன்-201619:44:46 IST Report Abuse
Bharathi தமிழுக்கு குரல் கொடுக்கும் போராளி முகங்களை ஒன்று கூட காணோம். விளம்பரம் கிடைக்காதா அல்லது ஈகோ காரணமா?
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
19-ஜூன்-201616:02:58 IST Report Abuse
kuppuswamykesavan மலிவு விலை உள்ள ஹிந்தி திருக்குறள் வடஇந்தியாவில் விற்க தருன்வியைஜி தகுந்த ஏற்பாடுகள் செய்யணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X