அழகின் விசா...நடிகை ஜோதிஷா| Dinamalar

அழகின் விசா...நடிகை ஜோதிஷா

Added : ஜூன் 19, 2016 | கருத்துகள் (1) | |
பிரபஞ்ச அழகை எல்லாம் அள்ளிக் கொண்டு ஆடி வரும் பேரழகு ராட்டினம், பார்த்து, பார்த்து பட்டை தீட்டிய வைரங்களுக்கு போட்டியாய் மின்னும் பிளாட்டினம்... நீ திரும்பும் திசையெல்லாம் களைகட்டும் திருவிழா, சிரிக்கும் சிரிப்பிலே தெறித்துச் சிதறிடும் தேன் பலா, நீ பார்த்தாலே இளம் இதயங்களில் பரவிடும் மூடு பனி... இந்திரலோக ரம்பை, ஊர்வசி உன் அழகிற்கு ஈடு, இணையில்லை இனி... என பார்த்ததும்
அழகின் விசா...நடிகை  ஜோதிஷா

பிரபஞ்ச அழகை எல்லாம் அள்ளிக் கொண்டு ஆடி வரும் பேரழகு ராட்டினம், பார்த்து, பார்த்து பட்டை தீட்டிய வைரங்களுக்கு போட்டியாய் மின்னும் பிளாட்டினம்... நீ திரும்பும் திசையெல்லாம் களைகட்டும் திருவிழா, சிரிக்கும் சிரிப்பிலே தெறித்துச் சிதறிடும் தேன் பலா, நீ பார்த்தாலே இளம் இதயங்களில் பரவிடும் மூடு பனி... இந்திரலோக ரம்பை, ஊர்வசி உன் அழகிற்கு ஈடு, இணையில்லை இனி... என பார்த்ததும் பளிச்சென வர்ணிக்க தோன்றும் 'அழகின் விசா' நடிகை ஜோதிஷா பேசிய மயக்கும் நிமிடங்கள்...* ஜோதிஷா...?பிறந்து, வளர்ந்தது எல்லாம் பெங்களூரு. பி.காம்., படிக்கும் போது இயக்குனராக இருந்த என் உறவினர் ஒருவர் என்னை சினிமாவில் அறிமுகம் செய்தார்.* முதல் படம்...திகில், திரில்லர் கதைக்களம் கொண்ட 'அம்புலி 3டி' தான் தமிழில் நான் நடித்த முதல் படம்.* உங்கள் நடிப்பில் அடுத்து...அடுத்து 'பேய் இருக்கா இல்லையா', 'வாத்தியாரும் தலையும்', 'ஏகனாபுரம்', 'அடி ஆத்தி நம்ம பொண்ணு', 'ஆயுதன்' என, வரிசையா பல படங்கள் நடிக்கிறேன்.* சாதித்தது...இதுவரை பெருசா சாதிக்கிற அளவுக்கு கேரக்டர்கள் கிடைக்கல. இப்போ இயக்குனர் சுல்தான்ஸ் இயக்கிய 'தப்பா யோசிக்காதீங்க'ன்னு ஒரு படத்துல நடிச்சு முடிச்சிருக்கேன். இந்தப் படம், கின்னஸ் சாதனைக்காக 46 நடிகர்கள் நடித்து, 11 மணி நேரத்துல எடுக்கப்பட்டது. படப்பிடிப்புக்கு முன் ஒரு மாதம் நடிப்பு பயிற்சி கொடுத்து தான் நடிக்க வைச்சாங்க. இப்படி ஒரு படத்துல நான் நடிச்சதே ஒரு சாதனை.* என்ன கதை?வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் கணவரை ஒரு மனைவி எப்படி நடத்துகிறார் என்பதை சொல்லும் குடும்பக் கதை. நடிகர் ராஜா ஹீரோவா, எனக்கு மகளாக மோனிஷான்னு ஒரு குழந்தை, மதுரை 'ரம்மி' சவுந்தர் நடிச்சிருக்காங்க.* வித்தியாசமான படங்கள்...வித்தியாசமான படங்களில் நடிக்கணும்னு நான் தேடி போகவில்லை. அதுவா தேடி வருது, நடிக்கிறேன். இதுல பேய் படங்களில் நடிச்சது தான் மறக்க முடியாத அனுபவம். எனக்கு பயம் எல்லாம் இல்லை! நான் தைரியமான பொண்ணு தெரியுமில்ல...* கஷ்டமான காட்சி...'மகி 110வது வட்டம்'ன்னு ஒரு படத்துல ஊமை கேரக்டர்ல நடிச்சேன். முக பாவங்கள் தான் அதிகம் இருக்கும், கண்களால் நிறைய பேசியே நடித்தேன்.* கிளாமர்...காட்சிக்கு தேவைப்பட்டா கிளாமரா நடிக்கலாம். ஆனால், அதுக்கு ஒரு எல்லை இருக்கு; அதை மீறக் கூடாது. ஹோம்லி கேரக்டரை கூடவே கவனிச்சு பார்த்தா சின்னதா ஒரு கிளாமர் இருக்கும்.* பிடித்த ஹீரோ, ஹீரோயின்...கமல்ஹாசன், நயன்தாரா, அனுஷ்கா * லட்சியம்...என் ரோல் மாடல் அனுஷ்கா தான். 'அருந்ததி' படத்தில் அவர் நடித்ததை போல ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கணும்.* புதுமுகங்களுக்கு...புதுசா நடிக்க வரும் பொண்ணுங்க கிளாமரா நடிச்சா பேமஸ் ஆயிடலாம்னு நினைக்க கூடாது. ஜீன்ஸ், டிசர்ட் மட்டுமில்லை சேலை, தாவணி கட்டி நடிச்சாலும் ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்வாங்க.* ஹாபி...நடிப்பு டென்ஷனுக்கு இடையில் கிடைக்கும் நேரங்களில் கொஞ்சம் யோகா, கொஞ்சம் டான்ஸ்...* ரசிகர்களுக்கு...சினிமாவில் வரும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கோங்க. இதுவும் ஒரு வேலை தான்; எங்களுக்கு நிறைய 'சப்போர்ட்' பண்ணுங்க.* மதுரை...படப்பிடிப்புக்கு மதுரை வந்திருக்கேன், மதுரை மக்கள் சொந்த பொண்ணு மாதிரி நினைச்சு பழகுனாங்க. மீனாட்சி கோயில் ரொம்ப பிடிக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X