திருடன் கூட சிரிப்பான் - இயக்குனர் எழில்| Dinamalar

திருடன் கூட சிரிப்பான் - இயக்குனர் எழில்

Added : ஜூன் 19, 2016 | கருத்துகள் (2)
திருடன் கூட சிரிப்பான் - இயக்குனர் எழில்

குதிரையில் வந்தா 'தேசிங்கு ராஜா'... ஒரு குரூப்பா வந்தா 'வெள்ளைக்கார துரை'... 'வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன்'... யார் எப்படி வந்தாலும் என் படத்துல காமெடி கண்டிப்பா இருக்கும் என ரசிகர்களின் துள்ளாத மனங்களையும் துள்ள வைக்கும் இயக்குனர் எழில், 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தை பார்க்க மதுரை வந்த போது மனம் திறந்த நிமிடங்கள்...
* துள்ளாத மனமும் துள்ளும் - தீபாவளி படங்களுக்கு முன் நீண்ட இடைவெளி ஏன்?இடைவெளி தேவை என நினைத்தேன்... சினிமாவில் நான் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. நிறைய புத்தகங்கள் படித்தேன், படங்கள் பார்த்தேன். அடுத்த காலகட்டத்திற்கு ஏற்ப என்னை நானே மாற்றிக் கொண்டேன். இந்த மாற்றத்திற்கு பின் தான் புத்துணர்வுடன் 'தீபாவளி' படம் எடுத்தேன்.* நீங்கள் குறிப்பிடும் காலகட்டம்...இன்று, பேஸ்புக், டிவிட்டர் என தகவல் தொடர்பு வளர்ந்துவிட்டது. ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசுவது குறைந்துவிட்டது. எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என, மூன்று தலைமுறைகளை நாம் கடந்திருக்கிறோம். இப்போது அனிருத் இசையை ரசிக்கிறோம். இந்த காலமாற்றத்திற்கு ஏற்ப நாமும் ஓட வேண்டுமே...* ஆரம்பத்தில் காதல் படங்கள், இப்போது காமெடி படங்கள்...'துள்ளாத மனமும் துள்ளும்' படத்திலேயே 'டவுசர் பாண்டி' என்ற காமெடி கேரக்டரை உருவாக்கினேன். எத்தனை விதமான வழி சொல்லும் காமெடிகள் உள்ளது என, ஆராய்ச்சி செய்து இந்தப் படத்தில் வழி சொல்லும் காமெடியை வைத்தோம். 'பெண்ணின் மனதை தொட்டு' படம் எடுத்த நேரம் என் தந்தை இறந்துவிட்டார். சோகத்திலிருந்து நான் வெளிவர வேண்டும் என்பதற்காக என் உதவி இயக்குனர்கள் இப்படத்தில் காமெடியை சேர்க்க சொன்னார்கள். நல்ல கதையை சுருக்கி அதில் காமெடி டிராக்கை இணைத்தோம்.* குடும்ப படங்களாகவே எடுக்குறீர்களே...பணத்திற்கு ஆசைப்பட்டு செக்சியாக, என் குடும்பம் பார்க்க முடியாத ஒரு படத்தை என்னால் எடுக்க முடியாது. எழில் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற எண்ணம் ரசிகர்களிடம் உள்ளது. இது தான் என் வாழ்க்கை, தொழில். இதில் தான் நான் புதுமை செய்ய வேண்டும், என் வருமானத்தையும் பெற வேண்டும்.* வெள்ளைக்கார துரை, வே.வ.வெள்ளைக்காரன்...சென்டிமென்டா?ஒரு கதையை யாராலும் மாற்ற முடியாது. படத்தின் தலைப்பை யார் வேணும்னாலும் சொல்லலாம். அப்படி 10 பேர் சொன்ன தலைப்பு தான் இது.* 'டிரிபிள் வி' ஹீரோஸ்...தேசிங்கு ராஜா - விமல் வேட்டி கட்டும் ஸ்டைல் பிடிக்கும். வெள்ளைக்கார துரை - விக்ரம் பிரபுஅமெரிக்காவில் படித்தவர் அவரை நம்மூர் ஸ்டைலுக்கு மாற்றினேன். வே.வ.வெ - விஷ்ணு விஷால் 'பந்தா பண்ணி நடிக்கணுமா'ன்னு கேட்டாரு. அவரையும் கலக்கல் ஹீரோவா களமிறக்கினேன்.* அஜித்துடன் இரண்டு படங்கள்...வாலி படம் ரிலீஸ் ஆகாத நேரம் தான் 'பூவெல்லாம் உன் வாசம்' கதை சொன்னேன். திடீர்னு வாலி படம் ஆக்ஷன் ஹிட்டானதால், இப்படத்தில் கொஞ்சம் ஆக்ஷன் சேர்த்தேன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் தான் அஜித்.* ஆன்மிகத்தில் இறங்கிவிட்டீர்களாமே?வேதாத்திரி மகரிஷி ஆசிரமத்தில் தியானம் கற்றுக் கொண்டு அவர் வழியை பின்பற்றி வருகிறேன். ஒரு 10 சதவீதம் ஆன்மிகத்தில் இருக்கிறேன். முன்பெல்லாம் அதிக கோபம் வரும்; இப்போது வருவதேயில்லை.* தொடர்ந்து காமெடி படங்கள்...ஒரு படத்தை பார்த்து மக்கள் தப்பான வழிக்குச் சென்றுவிடக்கூடாது. அதனால் தான் மன அழுத்தத்தில் வரும் ரசிகர்களுக்கு காமெடி டிரீட்டுடன் கூடிய சிரிப்பு டிரீட்மென்ட் அளிக்கிறேன். திருடும் எண்ணத்தில் என் படத்தை பார்க்க வரும் திருடன் கூட சிரித்து, சிரித்தே வயிறு வலி வந்து திருந்தி வீடு திரும்ப வேண்டும்...* மதுரை...'துள்ளாத மனமும் துள்ளும்' படம் வெளியீட்டிற்கு மதுரை வருவதாக இருந்தது பின் வர முடியவில்லை. இப்போது வே.வ.வெ., படத்தை ரசிகர்களோடு தியேட்டரில் பார்த்தேன். உற்சாகமாய் ரசிக்கின்றனர்... இதே மகிழ்ச்சியுடன் அடுத்த படம் குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X