பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
30 ஆயிரம் பேருடன் மோடி அசத்தல்:
சர்வதேச யோகா தினத்தில் கோலாகலம்

சண்டிகர்: இந்தியா உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில், சர்வதேச யோகா தினம், நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சண்டிகர் நகரில் நடந்த யோகா தினவிழாவில், பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து, 30,000 பேர் யோகா பயிற்சிகளை செய்து அசத்தினர்.

30 ஆயிரம் பேருடன் பயிற்சி செய்து மோடி அசத்தல் : சர்வதேச யோகா தினத்தில் கோலாகலம்

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 21ம் தேதியை, சர்வதேச யோகா தினமாக, ஐ.நா., சபை அறிவித்தது. கடந்தாண்டில், இந்தியா உட்பட பல நாடுகளில் யோகா தினம் சிறப்பாககொண்டாடப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது ஆண்டாக, சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களின் நகரங்களிலும், யோகா தின நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். உற்சாகமாக...: பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் நடந்த யோகா தின நிகழ்ச்சிகளில், 30,000 பேருடன் சேர்ந்து, பிரதமர் மோடி, யோகா பயிற்சிகளில் ஈடுபட்டார். ராணுவ வீரர்கள், பள்ளிக் குழந்தைகள், மோடியுடன் சேர்ந்து உற்சாகமாக, யோகாசனப் பயிற்சிகளை செய்தனர்.
முன்னதாக, யோகா தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றோர் முன், பிரதமர் மோடி பேசியதாவது: யோகாசனப் பயிற்சிகள் அளிக்கும் பயிற்றுனர்கள், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். 'நீரிழிவு நோயும், யோகா செய்வதால் கிடைக்கும் தீர்வுகளும்' என்பதை பாடமாக கருதி, முழுக் கவனத்தையும், யோகா பயிற்றுனர்கள் அதில் செலுத்த வேண்டும். நாடு முழுவதும், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த நோயை கட்டுப்படுத்துவதில், யோகா பயிற்றுனர்கள் உதவ வேண்டும். யோகா செய்வதன் மூலம், நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்.

அடுத்தாண்டு, சர்வதேச யோகா தினத்தன்று, யோகா மூலம், மற்றொரு நோயை குணப்படுத்துவதில் கவனம் செலுத்தலாம்.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை அவர்களிடையே தீவிர பிரசாரம் செய்ய வேண்டும்.

மக்களின் நோய்களை குணப்படுத்துவதோடு, ஆரோக்கியமாக வாழவும், யோகா உதவுகிறது. மனத்துாய்மை பெறவும், யோகா சிறந்த கருவியாக உதவும். சர்வதேச நாடுகள், ல் யோகாவை, அவற்றுக்கு ஏற்ற வழிகளில் ஏற்றுக் கொண்டுள்ளன.

அடுத்தாண்டு முதல், யோகா தொடர்பாக, இரண்டு விருதுகள் வழங்கப்படும். சர்வதேச அளவில், யோகாவில் சிறப்பான சாதனைகள் புரிந்தஒருவருக்கும், இந்திய அளவில் சாதனைகள் புரிந்த வேறு ஒருவருக்கும், இவ்விருதுகள் வழங்கப்படும்.
செலவில்லாத...: இந்தியாவில், மொபைபோன்கள், எல்லார் வாழ்விலும் நீக்க முடியாத அங்கமாகி விட்டது. அதுபோன்று, யோகாவை மக்களிடம் பரவச் செய்ய வேண்டும். யோகா என்பது, ஒரு காசு கூட செலவில்லாத, சுகாதாரக் காப்பீடு போன்றது. இவ்வாறு மோடி பேசினார்.
சண்டிகரில் யோகா நிகழ்ச்சி நடந்த பகுதியில், 300 பயோ - கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தன. 30,000 பேர், யோகா பயிற்சி செய்வதற்கு உதவும் வகையில், சிறு பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. 5,000க்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவ வீரர்கள் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
உ.பி., மாநிலம் பரீதாபாத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில், யோகா குரு ராம்தேவ், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொண்டனர். இவர்களுடன், ஒரு லட்சம் பேர், யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
மோடியுடன் 'செல்பி': சண்டிகர் நகரில், யோகா தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்கள் முன் உரையாற்றிய பின், மேடையிலிருந்து கீழே இறங்கி, பொதுமக்களுடன் சகஜமாக பேசினார்; பின், நிகழ்ச்சிகளில் பங்கேற்றோரின் விருப்பத்துக்கிணங்க, அவர்களுடன் சேர்ந்து, 'செல்பி' எடுத்தார்.
கேரளாவில் எதிர்ப்பு : கேரளாமாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த யோகா தினக் கொண்டாட்டத்தின்போது, துவக்க நிகழ்ச்சியாக, சமஸ்கிருத மொழியில் பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான ஷைலஜா, சமஸ்கிருத மொழி பிரார்த்தனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Advertisement

அதற்கு ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை, அவர் கண்டித்தார்.

ஷைலஜா கூறுகையில், ''யோகா, தனிப்பட்ட எந்தவொரு மதத்துக்கும் சொந்தமானதல்ல; அனைத்து மதத்தவரும் ஏற்கத்தக்க வகையில், பிரார்த்தனை செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்,'' என்றார். அமைச்சரின் எதிர்ப்பால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
நிதிஷ் புறக்கணிப்பு : சர்வதேச யோகா தினமான நேற்று, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, பீஹார் மாநில அரசு, யோகா நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை.

இருப்பினும், மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், கிரிராஜ் சிங், ராம்கிருபால் யாதவ் உள்ளிட்டோர், பீஹாரில் பல்லாயிரக்கணக் கானோருடன் சேர்ந்து, யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர்.
ராணுவத்தினர் பங்கேற்பு : நாடு முழுவதும் நேற்று நடந்த, யோகா தினக் கொண்டாட்டங் களில், ஆயுதப்படைகளை சேர்ந்த வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஐ.என்.எஸ்., ஐராவத், விராட் உள்ளிட்ட போர்க்கப்பல்களி லும், கடற்படை வீரர்கள் யோகா பயிற்சிகள் செய்தனர். அந்தமான் நிகோபார் தீவுகளிலும், உயரமான மலைப் பகுதிகளிலும், நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களும், யோகா தின நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இந்தியாவின் பரிசு : ''இந்தியாவில், யோகா தோன்றியபோதும், சர்வதேச யோகா தின அறிவிப்பை, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த வுடன், உலக நாடுகளுக்கு அளிக்கப்பட்ட பரிசாக, மாறியுள்ளது,'' என, ஆன்மிக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார். ஐ.நா., சபையில், சர்வதேச யோகா தினத்தையொட்டி நடந்த, குழு விவாதத்தின்போது, ஜக்கி வாசுதேவ் இக்கருத்தை தெரிவித்தார்.

Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari Krishnan - Coimbatore,இந்தியா
23-ஜூன்-201600:06:16 IST Report Abuse

Hari Krishnanயோக எனும் நம் கலாச்சாரக்கலையை இன்று உலகமே ஒரு விழாவாக கொணடாடும் அளவிற்கு அதன் பெருமையை உயர்த்தியிருக்கிறார் நம் பாரத பிரிதமர் ..மனிதவளம்..ஆற்றல்..தியாகம் பண்பு என்று ஒரு சிறந்த மனிதனை யோக உருவாக்கியது...அதன் புகழை உலகளாவ பரவ செய்து இன்று அந்த மனிதன் அதற்கு நன்றிக்கடன் செலுத்தியிருக்கிறார்....Jay hind...

Rate this:
Damu - Coimbatore  ( Posted via: Dinamalar Android App )
22-ஜூன்-201619:05:20 IST Report Abuse

Damuபதஞ்சலியின் யோகசூத்திரங்களிலோ யோக வசிச்டத்திலோ அல்லது பகவத்கீதையிலோ பத்மாசனத்தையோ அல்லது எந்த ஒரு ஆசனத்தையும் வலியுருத்தப்படவில்லை. எளிதாகவும் சௌகரியமாகவும் தை கழுத்து மார்பு ஆகியவை நேர் கோட்டில் இருக்கும்படி அமரவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது பத்மம் சித்தாசனம் சுகாசனம் போன்றதாக இருக்கலாம். ராச யோகத்தின் நானகாவதான பிராண யாமத்தை பற்றி சொல்லும்போது ஒரெ அளவு உள்வாங்கி அதேஅளவு ரேசித்து அல்லது உள் வைத்து பின் அதே அளவு நேரம் வெளிவிட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது இந்த கால அளவை அவரவர்களுக்கு ஏறபுடைய சிரமமில்லாத அளவாகவைத்துக்கொள்ளலாம் மூச்சுக்காறக்கும் மனதிற்கும் அதிக தொடர்பு உள்ளதாகக் கூரப்படுகிறது மனம் பயம் கோபம் அல்லது சஞ்சலப்படும்போது முச்சு வேகமாக செயல்படும் மூச்சின் வேகம்குறைந்து சீராகவும் மெதுவாகவும் இருக்கும்போது மனம் அமைதி அடைந்து ஆல்பா நிலையில் தியானத்தில் லயப்படும் பிராண யாமத்திலும் சூக்கும பிராணயாமம் தூல பிராயாமம் என்று இரண்டு வகை சோல்லப்படுகிறது பிராண சகதியை முதுகெலும்பன் வளியாக ஏற்றி இரக்கும் போது அதுசூக்கும பிராணயாமம் இதுபற்றி பரமஅம்ச யோகானந்தரின் யோகியின் சுயசரிதை மற்றும் அவரின் பாடஙகளில் தெளிவாக அறியலாம் இருமூலுடைய திரு மந்திரத்தில் சிலிடஙகளில் இததலிருந்து சில மாறுபாடுகள் உள்ளன

Rate this:
Sathyamurthy - Chennai,இந்தியா
23-ஜூன்-201614:12:51 IST Report Abuse

Sathyamurthyதிரு Damu அவர்கள் குறிப்பிட்டது மிகவும் சரியானதே. ஆசனம் என்றால் அமர்வது, அதுவும் பத்மாசனத்தில். மற்ற ஸனங்கள் பல இருந்தாலும் இவைகளால் உடல் பிராணாயாமம் செய்வதற்கு தயார் படுத்துவதற்காக மேற்கொள்ளும் ஆயத்த பயிற்சியே..ஆசனம் அஷ்டாங்கத்தில் வரும் 3 vathu அங்கம் மட்டுமே..ஆசனங்கள் மட்டும் யோகாவாகாது..மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் நுரை ஈரல் கொள் அளவு குறைகிறது. அடிபடுகிறது. இந்த பாதிப்பை பற்றி நம் முன்னோர்கள் உணர வாய்ப்பில்லை.. இதை சரி செய்ய மூச்சினை வேக வேகமாக வெளியேற்ற பழகுவதுடன் கொள் அளவை அதிகப்படுத்த நீண்ட மூச்சு பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது..உயிர் வாழ, ரத்தம் சுத்திகரிக்கப்பட மூச்சு தான் அவசியம்.. நீண்ட மூச்சு நீண்ட ஆயுள் மூச்சிருக்கும் வரை உயிர் வாழலாம்.. திருமூலர் கூறியுள்ளபடி அஷ்டாங்க யோகம் செய்து வந்தால் மரணத்தை தள்ளி போடலாம். ...

Rate this:
Meeran - chennai,இந்தியா
22-ஜூன்-201613:02:06 IST Report Abuse

Meeran  யோகாவை முறையாக செய்தால் மட்டுமே உடலுக்கும் மனதிற்கும் நல்லது. இல்லையென்றால் நம் உடலுக்கு எதிர் வினையையே உண்டாக்கும் . யோகா மாஸ்டர் என்று சொல்லிக் கொள்ளும் பலர் முறையாக சொல்லிக் கொடுப்பதில்லை.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X