அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மீத்தேன் திட்டம் அனுமதித்தது யார்?
தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

சென்னை: ''மீத்தேன் திட்டத்துக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் தான் தி.மு.க., ஆட்சியில் போடப்பட்டது; அனுமதி வழங்கவில்லை,'' என, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

மீத்தேன் திட்டம் அனுமதித்தது யார்? :  தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - வெற்றிவேல்:
மீத்தேன் திட்டத் துக்கு, தி.மு.க., ஆட்சியில் அனுமதி வழங்கினர். ஆனால், அதை இப்போது தடுக்க, விவசாய சங்கப் பிரதிநிதிகளை எதிர்க்கட்சித் தலைவர்

சந்தித்துள்ளார்.

ஸ்டாலின்: மீத்தேன் திட்டத்துக்கு, தி.மு.க., ஆட்சி யில் அனுமதி வழங்கியதாக, தவறான தகவலை தொடர்ந்து சொல்லி வருகின்றனர். மீத்தேன் திட்டத்துக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே, தி.மு.க., ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது; அனுமதி வழங்கவில்லை.

மின்துறை அமைச்சர் தங்கமணி: புரிந்துணர்வு ஒப்பந்தம், திட்டத்துக்காகப் போடப்படுவது தானே.

ஸ்டாலின்: புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது வேறு, திட்ட அனுமதி என்பது வேறு. தி.மு.க., ஆட்சியில் திட்டத்தை நிறைவேற்ற, அரசாணை வெளியிட வில்லை. அரசாணை வெளியிட்டால், திட்ட நிபந்த னைகள் உள்ளிட்ட விவரங்களுக்கு அனுமதி வழங்குவது போலாகும். அதை, தி.மு.க., ஆட்சியில் அளிக்கவில்லை.

தங்கமணி: திட்டம் நிறைவேற்ற தேவையான

Advertisement

நடவடிக்கையை எடுக்குமாறு, தஞ்சாவூர் கலெக்டரை அறிவுறுத்தி, தி.மு.க., ஆட்சியில், 1.1.2011 அன்று, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

(இத்தகவலை, அமைச்சர் கூறுகையில், ஸ்டாலின் சபையில் இல்லை)

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRASAD NARAYANAN - coimbatore ,இந்தியா
23-ஜூன்-201609:53:11 IST Report Abuse

PRASAD NARAYANANமோதல் நடப்பது நல்லது தான், அப்பொழுது தான் மக்களுக்கு புரியும் யார் மிக பெரிய தவறு செய்தவர்கள் என்று.. இதில் இன்னொன்று விஷயம் உண்டு.. மக்களுக்கு புரியாத விஷயங்கள் கூட எளிதில் எட்டி விடும். .. எப்பொடியோ ஆளும் கட்சி நல்லது செய்ய முன் வந்தாலே போதும்.. அவர்களுக்கே மீண்டும் வெற்றியை தேடி தரும்..

Rate this:
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
23-ஜூன்-201606:11:12 IST Report Abuse

Vilathur Nandhiyarதமிழ் நாட்டு மக்களுக்கு எந்த கேடுகள் வந்தாலும் அதற்கு மூல காரணம் திமுக தான் ..காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் கோட்டை விட்டது திமுக , கட்ச தீவை இலங்கைக்கு விட்டு கொடுத்தபோது உரிமை குரல் எழுப்பாமல் கைகட்டி கோழைகளாய் இருந்தது திமுக , மீத்தேன் திட்டம் கொண்டுவந்தது திமுக , மது விலக்கு அமலில் இருந்த தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்து மதுவை ஆறாக ஓடவிட்டது திமுக ..ஊழலை தமிழ் நாட்டிற்கு அறிமுக படுத்தியது திமுக ...ஈழ தமிழர்களை அழிக்க உதவியது திமுக ...இப்படி சொல்லிகொண்டேய போகலாம் ...

Rate this:
kuppusamy - chennai,இந்தியா
23-ஜூன்-201604:53:14 IST Report Abuse

kuppusamyரெண்டு பேருமே ஒருவர்மீது ஒருவர் குறைசொல்லிகொள்ளவா மக்கள் தேர்ந்து எடுத்தார்கள் ஏதாவது நல்லது செய்யமுடியுமா என்று பாருங்கள் ரெண்டுபேரையும் அகற்றிவிட்டு வேறு கட்சியை மக்கள் தேர்ந்து எடுக்க வழி இல்லாமல் போய்விட்டதே

Rate this:
மேலும் 53 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X