மக்கள் நல கூட்டணியில், த.மா.கா., இடம் பெற்றதால், அக்கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. த.மா.கா., தலைவர் வாசன் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், அ.தி.மு.க.,வில் சேர்ந்தார். தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாகி உள்ளார்.
மற்றொரு மூத்த துணை தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மீண்டும் காங்கிரசில் சேர்ந்து விட்டார். அக்கட்சித் தலைவர் பதவியை பிடிக்க தீவிரமாக உள்ளார்.
கோஷ்டி அரசியல் இந் நிலையில், சென்னை யில் த.மா.கா., இளை ஞரணி நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது.
அதில்,பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பேசுகையில், 'ஞானதேசிகனை போன்ற மூத்த தலைவர்கள், கட்சியை தங்கள் கையில் வைத்துக் கொண்டு, மாவட்ட
வாரியாக கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்' என, குற்றம் சாட்டினார்.
சமாதானம் : இதனால்,
அதிர்ச்சி அடைந்த ஞான தேசிகன், மேடையில் இருந்த தண்ணீர் பாட்டிலை துாக்கி
வீசி விட்டு, கோபமாக வெளி யேறினார். மேடையில் இருந்த வாசன் மற்றும் கட்சி
நிர்வாகி கள் ஓடிச் சென்று, அவரை சமாதானப்படுத்திஅழைத்து வந்தனர்.
பின், ஞானதேசிகன் பேசியதாவது: காமராஜரால் ஈர்க்கப்பட்டு, மாணவர் காங்கிரசில் சேர்ந்தேன். மூப்பனாரால் வளர்க்கப்பட்டேன். அவரது குடும்பத் திற்கு விசுவாசமாக இருந்து வருகிறேன். யாருக்கு நான் உண்மையாக இருக்க வேண்டுமோ, அவர்களுக்காக நான் உண்மையாக இருக்கிறேன். இது, வாசனுக்கு நன்றாக தெரியும்.
சோனியா, என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். காங்கிரசை விட்டு வெளியேற மாட்டேன் என்ற நம்பிக்கையும் வைத்திருந்தார். ராகுலும் என்னிடம் மரியாதையாக நடந்து கொண்டார். ஆனால், நான் வாசனுக்காக, கட்சியை விட்டு வெளியேறினேன்.
ஜெ., மீது மரியாதை : கூட்டணிமுடிவால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, எஸ்.ஆர்.பி.,க்கு முன், நான்
அ.தி.மு.க.,வுக்கு சென்றிருந்தால், எனக்கு தான் எம்.பி., பதவி
கிடைத்திருக்கும். அந்தளவுக்கு, முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியா தை உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க.,வுக்கு ஓட தயார்? : இளைஞரணி
நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின், வீட்டுக்கு சென்ற ஞானதேசிகனுக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். ஞானதேசிகனை கடுமையாக விமர்சித்த, இளைஞரணி நிர்வாகியை, கட்சி தலைவர் வாசன் கண்டிக்க வில்லை. மேலும், ஞானதேசிகனிடம் அந்த நிர்வாகி எந்த வருத்தமும் தெரிவிக்க மறுத்து விட்டார்.
இதனால், ஞானதேசிகன் கடும் கோபத்தில் இருக்கிறார். த.மா.கா., அலுவலகம் வருவதையோ, வாசனை சந்திப்பதையோ அவர் விரும்பவில்லை.
வாசன் மேற்கொண்ட சமரச முயற்சிக்கும், அவர் உடன்படவில்லை. எந்த நேரத்திலும் அவர், அ.தி.மு.க.,வில் சேரலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (34)
Reply
Reply
Reply