சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், கட்சியை பலப்படுத்தும் முயற்சியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக, மாவட்ட செயலர்கள், வேட்பாளர்களை சந்தித்து வருகிறார்.
கடந்த ஒரு வாரமாக, சென்னையில் ஆலோ சனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், கூட்டணி குறித்தே பெரும்பாலானவர்கள் குறை கூறினர். இதுமட்டுமின்றி, செயல்படாத நிர்வாகிகளை நீக்கினால் மட்டுமே, கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர
முடியும் என்றும் கூறினர். இந்த கோரிக்கையை, விஜயகாந்த் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப் படுவதாவது: அ.தி.மு.க., - -தி.மு.க., வில், அமைச் சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், கட்சியினருடன் நெருங்கி பழகு கின்றனர். கட்சி யினருக்கு பிரச்னை என்றால், உடனே உதவுகின்ற னர். ஆனால், தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகள், இதுபோன்று செய்வதில்லை.
கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள், மொபைல் போனில் அழைத்தால், இணைப்பை துண்டிக்கின்ற னர். பணம் கொடுத்து இவர்கள், பதவிக்கு வந்தனர். தி.மு.க.,கூட்டணி வேண்டாம் என்ற முடிவுக்கு, கட்சி தலைமை வந்தவுடனே, இவர்கள்
ஒதுங்கிக் கொண்டனர். இவர்கள், தேர்தல் பணியில் ஆர்வம் காட்டி இருந்தால்,
இந்த அளவிற்கு தோல்வி ஏற்பட்டிருக்காது.
எனவே, செயல்படாத நிர்வாகிகளை நீக்க
வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை, விஜயகாந்த் நிராகரித்து உள்ளார். மாவட்ட செயலர்கள், பொறுப்பாளர் களை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என கைவிரித்து உள்ளார். இதனால், கீழ்மட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் --
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (30)
Reply
Reply
Reply