அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
என் மீது வசை புராணம் பாடுவதை
ஜெ., நிறுத்த வேண்டும்: கருணாநிதி

சென்னை: 'கச்சத்தீவு விவகாரத்தில், என்னை பற்றி வசைபுராணம் பாடுவதை முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

 என் மீது வசை புராணம் பாடுவதை  ஜெ., நிறுத்த வேண்டும்: கருணாநிதி

அவரது அறிக்கை: ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 'கச்சத்தீவு பிரச்னை என்பது, மற்றொரு நாட்டுடனான பிரச்னை.அதை மீட்கக் கூடிய

அதிகாரம், மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மாநில முதல்வருக்கு அந்த அதிகாரம் இருந்திருந் தால், அன்றைக்கே கச்சத்தீவு மீட்கப்பட்டிருக்கும்' என்றார்.

அதைமறந்து, அல்லது மறைத்து விட்டு, இப்போது கச்சத்தீவை நான் தான் தாரை வார்த்தேன் என, சட்டசபையில் பேசுகிறார். கச்சத்தீவைப் பொறுத்த வரை, அதை தாரை வார்க்க, நான் எந்தக் காலத்தி லும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழக முதல்வர் என்ற முறையில், என் எதிர்ப்பை அப்போதே தெரிவித்திருக்கிறேன். உடனடியாக, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து, அவர்களிடம் கருத்து கேட்டுள்ளேன்.

ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில், ஒரே ஒரு முறையாவது, அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து, கச்சத்தீவை

Advertisement

மீட்பது பற்றி கலந்தாலோசனை நடத்தியது உண்டா?எந்தப் பிரச்னையிலும், இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, கச்சத்தீவு பிரச்னையில், என் மீது வசை புராணம் பாடு வதை, இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது.இவ்வாறு கருணாநிதி கூறிஉள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Porchezhian - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜூன்-201603:47:36 IST Report Abuse

Muthu Porchezhianஇந்த பொம்பளை ஒன்னும் கிழிக்க போவரது இல்லை தமிழ்நாட்டுக்கு ,சும்மா வெட்டி கதையை பேசி 5 வருஷம் ஓடிடும் .மக்களுக்கு நிறைய செய்ய வேண்டியத செய்யாமல் முச்சந்தி pipe சண்டை போட்டு time pass பண்ணுது

Rate this:
manivannan - chennai,இந்தியா
23-ஜூன்-201606:40:47 IST Report Abuse

manivannanஒரு சதுர அடி அடுத்த வீட்டுக்காரன் ஆக்ரமித்தால் கூட மீட்க முடியாதபடி கோர்ட் கேஸ் ன்னு 10 தலை முறை ஆயிடும், ஒரு தீவை யே மீட்பது என்பது? அப்படி என்ன அவசரம் , கொடுத்து விட்டு இப்போ உங்களுக்குள் அடித்து க்கொள்வதனால் ஒரு தம்பிடிக்கு பிரயோஜனம் இல்லை. அங்கேயும் சரி இங்கேயும் சரி பிரதமர்கள் மாறி க்கொண்டு இருக்கிறார்கள்... . வேண்டுமானால் சரித்திர சான்றுகளுடன் உலக அளவில் கொண்டு போகலாம்... அதுவும் இழுத்து க்கொண்டுதான் போகும்

Rate this:
Devaraj - moolekaodu ,சுரிநாம்
23-ஜூன்-201606:05:19 IST Report Abuse

Devaraj நீர் மத்தியில் கூட்டு இருக்கும் போது எத்தனை முறை காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைமையின் கண்ணை நொண்டி நொங்கு எடுத்தாய் என்பது ஊரறியும். மௌனி சிங் கின் கையை முறுக்கி நல்ல நல்ல அமைச்சர் பதவியை மகனுக்கு, பேரனுக்கு, மச்சானுக்கு என்று வாங்கி வாங்கி கொடுத்து சொகுசு கப்பலில் மூழிகினை என்பதை ஊர் அறியும். உனக்கும் உன்னோட குடும்பத்துக்கும் பயன் கிடைக்க நீர் எது வரை போவாய், மிரட்டுவாய் என்பதை நாடு அறியும். மகன் அழகிரி, மகள் கனிமொழி, அக்கா பையன் முரசொலிக்கு, பேரனின் பேரன், மகனின் மகன் என்று உன்னோட ஊழல் பட்டியல் நீண்டு கொண்டு போகுது. இப்போது முதலை நீலி கண்ணீர் விடுவது போல, எனக்கு அதிகாரம் இல்லை என்று ஊளை இடுவதை நிறுத்து. நீர் தூற்றி சேறு வீசும் போது ஜெய அம்மா கட்சி அமைதியாய் இருக்க வேண்டும். உன் மீது குற்றம் செய்தால் நீர் எச்சரிக்கை விடுவாய். என்ன நாடகம் முத்தமிழ் தலைவா. உன்னோட பெரிய தலை வழியா போச்சுயா.

Rate this:
மேலும் 102 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X