பொது செய்தி

இந்தியா

அதிகரிக்கும் விவாகரத்துகள் : கேரளா முதலிடம்

Updated : ஜூன் 22, 2016 | Added : ஜூன் 22, 2016 | கருத்துகள் (33)
Advertisement
அதிகரிக்கும் விவாகரத்துகள் : கேரளா முதலிடம்

புதுடில்லி : அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர கணக்கின்படி, இந்தியாவில் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் விவாகரத்துகள் அதிகம் நடக்கிறது. 2014 ம் ஆண்டின் கணக்கின் படி மிக அதிகபட்சமாக கேரளாவில் ஒரு மணிநேரத்திற்கு 5 விவகாரத்துகளும், நாள் ஒன்றிற்கு 130 விவாகரத்துகளும் வழங்கப்படுகின்றன.
குற்றங்கள், கொலைகள், விபத்துக்கள் ஆகியவற்றிற்கு எடுக்கப்படுவதை போல் நாடு முழுவதும் நடக்கும் விவகாரத்துக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை 2015ம் ஆண்டு மார்ச் மாதம் பார்லி.,யில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்குகளின் அடிப்படையில் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் 2014ம் ஆண்டு மட்டும் 47,525 விவகாரத்து வழக்குகள் கையாளப்பட்டுள்ளது.
விவகாரத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2வது இடத்திலும், கர்நாடகா 3வது இடத்திலும், மத்திய பிரதேசம் 4வது இடத்திலும், அரியானா 5வது இடத்திலும் உள்ளன. விவகாரத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கணவரால் துன்புறுத்தப்படுவதே அதிக விவாகரத்து வழங்கப்படுவதற்கான காரணமாக உள்ளது. இந்தியாவில் 10 ல் 6 ஆண்கள் தங்களின் மனைவியை அடிக்கும் வழக்கம் கொண்டவர்கள் என 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
உன்னை போல் ஒருவன் - Chennai,இந்தியா
22-ஜூன்-201621:05:08 IST Report Abuse
உன்னை போல் ஒருவன் 100% கல்வி அறிவு பெற்று என்ன பிரயோஜனம் சகிப்பு தன்மை இல்லையே ...
Rate this:
Share this comment
Cancel
Venkatesh - Natchiyarkoil,இந்தியா
22-ஜூன்-201619:22:44 IST Report Abuse
Venkatesh நல்லவேளை இதிலாவது தமிழ்நாடு இல்லையே என்று பெருமைபட்டுக்கொள்ளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Anban valli - Tirunelveli,இந்தியா
22-ஜூன்-201618:43:25 IST Report Abuse
Anban valli கேரள பெண்கள் படித்தவர்கள்.. படிப்பறிவற்ற பெண்களே அடிமை போல் வேறு வழியில்லாமல் ..........கட்டிக்கிட்டு அழும் பாமர பெண்களே மற்ற மாநிலங்களில் அதிகம். அது விவாகரத்தை விட கொடுமையானதே........ தமிழகத்தில் சட்டப்படி அல்லாமல் உள்ள விவாகரத்துகள் கணக்கிலடங்கா.......
Rate this:
Share this comment
K Hari - ramnad,இந்தியா
22-ஜூன்-201621:32:27 IST Report Abuse
K Hariஎங்களுக்கு தெரியும் உனது ஊரின் லட்சணம் ,புருஷனையே ஆடு மாடே போல் நீ.. வா ..என்று பேசும் கேடுகட்ட பழக்கம்.இது தான் படித்த பெண்ணின் லட்சணமா?..கேரளா என்றாலே வெடிகள் தான் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X