பீட்ரூட் ஏற்றுமதி அதிகரிப்பால், விவசாயிகள் உற்சாகமடைந்து உள்ளனர்.மஹாராஷ்டிரா, ஹரியானா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில், தேனி, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், பீட்ரூட் சாகுபடி நடக்கிறது. இதில், நீலகிரியில் விளையும் பீட்ரூட்டின் நிறம், வடிவம் மற்றும் மெல்லிய தோல் உடையதாக இருப்பதால், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் விளையும் பீட்ரூட், மாலத்தீவு, அரபு நாடுகள், சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களில் விளைச்சல் குறைந்துள்ளதால், தமிழகத்திலும் பீட்ரூட் தேவை அதிகரித்துள்ளது. இதனால், பீட்ரூட் விலை அதிகரித்துள்ளது. தற்போது, சென்னை உள்ளிட்ட நகரங்களில், ஒரு கிலோ பீட்ரூட் சில்லரை விலையில், 30 - 35 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. மூன்று மாதங்களாக, சராசரியாக, இதே விலையில் பீட்ரூட் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பீட்ரூட் சாகுபடி செய்த விவசாயிகள் உற்சாகமடைந்து உள்ளனர்.
-- நமது நிருபர்- -