நடவடிக்கை தேவை!

Added : ஜூன் 22, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
ராஜஸ்தானில், நில பேரம் தொடர்பான விவகாரத்தில், காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் முறைகேடு செய்துள்ளன. இது தொடர்பாக, அமலாக்கத் துறை சார்பில், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநில அரசும், வாத்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.கீர்த்தி சோமையா, பா.ஜ., - எம்.பி.,

ராஜஸ்தானில், நில பேரம் தொடர்பான விவகாரத்தில், காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு தொடர்புடைய நிறுவனங்கள் முறைகேடு செய்துள்ளன. இது தொடர்பாக, அமலாக்கத் துறை சார்பில், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் மாநில அரசும், வாத்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
கீர்த்தி சோமையா, பா.ஜ., - எம்.பி.,
நெடுஞ்சாலைகளில் மரம்!
நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், 1,500 கி.மீ., துாரத்திற்கு, மரங்களை நட முடிவு செய்துள்ளோம். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அடுத்த மாதம், 1ம் தேதி, இந்த திட்டம் துவக்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திற்கும் உள்ளது. இதனடிப்படையில், இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம்.
நிதின் கட்கரி, மத்திய அமைச்சர் - பா.ஜ.,
ஏழைகளுக்கு கடன் கொடுங்கள்!
மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் தான், வங்கிகளில் கடன் வாங்கி, அவற்றை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். ஆனால், ஏழைகள் அப்படியில்லை. சுயஉதவி குழுக்களை சேர்ந்தவர்கள், பெரும்பாலும் ஏழைகளே. அவர்கள் வாங்கிய கடனை, 99 சதவீதம் திருப்பிச் செலுத்துகின்றனர். எனவே, வங்கிகள், ஏழைகளுக்கு கடன் கொடுக்க தயக்கம் காட்டக் கூடாது.
வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் - பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbu - chennai,இந்தியா
23-ஜூன்-201614:46:32 IST Report Abuse
Subbu இந்த ராபர்ட் வதேரா பல ஊழல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. இதுபற்றி முழுமையாக விசாரிக்கப்பட்டு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X