பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மறுவாழ்வு
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கன் ஹிந்து அகதிகளுக்கு
இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு திட்டம்

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கன் ஹிந்து அகதிகளுக்கு மறுவாழ்வு : இந்திய குடியுரிமை அளிக்க மத்திய அரசு திட்டம்

உலகிலேயே அதிக மக்கள்தொகை உடைய நாடுகளில், இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா, 1951ல் கொண்டு வரப்பட்ட ஐ.நா., அகதிகள் தீர்மானம் மற்றும் அதைத் தொடர்ந்து, 1967ல் கொண்டு வரப்பட்ட அகதிகள் தொடர்பான நடைமுறை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

ஐ.நா.,வில் உள்ள, 190 நாடுகளில், 140 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. 'ஏற்கனவே உள்நாட்டு மக்களுக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவையான ஆதாரங்கள் கிடைப்பதில்லை. அண்டை நாடுகளில் இருந்து அதிக அளவு மக்கள் அகதிகளாக வந்துவிடுவர்' என்பதாலேயே, இந்த அகதிகள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை.

தற்போது, நாட்டில் அகதிகளுக்கான எந்த சட்டமும் இல்லை. அதே நேரத்தில், அகதிகளுக் கான நடைமுறை வழிகாட்டுதல்கள் உள்ளன. இருப்பினும், வங்கதேசம்,ஆப்கானிஸ் தான், பாகிஸ் தான் ஆகிய, முஸ்லிம்கள் பெரும் பான்மையினராக உள்ள நாடுகளில் இருந்து, ஹிந்துக்கள் பலர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர்.

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், பார்சிகள், பாஸ்போர்ட், விசா இல்லாமல் தங்கி

யிருக்க, கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்தே, இவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்கானமுயற்சிகள் துவங்கின.

இவ்வாறு அகதிகளாக உள்ள ஹிந்துக்களுக்கு, இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும் என, 2014 லோக்சபா தேர்தல்பிரசாரத்தின்போது, பா.ஜ., அறிவித்திருந்தது. அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், அகதிகளாக வந்துள்ள ஹிந்துக்களுக்கு சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கும் வகையிலும், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, இந்தியக் குடியுரிமை சட்டம் - 1955ல் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான மசோதாவை, அடுத்த பார்லிமென்ட் கூட்டத் தொட ரில் தாக்கல் செய்ய, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வரும் ஆகஸ்ட், 15ல், சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்குள், இவ்வாறு அகதிகளாக உள்ள ஹிந்துக்களுக்கு குடியுரிமை வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
என்ன சொல்கிறது மசோதா? : அகதிகளாக வந்துள்ளவர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ள வரைவு மசோதா, தற்போது தயாராக உள்ளது. மத்திய அமைச்சரவையில் ஒப்புதலுக்குப் பின், இது இறுதி செய்யப்பட்டு, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும்.இந்த வரைவு மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: சட்ட விரோதமாக குடியேறி யவர்கள் என்ற வாசகம் நீக்கப்படும்

இந்திய சட்டத்தின்படி, வெளிநாடுகளில் இருந்து வந்து, இந்தியாவில், தொடர்ந்து, ஏழு ஆண்டுகள் தங்கியிருப்பவர்கள், குடியுரிமை கோரலாம் அகதிகளாக வருபவர்கள், அவர் களுடைய நாட்டில் இருந்து வெளியேறியதற்கான சான்றிதழையும், குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது தாக்கல் செய்யவேண்டும். புதிய மசோதாவில், இந்தப் பிரிவு நீக்கப்படுகிறது

குடியுரிமை பெறுவதற்கான கட்டணமும் குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்ப உறுப்பி னருக்கும், 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள ஹிந்துக்களுக்கு, இந்தக் கட்டணம், 100 ரூபாயாக

Advertisement

இருக்கும்

குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தை, தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். புதிய மசோதாவின் படி, தாங்கள் தங்கியுள்ள மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி.,யிடம் தாக்கல் செய்தால் போதும் இந்தியக் குடியுரிமை பெறு வதன் மூலம், வங்கிக் கணக்கு துவங்க லாம்; டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, ஆதார் எண் ஆகியவற்றை பெறலாம்.
அகதிகள் எத்தனை பேர்? : மத்திய அரசின் கணக்கின்படி, தற்போது நாட்டில் அகதிகளாக உள்ள ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சமாக உள்ளது. ஜோத்பூர், ஜெய்சல்மார், ஜெய்ப்பூர், ராய்பூர், ஆமதாபாத், ராஜ்கோட், கட்ச், போபால், இந்துார், மும்பை, நாக்பூர், புனே, டில்லி, லக்னோவில் மட்டும், பாகிஸ்தான் ஹிந்து அகதிகளுக்கான, 400 குடியிருப்புகள் உள்ளன.

இந்தியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக உள்ளனர். இதில், இலங்கையைச் சேர்ந்தவர்கள், ஒரு லட்சம் பேர்; ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், 10 ஆயிரம் பேர். மேலும், திபெத், மியான்மரைச் சேர்ந்தவர்களும், இந்தியாவில் அகதிகளாக உள்ளனர்.- பார்லிமென் டில் கேள்விக்கு அளித்த பதிலில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். - நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
உன்னை போல் ஒருவன் - Chennai,இந்தியா
23-ஜூன்-201619:55:31 IST Report Abuse

உன்னை போல் ஒருவன்பச்சைகளின் நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாது ... இது வரவேற்க தக்க முடிவு ...

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-201619:13:29 IST Report Abuse

Indianஅப்போ தமிழர்கள் ?? தமிழர்கள் என்றாலே இளிச்ச வாயன் தானே..

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
23-ஜூன்-201622:21:42 IST Report Abuse

Agni Shivaஆமாம், திராவிட கட்சிகளின் விஷமத்தனமான வலையில் இருந்து மீளும் வரை. ...

Rate this:
AG MOHD SALI - THANJAVUR,இந்தியா
23-ஜூன்-201619:09:27 IST Report Abuse

AG MOHD SALIஇந்தியா வில் மத சாயம் அதிகமாகி விட்டது , இது எங்கு கொண்டு போய் விடுமோ கடவுள் எல்லோரையும் காப்பாற்ற வேண்டூம்

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X