புதுடில்லி: பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டை ஒருங்கிணைக்க வேண்டுமென, 'நிடி ஆயோக்' உறுப்பினர் பிபெக் தேப்ராய் தலைமையிலான நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
'நிடி ஆயோக்' உறுப்பினர் பிபெக் தேப்ராய்
தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, ரயில்வே பட்ஜெட் குறித்த ஆய்வுகளை மேற் கொண்டு, அறிக்கைசமர்ப்பித்துள்ளது. இதில், 'ரயில்வே பட்ஜெட்டை, மத்திய பொது பட்ஜெட்டுடன் ஒருங்கிணைக்க வேண்டும்.
ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தேவையில்லை' என பரிந்துரைக்கப் பட்டுள்ளது. 20 பக்கம் அடங்கிய இந்தஅறிக்கையை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அனுப்பியுள்ள,
பிரதமர்
நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, ரயில்வே அமைச்சகத்தின்
கருத்தை கேட்டுள்ளது.
இப்பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், பிரிட்டிஷ் ஆட்சிக்
காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும்நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (15)
Reply
Reply
Reply