சென்னை: 'தேச பக்தர் கிருஷ்ண சாமி சர்மா நினைவஞ்சலி நிகழ்ச்சியில், அனைவரும் பங்கேற்பது அவசியம்' என, காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை: தியாகி கிருஷ்ணசாமி, நல்ல தேச பக்தர் என, காந்தியடிகளால் போற்றப்பட்டவர்; கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.,யுடன் சிறை சென்றவர்; தேசியத்தையும், தமிழையும் உயிராக மதித்தவர்; மூடநம்பிக்கைகளை எதிர்த்தவர். அவரின் நினைவு தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம், கச்சபேசுவரர் கோவில் மண்டபம் அருகே, காலை, 10:00 மணிக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து ஊர்வலமும் நடக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.