பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இன்ஜி., 'ரேங்க்' பட்டியலிலும்
கேரள மாணவி முதலிடம்

சென்னை: அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வெளியிட்டார்.

இன்ஜி., 'ரேங்க்' பட்டியலிலும் கேரள மாணவி முதலிடம்

இதில், கேரள மாணவி முதலிடம் பிடித்தார். கேரள மாநிலம், மூவாட்டுப்புழாவில் வசிக்கும் மாணவி அபூர்வா தர்ஷினி, முதலிடம் பிடித்தார்.இவர், மூவாட்டுப்புழாவில் உள்ள தனியார் பள்ளியில், கணிதம் மற்றும் அறிவியல் இணைந்த முதல் பாடப்பிரிவில், பிளஸ் 2 படித்துள்ளார்.

பொதுத்தேர்வில், 1,198 மதிப்பெண் மற்றும் 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றுள்ளார். தஞ்சாவூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர்,இரண்டாமிடம் பெற்றுள்ளார்.ஈரோடு, ஐடியல் பள்ளியில் படித்த இவர், மருத்துவ தரவரிசையில் இரண்டாவது இடம் பெற்று, சென்னை எம்.எம்.சி., கல்லுாரியில் சேர்ந்ததால், இன்ஜி., படிப்பில் சேரவில்லை என, தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு இன்ஜி., தரவரிசையில், முதல், 10 இடம் பிடித்தவர்களில், நான்கு பேர் மட்டுமே, தமிழகத்தில் படித்தவர்கள். மருத்துவ தர வரிசையிலும், கேரளாவில் படித்த, ஆர்த்தி என்ற மாணவி, தமிழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெசவு தொழிலாளி மகள் சாதனை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, ஒன்னுபுரம் கிராமத்தை சேர்ந்த, நிவேதா என்ற

மாணவி, இரண்டாம் பிடித்தார். தனசேகரன் - பரிமளா என்ற நெசவுத் தொழிலாளி பெற்றோரின் மகளான இவர், ஒன்னுபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2வில், 'டெக்ஸ்டைல் டெக்னாலஜி' தொழிற்கல்வி பாடப்பிரிவில் படித்து, 1,166 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தொழிற்கல்வியில், 200க்கு 200 'கட் ஆப்' பெற்று, தரவரிசையில், இரண்டாமிடம் பிடித்துள்ளார். கோவை, பி.எஸ்.ஜி., கல்லுாரியில் கம்யூ., சயின்ஸ் பாடப்பிரிவில்சேர உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், துருகம் கிராமத்தை சேர்ந்த ஜெயசித்ரா என்ற மாணவி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 'டெக்ஸ்டைல் டெக்னாலஜி' தொழிற்கல்வி பிரிவில் படித்து, 1,168 மதிப்பெண் பெற்று, தரவரிசையில், மூன்றாம் இடம் பெற்றுள்ளார். இவரது தந்தை ரவிச்சந்திரன் நெசவுத்தொழிலாளி. இவர், அண்ணா பல்கலையில், 'எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' பிரிவை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.
மருத்துவ படிப்பு வேண்டாம்! : நான், கேரளாவில் தனியார் நிறுவனத்தில், 'பிளான்ட்' பொறியாளராக பணியாற்றுகிறேன். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் உள்ள உடுமலைப் பேட்டை, எங்கள் சொந்த ஊர். அதனால், தமிழக தரவரிசை யில் அபூர்வாவுக்கு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. அவளுக்கு மருத்துவம் படிக்க ஆசையில்லை. அதனால், மருத்துவத்திற்கு விண்ணப்பிக்கவே வேண்டாம் என, தடுத்து விட்டாள்.

என் குடும்பத் தினர் பலர், கணினி பொறியாளராக உள்ளனர். அதேபோல், என் மகளுக்கும் அண்ணா பல்கலை யில், 'எலக்ட்ரானிக் அண்டு கம்யூனி கேஷன்' தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். அசோக்குமார், அபூர்வாவின் தந்தை
ஆந்திரா, கேரளா ஆதிக்கம் ஏன்? : இன்ஜி., தர வரிசையில், முதலிடம் பிடித்த அபூர்வா தர்ஷினி, கேரளா பாடத்திட்டத்தில் படித்தவர். மூன்றாம்இடம் பிடித்த பரதன்,நெய்வேலியை சேர்ந்தவர். ஆனால், ஆந்திர மாநிலம், நெல்லுார், நாராயணா ஜூனியர்

Advertisement

கல்லுாரியின் விடுதியில் தங்கி படித்துள்ளார்.

நான்காம் இடம் பிடித்த ரக் ஷனா, ஐந்தாம் இடம் பிடித்த ஷிவராம் கிருத்விக், ஆறாம் இடம் பிடித்த, குடியாத்தத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா, ஏழாம் இடம் பிடித்த ஷேக் அப்துல் சமீர் ஆகியோரும், ஆந்திராவில் இடைநிலை கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 முடித்துள்ளனர்.

மொத்தம், 200 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, ஏழு பேரில், ஒருவர் மட்டுமே தமிழக மாணவர். மீதமுள்ள, ஆறு பேரில், ஒருவர் கேரளாவில் படித்தவர்; மற்றவர்கள் ஆந்திராவில் படித்த வர்கள். இந்த மாணவர்கள் வெளி மாநிலத்தில் படித்தாலும், தமிழகத்தை இருப்பிடமாக கொண்டவர்கள் என்பதால், தமிழக இட ஒதுக்கீடு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

வெளி மாநிலத்தில் படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறும்போது, 'தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், ஆந்திரா விலும், கேரளாவிலும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கின்றனர். 'குறிப்பாக, ஆந்திராவில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற பெரிய அளவில் உதவுகிறது. தமிழக பாடத்திட்டம் அதற்கு கை கொடுக்காததால், ஆந்திராவில் படிக்க சென்றோம்; இதன் மூலம், எதிர்பார்த்த கல்லூரிகளில் சேர முடிகிறது' என்றனர்.

Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
26-ஜூன்-201612:45:42 IST Report Abuse

Barathanதமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும் தமிழ் நாடு தலைமை செயலகம் முதல் சினிமா துறைவரை மலையாளிகள் தான் டாப். அவர்களுக்கு பிறகு தான் இளிச்சவாயர்களான தமிழாளர்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடே நீயும் வாழ்க கூடவே இந்த இளிச்ச வாயன் தமிழர்களையும் வாழ வை

Rate this:
Subramaniam - Prague,செக் குடியரசு
25-ஜூன்-201613:18:32 IST Report Abuse

Subramaniamசென்னை விமான நிலையத்தில் ஹிந்தி தெரியாத தமிழர்களை மிரட்டும் ஹிந்தியர்களை விரட்ட அம்மா அவர்கள் ஆவண செய்தல் வேண்டும். தமிழர்களை நசுக்க நினைக்கும் மலையாளிகளுக்கு ஏன் தமிழக பல்கலைக்கழகங்களில் இடம் கொடுக்க வேண்டும்,

Rate this:
RAMASWAMY S - CHENNAI,இந்தியா
23-ஜூன்-201619:35:55 IST Report Abuse

RAMASWAMY SCONGRATES TO SUCCESSFUL CANDIDATES. ALL THE BEST . THE PRESENT RESERVATION POLICY PREVENTS GOOD MARK SCORER FOR ENTERING MEDICAL AND ENGINEERING. GOVT SHOULD HELP ALL GOOD MARK SCORERS OF FORWARD , BACKWARD COMMUNITY PEOPLE UNDER ONE SCANNER SO THAT ALL WILL GET SATISFIED. THE GOVT AND OPPOSITION PARTY SHOULD COME FORWARD TO HELP POOR FORWARD COMMUNITY CANDIDATES UNLESS THEIR LIFE IS MISARABLE.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X