சென்னை ''தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில், விலைவாசி பன்மடங்கு உயர்ந்து விட்டது,'' என, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பொருட்களின் விலையை பட்டியலிட்டு குற்றஞ்சாட்டினார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: தற்போது, தகவலறியும் உரிமை சட்டம் எல்லாம் வந்து விட்டது. எனவே, அரசு நிர்வாகத்தில் வெளிப் படைத் தன்மை இருக்க வேண்டும். சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் தெரிந்து கொள்ள, நேரடி ஒளிபரப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி விவரத்தை, வேளாண் துறை இணையதளத் தில் வெளியிட வேண்டும். மாவட்ட வாரியாக, விவசாயிகள் பெயர், அவர்கள் தள்ளுபடி பெற்ற விவரம் இடம் பெற வேண்டும். கடன் தள்ளுபடி செய்யப்பட்ட, கூட்டுறவு வங்கிக ளுக்கு வழங்கப்படும் நிதி விவரம் இடம் பெற வேண்டும்.
ஆந்திர அரசு செய்தது போல், தேசிய வங்கிக ளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய சங்க பிரதிநிதிகளை, முதல்வர் சந்தித்து பேச வேண்டும்.
அமைச்சர் செல்லுார் ராஜு: முதல்வர்
அளித்த வாக்குறுதியின்படி, சிறு, குறு விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
ஆந்திராவில், விவசாயிகளின், 1.50 லட்சம் ரூபாய்; தெலுங்கானா மாநிலத்தில், ஒரு லட்சம் ரூபாய் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒரு
லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.
ஸ்டாலின்: 'பால் உற்பத்தி கூட்டுறவுஒன்றியங்களில், பால் உற்பத்தியாளர்களிடம், பால் கொள்முதல் செய்வதில்லை' என, பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் உள்ள பால் முழுவதையும் கொள்முதல் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சண்முகநாதன்: கூட்டுறவு ஒன்றியத்தில் உறுப்பினர்களாக இருக்கும், பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பால் முழுவதும், கொள்முதல் செய்யப்படுகிறது. சிலர் தரமற்ற பாலை கொடுக்க முயற்சிக்கும் போது, அதை வாங்குவதில்லை. இதனால், அவதுாறு பரப்புகின்றனர்.
ஸ்டாலின்: விலைவாசி உயர்வால், நடுத்தர குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். காமதேனு கூட்டுறவு வங்கியில், 2011ல் ஒரு கிலோ, 38 ரூபாய்க்கு விற்ற கடலை பருப்பு, தற்போது, 92 ரூபாய், துவரம் பருப்பு, 62 ரூபாயில் இருந்து, 142 ரூபாயாகவும்; உளுந்தம் பருப்பு, 56 ரூபாயில் இருந்து, 167 ரூபாயாகவும்; நல்லெண்ணெய், ஒரு லிட்டர், 84 ரூபாயில் இருந்து, 181ரூபாயாகவும்; மிளகாய், ஒரு கிலோ, 70 ரூபாயில் இருந்து, 218 ரூபாயாகவும்
உயர்ந்துள்ளன. விலைவாசியை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் காமராஜ்: கடந்த
ஐந்து ஆண்டுகளில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, பல நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு மற்றும் உளுந்தம்
பருப்பு கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
துரைமுருகன்: ஐந்து ஆண்டுகளில், விலைவாசி ஏறி இருப்பதை, எதிர்க்கட்சி தலைவர் ஆதாரத்துடன் கூறுகிறார்.
அமைச்சர் பன்னீர்செல்வம்: இதே
சட்டசபையில், உங்கள் ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, விலைவாசி
உயர்வு குறித்து பேசும் போது, 'கூலித் தொழிலாளர் முதல், அரசு ஊழியர் வரை
வருமானம் உயர்ந்துள்ளது.இதனால், விலைவாசி உயர்ந்துள்ளது' என, கூறினார்.அமைச்சர் காமராஜ்: உங்கள் தலைவர் முதல்வராக இருந்த போது, 'மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளதால், விலைவாசி உயர்ந்துள்ளது' என்றார்.இவ்வாறு விவாதம் நடந்தது.
(அமைச்சர் காமராஜ் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, அரசு எடுத்துள்ள நடவடிக் கைகள் எனக்கூறி நீண்ட விளக்கம் அளித்தார். இதற்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'அமைச்சர்கள் பதில் கூறுகிறோம் எனக் கூறி, நீண்ட நேரம் எடுக்கின்றனர்' என, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் குற்றஞ்சாட்டினர்).
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (120)
Reply
Reply
Reply