புதுடில்லி:'வங்கிகளின் தயக்கத்தால், 240 கார்ப்பரேட் நிறுவனங்கள், பழைய கடனை சீரமைத்து, மறுகடன் வாங்க முடியாத நிலையில் உள்ளன' என, இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: இந்தியாவில், 500 கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் குறித்து, ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அவை வாங்கியுள்ள, 11.80 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையில், ஏற்கனவே கடன் வாங்கி, ஒழுங்காக திரும்பச் செலுத்தாமல், மறுசீரமைக்கப்பட்ட கடன், 5.10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
வங்கிகளின் எண்ணம்: எஞ்சியுள்ள, 6.70 லட்சம் கோடி ரூபாய் கடனை, மறுசீரமைத்து,
புதிய கடனாக மாற்றுவது, அபாயகரமான நடவடிக் கையாக இருக்கும் என, வங்கிகள்
கருதுகின்றன. அதனால், அக்கடன்களை மறுசீரமைக்க வங்கிகள் முன்வராமல் உள்ளன.
இந்த வகையில், 240 நிறுவனங்கள், மறுகடன் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
நடப்பு, 2016 - 17ம் நிதியாண்டிற்குள், 100 நிறு வனங் கள், 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன் களை மறுசீரமைக்க வேண்டும். அதில், 39 நிறுவனங் களின், 52,700 கோடி ரூபாய் கடன், ஏற்கனவே மறு சீரமைக்கப்பட்ட கடன் பிரிவில் உள்ளன.
கடனை மறுசீரமைத்து மீண்டும் கடன் வழங்கினால், இடர்ப்பாடு ஏற்படலாம் என்ற பிரிவில், 33 நிறு வனங் களின், 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது.
இந்த வகையில், ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம், ஏற்கனவே சீரமைக்கப்பட்ட கடன்களுட னும்,ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், இடர்ப்பாடுள்ள மறுகடன் பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
இந்த
இரு பிரிவிற்கும் இடைப்பட்ட நிலையில், அதாவது, மறுகடன் வழங்குவதில்,
சரிபாதி சாதக, பாதக அம்சங்களைக் கொண்டதாக, வேதாந்தா நிறுவனம் உள்ளது.
ஒன்பது துறைகள் கடன்களை
மறுசீரமைக்க தேவையான மொத்த தொகை யில், ஒன்பது
துறைகளின் பங்கு, 76 சதவீதத் திற்கும் அதிகமாக உள்ளது.இதில், உலோகம் மற்றும் சுரங்கத் துறை, 15 சதவீதத்துடன்
முதலிடத்தில் உள்ளது.
அடுத்து, அடிப்படை கட்டமைப்பு மற்றும் கட்டுமானம், 13 சதவீதம்; சிமென்ட், 10; மின்சாரம், 9; தொலைத்தொடர்பு, 9; கப்பல், 7; ரியல் எஸ்டேட், 6; ஜவுளி மற்றும் சர்க்கரை துறைகள் தலா, 4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (22)
Reply
Reply
Reply