தமிழகம், பள்ளி கல்விதுறை மத்திய அரசு, குட்டு திட்டங்கள் கிடப்பில் கண்டிப்பு | தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு... குட்டு! :திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டதாக கண்டிப்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு... குட்டு! :திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டதாக கண்டிப்பு

தமிழகத்தில், பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள், மிக மோசமாக உள்ளதாக மத்திய அரசு, 'டோஸ்' விட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவி திட்டங்களை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதாக, துறையின் செயலர் சபிதாவை நேரில் அழைத்து கண்டித்ததுடன், அவருக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு... குட்டு! :திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டதாக கண்டிப்பு

அனைத்து மாணவர்களும், 10ம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நோக்கில், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தேவையான நிதியை, மத்திய அரசு வழங்குகிறது.
கடந்த, இரு ஆண்டுகளில் மட்டும், 1,700 கோடி ரூபாய்க்கு மேல், தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டப்படி, மாநில அரசின் செயல் பாடுகளை ஆய்வு செய்து, அதன்படி, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. தமிழகத்தில் பல கல்வித் திட்டங்களை கிடப்பில் போட்டு, அலட்சியமாக இருந்ததால், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவை டில்லிக்கு அழைத்து, மத்திய மனித வள அமைச்சக அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.
அவருடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும்

விவரங்களை கடிதமாகவும், தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் சபிதாவுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கவலையளிக்கும் கல்வித்தரம்:
* தமிழகத்தில், 10 சதவீத பகுதி களில், மக்கள் குடியிருப்பு பகுதி களில், 5 கி.மீ., சுற்றளவில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும்
* 2015ல், கல்வித் துறையில் தேசிய இலக்கு கணக்கெடுப்பின் படி, உயர்நிலை கல்வி தரத்தில் தமிழகம் பின்தங்கியுள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழகத்தில் இதுவரை, 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு அளவிலான, தொழிற்கல்விபாடத் திட்டங்கள் துவங்கப்படவே இல்லை. அதற்கு பல முறை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள்:

* மொத்தம், 1,096 புதிய பள்ளிகளில், வெறும், 200 பள்ளிகளுக்கு மட்டுமே கட்டடப் பணிகள் முடிந்துள்ளன. 845 பள்ளிகளுக்கு விரைவில் முடிக்க வேண்டும்
* 2010 - 11ம் ஆண்டில், 878 பள்ளிகள்; 2011 - 12ல், 1,153 பள்ளிகளின் கட்டடங்களை வலுவாக்க அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் கழிப்பறையைத் தவிர மற்ற பணிகளில், ஒரு பள்ளியில் கூட கட்டடப் பணியை, இந்த ஆண்டு மே மாதம் வரையிலும் துவங்கவில்லை.
தற்போது, கச்சா பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், இனி இந்த பணிகளை துவங்கினால், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிதியில், பணிகளை முடிக்க முடியாது. அதே நேரம், இந்த திட்டங்களை திரும்ப
ஒப்படைப்பதாக, மத்திய அரசிடம் தமிழக பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது
* 2010 - 11ம் ஆண்டில், 735 பள்ளிகளில் கணினி அறைகள்; 860 பள்ளிகளில், கைவினை வகுப்பறை கட்டடங்கள்; 837 பள்ளிகளில் நுாலகங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. அதே போல், 2011 - 12ல், 1,795

Advertisement

பள்ளிகளில் கைவினை அறைகள்; 919 பள்ளிகளில்அறிவியல் ஆய்வகங்கள்; 768 பள்ளிகளில், கணினி அறைகள்; 1,036 நுாலக அறைகள்; 170 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி போன்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவற்றையும் தற்போது திருப்பி அளிப்பதாக, தமிழக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது
* இந்த திட்டங்களுக்கு, மத்திய அரசிடம் தமிழக அரசு புதிதாக அனுமதி கேட்கவில்லை; ஒப்புதல் கேட்டால் அளிக்க தயாராக உள்ளோம்
* தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில், 99.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறும் போது, 9ம் வகுப்பு, 10ம் வகுப்புகளில், 65.30 சதவீதம் பேரே சேர்கின்றனர். எனவே, தமிழக பள்ளிகளில் இடைநிலை கல்வியில் அதிக அளவில் இடைநிற்றல் உள்ளது.
இந்த இடைநிற்றலில், கோவை - 53.72 சதவீதம்; சென்னை - 57.34 சதவீதம்; காஞ்சிபுரம் - 58.57
சதவீதம் என, முன்னணியில் உள்ளன.
மேலும், பொதுவாக பள்ளிப் படிப்பு இடைநிற்றல் அளவு, 2014 - 15ல் 3.98 சதவீதமாக இருந்து, அடுத்த கல்வி ஆண்டில், 4.50 சதவீதமாக அதிகரித்துள்ளது
* மாணவியர் விடுதிகளில், 100 பேருக்கு, 71 பேர் மட்டுமே உள்ளனர். விடுதியில் மாணவர்களின்
எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழகத்தில், 5,265 பள்ளிகளில் கணினி வழி, 'ஸ்மார்ட்' வகுப்புகளை துவங்க, 2010, 2011ம் ஆண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. இதில், 4,345 பள்ளிகளில் இதுவரை, 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டங்களை துவக்கவே இல்லை. இதனால், மத்திய அரசு ஒதுக்கிய, 43 கோடி ரூபாய் எந்த பயனுமின்றி உள்ளது
* அரசு பள்ளிகளில், 5,865 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வில்லை. 'ஆதார்' பதிவிலும் தமிழகம் பின்தங்கி உள்ளது. இவ்வாறு மத்திய அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kenmaikko sekar - dharmapuri  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-201622:15:07 IST Report Abuse

Kenmaikko sekarமிக்க மகிழ்ச்சி.என்னால கருத்து சொல்ல முடியல.

Rate this:
VKV.RAVICHANDRAN - Nannilam,இந்தியா
24-ஜூன்-201621:24:16 IST Report Abuse

VKV.RAVICHANDRANசபிதா தலையில் வைக்கப்பட்ட குட்டு அந்த அம்மையாருக்கு வலிக்கிறதோ இல்லையோ ,கல்வித்துறை செயலரின் கையாலாகாத தனத்தினால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது . கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மறை முகமாக உதவுவதற்கு , அதிகார வர்க்கம் மைய அரசின் நிதியை பயன்படுத்தாமல் மாணவர்களை அரசு பள்ளியில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப இப்படி செயல் படுகிறதோ என்னவோ ? The nexus between the education department & private school must be thoroughly probed into..

Rate this:
G.Prabakaran - Chennai,இந்தியா
24-ஜூன்-201620:21:46 IST Report Abuse

G.Prabakaranஜெ வுக்கு வக்கு இருக்கா இந்த குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல.

Rate this:
மேலும் 90 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X