சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சென்னையில் 5 பெண்கள் படுகொலை


சென்னை : சென்னையில், தாய் மற்றும் மூன்று மகள்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதே நேரத்தில், ரயில் நிலையத்தில், சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் ஒருவர், மிக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், கூடுதல் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் 5 பெண்கள் படுகொலைஇரு கொடூர சம்பவங்கள் குறித்த விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரைச் சேர்ந்தவன் சின்னராஜ், 35; ஸ்வீட் மாஸ்டர். 2012ல், திண்டுக்கல் மாவட்டம் பழநியில், ஒரு பேக்கரியில் வேலை பார்த்துள்ளான். அப்போது, அருகே இருந்த தேநீர் கடையில் வேலை பார்த்த, சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தாலுகா, கட்டயம்பட்டியைச் சேர்ந்த, சின்னதுரையுடன் நெருங்கி பழகி உள்ளான். பழநியில், வாடகை வீட்டில் குடியிருந்த சின்னதுரையின்
வீட்டிற்கு, சின்னராஜ் அடிக்கடி சென்று வந்த போது, தன்னை விட, ஐந்து வயது மூத்தவரும், மூன்று பெண் குழந்தைகளின் தாயுமான, சின்னதுரையின் மனைவி பாண்டியம்மாளுக்கும், அவனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை, பாண்டியம்மாளின் கணவர் கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில், கள்ளக்காதல் ஜோடி, பழநியை விட்டு வெளியேறி உள்ளது.
சின்னராஜுக்கு, ஏற்கனவே சென்னையில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. 2012ல், பாண்டியம்மாள், 35, அவரது மகள்கள் பவித்ரா, 19, பரிமளா, 18, ஸ்நேகா, 16, ஆகியோருடன், சென்னை, ராயப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள முத்து தெருவில், ராஜாபகதுார் என்பவரின் வீட்டில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில், ஐந்து பேரும் வாடகைக்கு குடியேறினர். சின்னராஜ் வீட்டிலேயே இனிப்பு பலகாரங்கள் செய்து, கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளான். பட்டினப்பாக்கத்தில் உள்ள கடையில் வேலையும் பார்த்துள்ளான். பாண்டியம்மாள் மகள்களில் பவித்ராவை, சோழிங்கநல்லுாரில் உள்ள, தனியார் பாலிடெக்னிக்கிலும், பரிமளாவை, 'பாரா மெடிக்கல்' கல்லூரியிலும் படிக்க வைத்துள்ளான். இளைய மகள் ஸ்நேகா, பிளஸ் 2 படித்து வந்தார்.

மகள் மீது வெறி : மூன்று குழந்தைகளையும் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்த போதிலும், பாண்டியம்மாளிடம், மூத்த மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, சின்ராஜ் கூறியுள்ளான். இதனால், குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க துவங்கியது. தன்னுடன் உறவு வைத்திருப்பதோடு, மகளுக்கும் வலை வீசுகிறானே என, பாண்டியம்மாள் வெகுண்டெழுந்து உள்ளார். இதனால், வீட்டிற்குள்ளேயே அவனை அனுமதிக்க மறுத்ததுடன், தான் வீட்டில் இருக்கும் போது மட்டுமே வர வேண்டும் என, நிபந்தனையும் விதித்துள்ளார். இதனால், பல இரவுகளை, மெரினா கடற்கரையிலேயே கழித்து வந்துள்ளான் சின்னராஜ். எனினும், அவனுக்கு பவித்ராவை அனுபவிக்க வேண்டும் என்ற வெறி இருந்துள்ளது. பாண்டியம்மாளும், அவனுடன் உறவு கொள்வதை முற்றிலும் நிறுத்தியுள்ளார்.
இதனால், சின்னராஜ், தன் உழைப்பில் மகள்களை படிக்க வைக்கும் பாண்டியம்மாள், தன்னை ஒரு கருவேப்பிலை போல் பயன்படுத்துகிறாரே என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளான். மேலும், பாண்டியம்மாள் மற்றும் அவரது குழந்தைகளின் நடத்தை மீதும், அவனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. தீர்த்துக்கட்டினான் : சில நாட்களுக்கு முன், பாண்டியம்மாள் மற்றும் குழந்தைகளுடன் சின்னராஜ், காரைக்குடிக்கு சென்றான். ஜூன் 20ம் தேதி, அனைவரும் சென்னை திரும்பியுள்ளனர். அன்று இரவு, போதையில் அவன் தகராறு செய்துள்ளான். இதனால், அவனை ஹாலில் படுக்க வைத்துவிட்டு, குழந்தைகளுடன் பாண்டியம்மாள், படுக்கை அறையில் துாங்கி உள்ளார்.


ஆனால், கதவு திறந்தே இருந்துள்ளது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு திடீரென எழுந்த சின்னராஜ், இரும்பு கம்பியால், ஆழ்ந்து துாங்கிக் கொண்டிருந்த, பாண்டியம்மாள், பவித்ரா, பரிமளா ஆகியோரை, இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொடூரமாக கொன்றுள்ளான். அப்போது விழித்து எழுந்த ஸ்நேகாவை, 'அயர்ன் பாக்ஸ்' ஒயரில் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளான்.

பிணத்துடன் வசித்தான் : ரத்த வெள்ளத்தில் கிடந்த நான்கு பேரையும், அருகருகே படுக்க வைத்து, உடைகளை களைந்து நிர்வாணமாக்கி உள்ளான். பின், யாரோ மர்ம நபர்கள் கற்பழித்து கொன்று விட்டது போல நாடகமாட, போர்வையை கசக்கி, சடலங்களின் மேலே போட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறி உள்ளான்.
பின், அவ்வப்போது வீட்டிற்கு வந்து, போதையில் பிணங்களுடன் வசித்துள்ளான். துர்நாற்றம் அதிகமானதால், 'ரூம் ஸ்பிரே' அடித்ததுடன், அளவுக்கு அதிகமாக பினாயிலும் ஊற்றி உள்ளான். நாற்றம் அதிகமானதால், பக்கத்து வீட்டார் அவனை கேள்விகளால் துளைத்து எடுக்க துவங்கி உள்ளனர். அவர்களிடம், 'பாண்டியம்மாள், குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டாள்; வீட்டில் எலி செத்துக் கிடக்கிறது' எனக்கூறி, அவனே, ஒரு எலியை கொன்று வந்து காட்டிவிட்டு மாயமாகி உள்ளான்.
நேற்று முன்தினம் மாலை வரை, அவன் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த பக்கத்து வீட்டார், ஜன்னலை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, பாண்டியம்மாள் மற்றும் மூன்று பெண்கள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இதுகுறித்து, வீட்டு உரிமையாளர் ராஜாபகதூர், சென்னை ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது, அழுகிய நிலையில் பிணங்கள் கிடந்துள்ளன. சின்னராஜ் மாயமாகி இருந்தான். அவனது மொபைல் போனும், 'சுவிட்ச் - ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
நேற்று காலை, அவன் மெரினா கடற்கரையில் பதுங்கி இருந்த போது, போலீசாரிடம் சிக்கினான். விசாரணையில், நான்கு பெண்களையும் கொன்றதை, அவன் ஒப்புக் கொண்டான்.

போலீசாரிடம், அவன் அளித்துள்ள வாக்குமூலம்: என்னை திருமணமே செய்துக் கொள்ள விடாமல், அடிமை போல் பாண்டியம்மாள் நடத்தினாள். அவளது மகளை திருமணம் செய்துக் கொள்ள ஆசைப்பட்டேன். பின், தவறை உணர்ந்து பாண்டியம்மாளிடம் மன்னிப்பும் கேட்டேன். ஆனால், அவள் என்னை, ஒரு புழுவைப் போல நடத்தினாள். நான் சம்பாதிக்கும் பணம் மட்டும் அவளுக்கு வேண்டும்; நான் வேண்டாம் என்றாகிப் போனது. இதனால், பாண்டியம்மாள் மற்றும் அவளது மகள்களை கொன்று விட்டேன். இவ்வாறு அவன் கூறியுள்ளான்.

கற்பழிப்பு நாடகம் : போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கொலைக்கு பின், பாண்டியம்மாள் உள்ளிட்ட நான்கு பேருடனும், சின்னராஜ் உறவு கொண்டுள்ளான். அதுபற்றி கேட்டால், 'மர்ம நபர்கள் கற்பழித்து, மனைவி, மகள்களை கொன்று விட்டதாக நாடகமாட அப்படி செய்தேன்' என, கூறுகிறான். மெரினா கடற்கரையில் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை எடுக்க, அவன் வந்தபோது பிடித்து விட்டோம்' என்றார்.

சாப்ட்வேர் நிறுவன பெண் இன்ஜி., கொலை : நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கரம்

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் இன்ஜினியரை, வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம், பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்தவர் சந்தான கோபாலகிருஷ்ணன். நுங்கம்பாக்கத்தில் உள்ள இ.எஸ்.ஐ., அலுவலகத்தில், உயர் பொறுப்பில் பணியாற்றி, கடந்த மாதம் ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள். இளைய மகள் சுவாதி, 24; செங்கல்பட்டு, பரனுார், 'மகிந்திரா டெக் சிட்டி'யில் உள்ள, 'இன்போசிஸ்' நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.
தினமும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து, மின்சார ரயிலில் பணிக்கு சென்று வந்தார். நேற்று காலை 6:30 மணியளவில், அவரது தந்தை இருசக்கர வாகனத்தில், ரயில் நிலையம் கொண்டு வந்து இறக்கி விட்டு சென்றுள்ளார். இரண்டாவது நடைமேடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து, சுவாதி ரயிலுக்காக காத்திருந்த போது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், அவர் அருகே வந்தான்.

Advertisement


அந்த வாலிபன் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளான். ஒரு கட்டத்தில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாலிபனை விட்டு சுவாதி விலகினார்.

துடிதுடித்து பலி : இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபன், 'டிராவல்ஸ் பேக்'கில் மறைத்து வைத்திருந்த அரிவாளால், சுவாதியின் முகம், கழுத்து பகுதி என, அடுத்தடுத்து நான்கு முறை வெட்டினான். சுவாதியின் கழுத்துக்கு மேலே பலமாக வெட்டு விழுந்ததால், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின், துடியாய் துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த கொலை சம்பவம், அங்கு இருந்தவர்களை உறைய வைத்தது. கொலையாளி அரிவாளை துாக்கி காட்டி மிரட்டியதால், அங்கு இருந்தவர்கள் நெருங்க அஞ்சினர். ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் போலீசாரும் இல்லாததால், கொலையாளியும் எளிதாக தப்பி சென்று விட்டான். பின், உடலை ரயில் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், ரயில் நிலையத்திற்கு வந்த சென்ற பயணிகள் மத்தியில் பரபரப்பு காணப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. நெஞ்சை உறைய வைக்கும் இந்த கொலை சம்பவம் குறித்து, எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தந்தை கண்ணீர் : மகள் பலியாகி கிடக்கும் தகவலறிந்து, சுவாதியின் தந்தை ரயில் நிலையத்திற்கு ஓடோடி வந்தார். அவர் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. 'மகள் சுவாதியை படிக்க வைத்து ஆளாக்கினேனே; இப்படி காட்சி பொருளாக ஆக்கிவிட்டானே படுபாதகன்' என, கதறி துடித்தார்.
ரயில்வே எஸ்.பி., விஜயகுமார் தலைமையிலான போலீசார், ரயில் நிலையத்திலேயே முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, சுவாதியை, அந்த வாலிபன் திட்டமிட்டு கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக, சுவாதியின் மொபைல் போன் எண், அவரது நெருங்கிய தோழிகள், பெற்றோர், அவருடன் பணிபுரியும் ஊழியர்களிடமும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதல் காரணமா? : செங்கல்பட்டு அருகே உள்ள, பொறியியல் கல்லுாரியில் சுவாதி படித்த போது, வண்டலுாரில் உள்ள பொறியியல் கல்லுாரியில் படித்த ஒருவனுடன், அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபன் தான், சுவாதியை காதலித்து வந்துள்ளான். காதல் பிரச்னை தொடர்பாக, இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது. அந்த வாலிபனை அடையாளம் கண்டு விட்ட போதிலும், அவன் தான் கொலை செய்தானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை; அவனை பிடித்து விசாரிக்க வேண்டும் என, ரயில்வே போலீசார் கூறினர்.

பாதுகாக்க போலீசும் இல்லை - கண்காணிக்க கேமராவும் இல்லை : கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதனால், கொலையாளியை உடனடியாக கண்டறிய முடியவில்லை. மேலும், கேமரா இல்லாததே துணிகரமாக கொலை செய்வதற்கு சாதகமாக இருந்துள்ளது.
கண்காணிப்பு கேமரா இல்லாத ரயில் நிலையம் என்பதால், குறைந்தபட்சம், ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால், சம்பவம் நடந்த போது ரயில்வே போலீசாரோ, ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரோ இல்லை.


Advertisement

வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-201613:59:50 IST Report Abuse

மதுரை விருமாண்டி//அங்கு இருந்தவர்கள் நெருங்க அஞ்சினர். ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் போலீசாரும் இல்லாததால், கொலையாளியும் எளிதாக தப்பி சென்று விட்டான்// சென்னை ரொம்பத் தான் பாதுகாப்பா இருக்கு.. அடேங்கப்பா..

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
26-ஜூன்-201606:42:28 IST Report Abuse

ஆரூர் ரங்புது ரயில் விட்டால் ஓட்டுக்கு கிடைக்கும் புதிய பயணிகள் வசதிகள் ஏற்படுத்தினால் ஓட்டுக்கு கிடைக்கலாம் ரயில் கட்டணத்தைக் குறைத்தால் ஓட்டுக்கு கிடைக்கும் ஆனால் பாதுகாப்புக்கு காமிரா பொருத்தினாலோ அதிக போலீஸ் காவல் போட்டு பயணிகளை கடுமையாக சோதனை செய்தால் ??ஒட்டு குறையலாம் என்பதே உண்மை யாரை யார் குறை சொல்வது ?

Rate this:
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
26-ஜூன்-201601:29:32 IST Report Abuse

OUTSPOKENஇன்றைய சினிமா, டி.வி சீரியல்கள், பெற்றோர்களின் அலட்சியம் இது போன்ற அவலங்களுக்கு முக்கிய காரணம். இது போன்ற சம்பவங்கள் நடப்பதும் அதற்காக வருத்தப்படுவதும் நீலிக்கண்ணீர் வெடிப்பதும் வாடிக்கை ஆகி விட்டது. இனிமேலாவது பாதிக்கப்பட்டவர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் ஒரு சேரவேண்டும். டி.வி. சீரியல்கள், குழந்தைகள், இளையர்கள் மனதை கெடுக்கும் நிகழ்ழிகளை தடுக்க வேண்டும்.இதற்கு தடையாக யார் இருந்தாலும் நாடு ரோட்டில் கொண்டுவந்து செருப்பால் அடிக்க வேண்டும். அரசியல் வாதிகளை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை. மக்கள் புரட்சி இப்போது அவசியம்

Rate this:
மேலும் 77 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X