சென்னை:தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னையில், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, நேற்று இரவு முதல் இதுவரை, ஆறு பெண்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். இது, தாய்மார்களை நிலை குலையச் செய்துள்ளது.
கூலிப் படையினரின் அட்டகாசம் தொடர்பாக, தொடர்ந்து அறிக்கை விட்டு வருகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், சட்டசபையிலும்
இது தொடர்பாக பேசினேன். ஆனால், என் குற்றச் சாட்டுக்கு நேரடியாக பதில்அளிக்காத முதல்வர் ஜெயலலிதா, முழுப் பூசணிக்காயை ஒரு பிடி சோற்றில் மறைப்பது போல், பூசி மெழுகி பேசியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
சட்டம் - ஒழுங்கு விஷயத்தில், எதிர்க்கட்சியின் சார்பில் முன் வைக்கப்படும்
குற்றச்சாட்டுகளுக்கு, முதல்வர் பொறுப்பாக பதிலளிக்காமல், அரசியல் சாயம் பூசி பதில் கூறுவது, மாநிலமக்களின் பாதுகாப்பின் மீது, அவருக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.
கூலிப் படைகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதை விட்டு விட்டு, 'நடப்பதெல்லாம் கூலிப்படை கொலைகளே அல்ல' என்று
செல்வது, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வருக்கு அழகல்ல.
எனவே, சட்டம் - ஒழுங்கை காக்க, தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (84)
Reply
Reply
Reply