சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமை ராணுவவீரர் மீது வழக்கு

Added : ஜூன் 25, 2016
Advertisement



தேனி,: கூடுதல் வரதட்சணை கேட்டு ஆசிரியையை கொடுமை செய்ததாக, ராணுவ வீரர் உட்பட 9 பேர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி ஆயுதப்படை போலீஸ்காரராக இருப்பவர் சேக்கிழார். இவரது மகள் அங்கையற்கண்ணி,27. கம்பம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவருக்கும், அல்லிநகரம் அருணாசலம் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மணிகண்டன்,30, என்ற ராணுவ வீரருக்கும் 2015 நவம்பரில் திருமணம் நடந்தது. அப்போது 30பவுன்நகை, சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்
பட்டது. இந்நிலையில் மணிகண்டன் தங்கைக்கு வரதட்சணையாக 50பவுன் நகை வழங்க பேசி முடித்தனர். அதனால் மணிகண்டன் தன்னிடம் மேலும் 20 பவுன் நகை பெற்றுவருமாறு கூறி துன்புறுத்துவதாகவும், இதற்கு மாமனார் பாலசுப்பிரமணியம், மாமியார் ராஜேஸ்வரி மற்றும் உறவினர்கள் 9 பேர் மீது உடந்தையாக இருப்பதால் நடவடிக்கைகோரியும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அங்கையற்கண்ணி
வழக்குத்தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மணிகண்டன் உட்பட 9 பேர் மீதும், தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X