சென்னையில் 161 ரவுடிகள் கைது

Added : ஜூன் 25, 2016 | கருத்துகள் (49) | |
Advertisement
சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களில் சிறப்பு தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.சென்னை மாநகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. நேற்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும்
சென்னையில் 161 ரவுடிகள் கைது


சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களில் சிறப்பு தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.சென்னை மாநகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. நேற்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் குற்ற சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடந்த 2 நாட்களில் மாநகர் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட இப்படையினர் 161 ரவுடிகளை கைது செய்துள்ளனர் . ரவுடிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தேடுதல் வேட்டை தொடரும் என சென்னை போலீஸ் கமிஷனர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-ஜூன்-201614:43:39 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஆயுள் பாரா தண்டனை அனுபவிப்பதுதான் ஆயுள் தண்டனை. 14 வருஷம், 20 வருஷம் ஆன போதும் என்பது கூடாது ஆயுள் என்பது அவன் சாகும் வரை (அவன் உயிரோடு உள்ளவரை )என்று கொள்ளனும்.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
27-ஜூன்-201606:33:22 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பக்கபலம் பின்பலம் பணபலம் படை பலம் பார்த்து பார்த்து சட்டம் செயல்படுகிறதோ என >>>>அய்யுற நேருகிறது. இவ்வாறான பட்டப்பகல் கொலைகளை காணும்போது>>> மக்களுக்கு பீதி யாக உள்ளது.
Rate this:
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
26-ஜூன்-201615:52:41 IST Report Abuse
Ravichandran சாத்தியமா சொல்றேன், அனைத்து போலீசும் ஒரேமாதிரி கொஞ்சம் நேர்மையா நடந்து நடவடிக்கை எடுத்த ரௌடி கூட்டம் அழிஞ்சு போகும், நிறைய பேருக்கு ஆபத் பாண்டவன் லாயர் பிரதேர்ஸ் தான், லாயர்களை நோட்டம் விட்டால் போதும் ரௌடி கூட்டம் கொத்து கொத்த மாட்டும், போலீஸ் பணி மிகையும் அற்புதமானது சவாலானது, போலீசுக்கு மரியாதை கொடுத்து பேசுவது அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X