புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவ படை வீரா்கள்உயிரிழந்தத சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பம்போரே பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீ்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 8 வீரா்கள் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர்.இச்சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவ படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திகிறேன் என்றார்.சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சி.ஆர்.பி.எப்., இயக்குநர் கூறுகையில் " ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்திப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் மத்திய அமைச்சர் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோஜ் பாரிக்கர் இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இறங்கல் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE