குசவன்குளத்தில் கொட்டப்படும் கழிவுகள் - ஏழாயிரம்பண்ணையில் தொற்று நோய் பீதி| Dinamalar

குசவன்குளத்தில் கொட்டப்படும் கழிவுகள் - ஏழாயிரம்பண்ணையில் தொற்று நோய் பீதி

Added : ஜூன் 25, 2016 | கருத்துகள் (3)
Advertisement

சாத்துார்: சாத்துார் அருகே ஏழாயிரம்பண்ணை குசவன்குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், தொற்று நோய் பீதியில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.ஏழாயிரம்பண்ணை 5 வது வார்டு குடியிருப்பு பகுதியில் குசவன்குளம் உள்ளது. முன்பு நன்னீர் குளமாக விளங்கிய இந்தக்குளம் தற்போது கழிவுகள் கொட்டப்படும் குப்பைமேடாக மாறிவிட்டது. குளத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. பன்றிகள் உலவும் பகுதியாகவும், திறந்தவெளி கழிப்பிடம் பகுதியாகவும் மாறிவிட்டது. இதன் அருகில் நாடார் வடக்குத்தெரு உள்ளது. இங்கு குடியிருப்போர் குளத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீராலும், குப்பையாலும் துர்நாற்றத்தின் பிடியில்,பல்வேறு உடல் நலப்பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். டி.பழனியம்மாள், “குசவன்குளத்தின் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து எச்சில் இலைகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. வினேதமான விஷ வண்டுகள் வீட்டிற்கு படையெடுக்கிறது. குளத்தில் எச்சில் இலைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்,”என்றார்.கே.கனிமொழி,“ தினமும் காலையில் நுாற்றுக்கணக்கான பன்றிகள் குளத்திற்கு வருகின்றன. இவை குப்பையை கிளறும் போது துர்நாற்றம் வீசுகிறது. பல ஆண்டுகளாக இந்த துர்நாற்றத்துடன் வாழ்கிறோம். ஊராட்சி நிர்வாகம் பன்றிகள் வளர்ப்பவர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. மழை பெய்தால் நரகத்தில் வசிப்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. சுகாதாரஅதிகாரிகள் பார்வையிட்டு கழிவுகளை அகற்ற வேண்டும்,”என்றார்.பி.பொன்னுதுரை,“ ஏழாயிரம்பண்ணையில் சேரும் பல்வேறு வகை குப்பை , இறந்து போகும் நாய்கள், பன்றிகளை குசவன்குளத்தில்தான் வீசுகின்றனர். இவற்றை முறையாக புதைக்காமல் வீசி செல்வதால் பிணவாடை வீசுகிறது. வயதானவர்கள், குழந்தைகள் இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். குளத்தை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என்றார்.Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201602:10:11 IST Report Abuse
மதுரை விருமாண்டி நானே பலப்பல முறை பதிவு செய்துள்ளேன். ஒரு நீர்நிலை, நீர்வழித்தடம், விடாமல் எங்கும் நீக்கமற பரவி நிற்கும் பிளாஸ்டிக் கழிவுகள் எப்படி படிப்படியாக நீராதாரத்தை கெடுத்து பன்றிகள் உழலும் சாக்கடைகளாக மாற்றிக் கொண்டு வருகிறது என்று.. 10,000 கோடி செலவுக்கு கணக்கை காண்பித்து போட்டேன் என்று சொன்ன சாக்கடை, மழைநீர் திட்டங்கள் அனைத்தும் படு கேவலமான தரத்தில் கட்டப்பட்டு அனைத்தும் கழிவுகளால் அடைபட்டு வீணாக்க கிடக்கின்றன.. இன்று கொள்ளையடித்து, நாளை கோடீஸ்வரனாக மாற நினைக்கும் திருடர்களின் கையில் அரசமைப்பு சிக்கி சீரழிந்து கிடக்கிறது. நடுவில் மதம், ஜாதி, அரசியல், நேரு, கருணாநிதி, இலங்கை, நேதாஜி, புண்ணாக்கு, மண்ணாங்கட்டி, தெருப்புழுதி, சண்டை, சச்சரவு என்று ஆரம்பித்து, முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி இலவசம், சாராயம் என்று ஊற்றிக் கொடுத்து, கெடுத்து மக்களை சிந்திக்க விடாமல் ஆள்பவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.. பணக்காரனுக்கு, வெளிநாட்டுக்காரனுக்கு, அதிகார வர்க்கத்துக்கு இந்தியாவை விற்று, சட்டங்களை அவர்களுக்காகவே இயற்றி, மோசடி செய்து மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.. ஸ்வாச் பாரத் ன்னு கூவிக் கொண்டு, சுவாசமே செய்ய முடியாதபடிக்கு ஸுஸு பாரத் ஆக இந்தியா நாறிக் கிடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
26-ஜூன்-201613:15:01 IST Report Abuse
Lion Drsekar சென்னையில் ராயபுரம்,ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஜாம்பாஸார் , தி நகர், இப்படி பல நரகங்களுக்கு வந்து பாருங்கள் நடைபாதை முழுவதும் கடைகள், அதை ஒட்டிய 10 அடிக்கு சாக்கடை நீர், கழிவு நீர் வாரியம் எடுத்துக்கொட்டிய சாக்கடைக்கு கழிவுகள், வாகனங்கள் மறுபுறம், பாதசாரிகள் பத்திரமாக செல்லவேண்டும் என்றால் நடுரோட்டில் மட்டுமே, அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் எப்படி நகர முடியும்? இங்கேயும் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் வானங்களும் சென்று கொண்டுதான் இருக்கின்றன, சுகாதாரம் பற்றி யாருமே கவலைப் பட்டதாக தெரியவே இல்லை, இந்த செய்திகளையும் தினமலர் பிரசுரத்தால் மட்டுமே வழி பிறக்கும், மா மன்ற உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே மற்ற அரசியல் தலைவர்கள் போல் வருவார்கள் எனவே தினமலர் பத்திரிக்கை தயவு செய்து இந்த சுகாதார சீர்கேட்டினை வெளிக்கொண்டுவந்தால் மட்டுமே வழி பிறக்கும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201601:54:07 IST Report Abuse
மதுரை விருமாண்டி"மா மன்ற உறுப்பினர்கள் " இங்கே பார்றா, கமிஷனுக்கு அலையும் கவுன்சிலர் மாமா பயல்களுக்கு மா மன்ற உறுப்பினர்னு ஒரு பேரா.. சார், ஜனநாயகத்தில் மக்களின் தராதரத்திற்கு ஏற்ற ஆடசியாளர்கள் தான் அமைவார்கள்.. சுகாதார சீர்கேட்டை சுட்டிக் காட்டினால் பத்திரிக்கை கூட நாற ஆரம்பிக்கும். குப்பைகளை நல்ல நீர் உள்ள ஏரியில் கொட்டும் ஒரு அரசு அமைப்பை வளர்த்து வைத்திருக்கிறோம்.. இதிலிருந்தே தெரியவில்லையா நமது அழிவு எவ்வளவு அருகில் உள்ளது என்று....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X