தமிழகத்தில், கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கொடூர குற்றங்களில் ஈடுபடும் கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை சுட்டுத் தள்ளும்படி, போலீசாருக்கு உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, போலீஸ் துறையை தன் வசம் வைத்துள்ளார். சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் குற்றங்களை குறைக்க, உள்துறை செயலர், டி.ஜி.பி., மாநகர கமிஷனர்கள் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி., உள்ளிட்ட போலீஸ்
அதிகாரிகளுக்கு, அதிரடி உத்தரவுகளை பிறப் பித்து வருகிறார்.
எனினும், குற்றங்களை கட்டுப்படுத்த முடியா மல் போலீசார் திணறும் போக்கு நீடிக்கிறது. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர், முதியவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன.
பட்டப்பகலில்...: கொடூர குற்றங்களில் ஈடுபடும் கூலிப்படையினர், ரவுடிகள் அச்சமின்றி,ஆடு களை வெட்டுவது போல மனித உயிர்களை பலி வாங்கி வருகின்றனர். ஜாதி மற்றும் மதக் கலவரங்கள் இல்லை என்றாலும், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில், பட்டப் பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில்,
தலித் வாலிபர் சங்கர்
போன்றோர் வெட்டிச் சாய்க்கப்படும் அளவுக்கு, கவுரவ கொலைகள் தொடர்கின்றன.
ஜூன்,
15ல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பள்ளி ஆசிரியை பார்வதியிடம் செயின்
பறித்த, கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற, தலைமை காவலர் முனுசாமி கத்தியால்
குத்தி கொடூரமாக கொல்லப்பட்டார்.
வரவேற்பு: அவரது
குடும்பத்தாருக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியுதவி; மகளுக்கு மதுரை அரசு
மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் என,முதல்வர் அறிவித்து இருப்பதை எல்லாரும் வரவேற்கின்றனர்.ஆனால், இதேபோன்று அவர் எத்தனை பேருக்கு, நிதியுதவி அறிவிக்க இயலும். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, குற்றங்களை குறைக்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
தலைநகர் சென்னையில், வழக்கறிஞர்கள் முருகன், ரவி என, அடுத்தடுத்து கொலை சம்பவங்கள், கூலிப்படையினரால் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம், சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், காலை, 6:30 மணிக்கு, பெண் பொறியாளர் சுவாதி, 24, மர்ம நபரால் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம், மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, சென்னை, ராயப்பேட்டையில், முதல் கணவனை பிரிந்து, தன்னை நம்பி வந்த பாண்டியம்மாள், 38 மற்றும் அவரது மூன்று மகள்களை, சின்னராஜ், 35, என்பவன் கொடூரமாக கொன்றதுடன், பிணத்துடன் உறவு கொண்டு, கற்பழிப்பு நாடகமாடிய சம்பவமும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
போலீசாரை தாக்க முயன்றால்...: போலீசார்
எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து, உயரதி காரிகள் கூறியதாவது: சென்னை போன்ற மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில், செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்து வது சிரமம். மேலும், சமீபத்திய கொலைகளை ஆய்வு செய்த போது, குடும்பப் பிரச்னை, குடி போதையில் தகராறு, கள்ளக்காதல், காதல் பிரச்னை போன்ற காரணங்களால், இவை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆள் கடத்தல் சம்பவங்களும் அப்படியே. குற்ற வாளிகளும் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.எனினும், மாவட்ட வாரியாக, ரவுடிகள், கூலிப்படையினர், செயின் பறிப்பு குற்றவாளிகள், 'பீரோ புல்லிங்' போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் பற்றி, புகைப்படத்துடன் கூடிய பட்டியல் தயாரித்து வருகிறோம்.
சிறையில் உள்ள ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் ஜாமினில் வெளியே வந்துள்ள ரவுடிகள், அவர்களின் கூட்டாளிகள் நடமாட்டம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கும் பணியும் முழு வீச்சில் நடக்கிறது.
கொடூர குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை கைது செய்யவும்; அந்த நடவடிக்கையின் போது, போலீசாரை அவர்கள் தாக்க முயன்றால், சுட்டுத் தள்ளவும் உத்தர விடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
161 ரவுடிகள் கைது!:சென்னையில், அடுத் தடுத்து கொலை சம்பவங்கள் தொடர்வதால், இரண்டு நாட்களாக, போலீசார் அதிரடி நடவடிக் கையில் இறங்கி உள்ளனர். நேற்று வரை, 161 ரவுடிகளை கைது செய்துள்ளனர். தலைமறை வாகி உள்ள ரவுடிகளை பிடிக்கவும், போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள் ளார்.
- நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (131)
Reply
Reply
Reply