பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
புதுமை
நகர்ப்புற மேம்பாட்டுக்காக மாவட்ட குழுக்கள் !
மக்கள் பங்களிப்பை அதிகரிக்க அரசு திட்டம்

நகர்ப்புற மேம்பாட்டுக்காக, மாவட்ட அளவிலான ஆலோசனை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றுக்கு, அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த, மூத்த எம்.பி., தலைமை வகிப்பார்.நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களில், அந்தந்த பகுதி மக்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென, மத்திய அரசு விரும்புகிறது.

நகர்ப்புற மேம்பாடு, மாவட்ட குழுக்கள்,மக்கள் பங்களிப்பு , அரசு திட்டம்

இதற்காக, டி.எல்.ஏ.எம்.சி., எனப்படும் மாவட்ட அளவிலான ஆலோசனை மற்றும் கண் காணிப்பு குழுக்கள் அமைக்கும் திட்டத்துக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஒப்புதல் அளித்துள்ளார்.

மாவட்ட அளவிலான...இக்குழுவில் இடம் பெறும் உறுப்பினர்கள், நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கான ஆலோசனைகள் அளிப்பர்; மேலும், அத்திட்டங்கள் செயல் படுத்தப் படு வதை கண்காணிப்பர். இதனால், 'மாவட்ட அளவிலான திட்டங்கள், அப்பகுதி மக்களின் உறுதுணையுடன், அவர்களுக்கு ஏற்ற வகையில் நிறைவேற்றப்படும்' என, மத்திய அரசு கருதுகிறது. டி.எல்.ஏ.எம்.சி.,க்களுக்கு,

ஒவ்வொரு மாநிலத்தின், தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த,எம்.பி., தலைமை வகிப்பார்.

பயணப்படி இல்லை:
மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாடு, ஏற்கத்தக்க செலவில் வீடு கட்டுதல், வறுமை ஒழிப்பு போன்ற திட்டங்களை, இந்தியாவில் முதல் முறையாக, மாவட்ட அளவிலான குழுக் களால் கண்காணிக்கவும், அவற்றுக்கு ஆலோசனை கூறவும் வழிஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'இக்குழுக்களின் சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்க, எந்த உறுப்பினருக்கும் பயணப்படி அல்லது தினப்படி வழங்கப்படாது' என, தகவல்கள் கூறுகின்றன.

கண்காணிக்கப்படும் திட்டங்கள்?:
* டி.எல்.ஏ.எம்.சி., எனப்படும் மாவட்ட அளவிலான ஆலோசனை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பில் கொண்டு வரப்படவுள்ள மத்திய அரசு திட்டங்கள்:
* 'ஸ்வச் பாரத்' எனப்படும் துாய்மை இந்தியா திட்டம்
* 'அம்ருட்' எனப்படும், அடல் நகர புத்துணர்வூட்டல் மற்றும் உருமாற்ற திட்டம்; 'ஹிருதய்' எனப்படும், பாரம்பரிய நகர மேம்பாடு திட்டம்
* அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம்
* தீனதயாள் அந்த்யோதயா திட்டம்

குழு உருவாகும் முறை: ஒவ்வொரு மாநிலத்தி லும், மூத்த எம்.பி.,இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார். தவிர, ராஜ்யசபா, லோக்சபாவை சேர்ந்த தலா ஒரு எம்.பி., துணைத் தலைவர்களாகச் செயல்படுவர்.

மாவட்ட ஆலோசனை மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களாக, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த

Advertisement

அனைத்து எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மேயர்கள், நகர்ப்புற மேம்பாட்டு ஆணையங்களின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகள், பொது சுகா தாரத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், குடிநீர், கழிவு நீரகற்று வாரியங்களின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் நியமிக்கப்படுவர். மாவட்ட கலெக்டர் அல்லது மாநகராட்சி கமிஷனர், உறுப்பினர் செயலராக இருப்பார்.

'ரிப்போர்ட்' சமர்ப்பிக்கணும்!: மாவட்ட அளவிலான டி.எல்.ஏ.எம்.சி., குழுக்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது கூடி, விவாதிக்க வேண்டும். அக்காலக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஆண்டுதோறும், மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த நடவடிக்கைகள் குறித்த அறிக் கையை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு த்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
26-ஜூன்-201615:21:53 IST Report Abuse

K.Sugavanamபயணப் படி,தினப்படி கிடையாது.. சூப்பர் ஜி.. தன்னார்வர்களுக்கு நல்ல மதிப்பு கிட்டும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-ஜூன்-201607:34:14 IST Report Abuse

Kasimani Baskaranமக்களின் பங்களிப்பை உறுதி செய்தால் எந்தத்திட்டமும் நிச்சயம் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X