'தி.மு.க., தலைவர் யார்? என, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா எழுப்பிய கேள்விக்கு, சபையிலேயே பதிலடி கொடுக்காதது, கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் மீது, கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், பெரும் விவாதம் நடந்தது. 'கச்சத்தீவை, இலங்கையிடம் தாரை வார்க்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி தான் காரணம்' என, அ.தி.மு.க., சட்டசபை உறுப்பினர்கள் பேச ஆரம்பித்ததில் இருந்து, தி.மு.க.,வினர், சபையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சபையில் கடும் கூச்சல் - குழப்பம் ஏற்பட்டது.
குற்றச்சாட்டு: இருந்தபோதும், அ.தி.மு.க., வினர் தொடர்ந்து, இந்த பிரச்னையை எழுப்பி கொண்டே இருந்தனர். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, இறுதியாக உரையாற்றிய முதல்
வர்ஜெயலலிதாவும், கச்சத்தீவு விவகாரத்தில்,
கருணாநிதியை குற்றஞ்சாட்டி பேசினார். இதற்கு தி.மு.க.,வினர் கடும்
எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்து விட்டனர். அந்த சமயத்தில்
ஜெயலலிதா, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார்.
'நான்கேட்கும் கேள்விகளுக்கு, சபையில் பதில் சொல்வதற்கு, தி.மு.க.,வின் தலைவர் யார் என்ற குழப்பம், அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. தி.மு.க., தலைவர் என, குறிப்பிடுன்ற கருணா நிதியா? அல்லது இங்கே எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்திருக்கிற தலைவரா?' என, ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். இந்த பிரச்னை தான், தி.மு.க.,வில் ஸ்டாலின் மீது கடும் அதிருப் தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க.,வின் உள்கட்சி பிரச்னைகள் குறித்தும், கோஷ்டி பிரச்னைகள் குறித்தும் கூட, சட்டசபை யில், ஜெயலலிதா குறிப்பிட்டு பேசினார். ஆனால், தி.மு.க., தரப்பில், இதற்கு பதிலளிக்க வேண்டிய ஸ்டாலின் அமைதியாக இருந்து விட்டார்.
குழப்பம்:தி.மு.க.,
உறுப்பினர்கள் வெளிநடப்பில் இருந்திருந்தாலும் கூட, வெளியில் வந்த
பிறகாவது, பத்திரிகையாளர்களிடம் இதற்கான பதிலை, தி.மு.க., பொருளாளர்
ஸ்டாலின் தெரிவித்திருக்க வேண்டும். இதை செய்யாததால், தி.மு.க., தரப்பில்,
ஸ்டாலின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்ல; தேர்தல் நேரத்திலும் முதல்வ ராக கருணாநிதியை அறிவித்த பின்பும், ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்பது போல, அவர் ஆதரவாளர்கள் குழப்பம் ஏற்படுத் தினர். இதனாலும் கூட, கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது.
இப்படி கட்சி தலைவர் பொறுப்புக்கும், முதல் வர் பொறுப்புக்கும், ஸ்டாலின் ஆசைப் படு வதா லேயும்; அவசரப்படுவதா லேயும் தான், கட்சிக்கு பின்னடைவு ஏற்படுகிறது. இதனால், கட்சியின் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலரும், ஸ்டாலின் மீது அதிருப்தி அடைந்து உள்ளனர்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (47)
Reply
Reply
Reply